Thursday, October 16, 2014
அண்ணா தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி திருப்பூர் மாநகர் மாவட்டம் முழுவதும் 17-வது நாளாக தொடர்ந்து யாகங்கள், பிரார்த்தனைகள், வேண்டுதல்கள் ஆகியவற்றை அண்ணா தி.மு.க.வினர் நடத்தி வருகின்றனர். இதில் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், மேயர் அ.விசாலாட்சி,துணை மேயர் சு.குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அண்ணா தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலையாக வேண்டி, திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.,சார்பில் மாநகர் மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் பார்க் ரோட்டில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா கோவிலில் கணபதி ஹோமம்,சுதர்சன ஹோமம், நவக்கிரஹ ஹோமம், நரசிம்ம ஹோமம் ஆகியவை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஆனந்தன் துணைவியார் லட்சுமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் மாவட்ட மகளிர் அணி சார்பில் காலேஜ் ரோட்டில் உள்ள ஐயப்பன் கோவிலில் மகளிர் அணி மாநில துணை செயலாளரும்,மேயருமான அ.விசாலாட்சி தலைமையில் 66 விளக்கு பூஜை மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது. மகளிர் அணி மாவட்ட செயலாளர் ஜெகதாம்பாள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் ஆறுகோம்பை வீதியில் 25 வது வார்டு கிளை கழகம் சார்பில் 60 அடி உயர கொண்டத்து வீரப்பத்திரகாளியம்மன் சிலைக்கு 1,000 லிட்டர் பாலாபிஷேகம் செய்து,10,008 எலுமிச்சம் பழங்களாலான மாலை அணிவித்து மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன் தலைமையில் அண்ணா தி.மு.க.வினர் வழிபட்டனர்.
திருப்பூர் பல்லடம் ரோடு, அருண் சில்க்ஸ் அருகில் உள்ள ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜையும், வழிபாடும் நடந்தது இந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் கிருத்திகா சோமசுந்தரம் தலைமை தாங்கினார். மகளிர் அணி மாநில துணை செயலாளரும், மேயருமான அ.விசாலாட்சி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர், துணை மேயர் சு.குணசேகரன் ஆகியோர் முன்னிலையில் 1 மணி நேரம் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
திருப்பூர் புறநகர் மாவட்டம், தெற்கு ஒன்றிய அண்ணா தி.மு.க.மற்றும் மங்கலம் ஊராட்சி கழகம் சார்பில் மங்கலம் பெருமாள் கோவிலில் இருந்து மலைக்கோவில் குழந்தை வேலாயுதசுவாமி கோலிவில் வரை பல்லடம் எம்.எல்.ஏ. பரமசிவம், மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், தெற்கு ஒன்றிய செயலாளர் சில்வர் வெங்கடாசலம், ஊராட்சி கழக செயலாளர் சுப்பிரமணியம் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் நடந்து சென்றனர். அங்கு
108 தேங்காய் உடைத்து ஜெயலலிதாவிற்காக 1 மணி நேரம் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
திருப்பூர் மாவட்டம். உடுமலைப்பேட்டையில்புறநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.அமைப்புசாரா ஓட்டுநர் அணி சார்பில் பொதுச்செயலளர் ஜெயலலிதா விடுதலையாக வேண்டி உடுமலை, பொள்ளாச்சி மெயின் ரோட்டில் உள்ள பூர்வீக பள்ளிவாசலில் அணிச்செயலாளர் ஏ.ஹக்கீம் எம்.சி தலைமையில் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. இந்த நிகழ்வில் உடுமலை நகர செயலாளர் கே.ஜி.சண்முகம், நகரமன்றத்தலைவர் கே.ஜி.எஸ்.ஷோபனா, நகரமன்றத் துணைத்தலைவர் கண்ணாயிரம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தொகுதியில், பிரசித்தி பெற்ற கொழுமம் அருள்மிகு தாண்டேஸ்வரர், அருள்மிகு கரிவரதராஜப்பெருமாள் அருள்மிகு நடராஜர் ஆகிய கோவில்களில் ஜெயலலிதா வழக்குகளிலிருந்து விடுதலையாக வேண்டி மடத்துக்குளம் தொகுதி எம்.எல்.ஏ.,சி.சண்முகவேலு தலைமையில் சென்று மண்சோறு சாப்பிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பேரவைச்செயலாளர் சிவலிங்கம், ஒன்றிய செயலாளர் அண்ணாத்துரை, அரசு வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், எஸ்.ராஜ்குமார், குமரலிங்கம் பேரூராட்சித் தலைவர் சிவக்குமார், பேரூர்கழகச் செயலாளர் வரதராஜ், மாவட்ட துணைச் செயலாளர் சுப்பிரமணியம், மடத்துக்குளம் பேரூராட்சித் தலைவர் பழனிச்சாமி, துணைத் தலைவர் தண்டபாணி, கொழுமம் ஊராட்சி மன்றத் தலைவர் இந்திராணி, நீலம்பூர் செல்வராஜ், கே.கே.ரவி, கணியூர் காஜாமைதீன் உள்ளிட்ட.நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த அனைத்து நிகழ்ச்சியிலும் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஜெ.ஆர்.ஜான், ராதா கிருஷ்ணன், கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவேல், வழக்கறிஞர் சுப்பிரமணியம், ஸ்டீபன் ராஜ்,சதீஷ், மண்டல தலைவர் கிருத்திகா சோமசுந்தரம், வடக்கு ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார், வளர்மதி கருணாகரன், சாகுல்ஹமீது, தாமோதரன்,பட்டுலிங்கம், பூளுவபட்டி பாலு, ஒன்றிய குழுத்தலைவர் சாமிநாதன், வேலம்பாளையம் அய்யாசாமி, வி.கே.பி.மணி,ஏ.கண்ணப்பன்,அட்லஸ் லோகநாதன், உஷா ரவிக்குமார், எஸ்பி.என்.பழனிச்சாமி, கலைமகள் கோபால்சாமி, ராஜேஷ்கண்ணா, டி.பா ர்த்திபன், ஹரிஹரசுதன், கண்ணபிரான், ரகுநாதன்,சடையப்பன், ரத்தினகுமார், பி.ராஜ்குமார், பெரிச்சிபாளையம் ஈஸ்வரமூர்த்தி, அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் கிருஷ்ணன், ராஜசேகர், பொன்னுசா மி,சரவணன், ராஜேந்திரன், ரவிக்குமார், குணசேகரன், சிவகுமார்,வேலுசாமி, கணேஷ், முருகன், கேபிள் பாலு, வினோத்குமார்,முபாரக், கு ணசேகர், விஸ்வநாதன், கவுன்சிலர்கள் முருகசாமி, செல்வம், கணேஷ், வசந்தாமணி, பிரியா சக்திவேல், பாலசுப்பிரமணியம், சின்னசாமி, ஈஸ்வரன், கனகராஜ், அமுதா வேலுமணி, பேபி தர்மலிங்கம், மற்றும் பாசறை நிர்வாகிகள் யுவராஜ் சரவணன், வி.எம்.கோகுல், லோகநாதன், பரமராஜன், சுரேந்தர், பொன்.அன்பரசன், நீ திராஜன், பங்க் என்.ரமேஷ், பேபி பழனிசாமி, என்.சரவணன், தலைமை கழக பேச்சாளர்கள் முகவை கண்ணன், டி.ஏ.பாலகிருஷ்ணன், தீக்கனல் விஜயகுமார், மதுரபாரதி உள்ளிட்டவர்களும் , பாஸ் என்கிற பாஸ்கரன், வே.சரவணன், பஸ் ஸ்டாண்ட் சந்திரன், வாசுதேவன், சீனிவாசன், முன்னால் கவுன்சிலர் சு.கேசவன்,ருக்குமணி, ராஜகோபால், மகளிர் அணி நிர்வாகிகள் கோமதி சம்பத், சுந்தராம்பாள் கேசவன்,ரசூல்மும்தாஜ் உள்பட பலர் லந்து கொண்டனர்.
திருப்பூரில் டாஸ்மாக் மதுபானக் கடைக்கு பூட்டுப் போட பெண்கள் கோபாவேச போராட்டம் நடத்தினர்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில மாநாட்டு முடிவுப்படி திருப்பூரில் செவ்வாயன்று காலேஜ் ரோடு சந்திரகாவி மாநகராட்சி பள்ளிக்கூடம் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்குப் பூட்டுப் போடும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி டாஸ்மாக் கடைக்கு முன்பாக மாதர் சங்கத்தைச் சேர்ந்த பெண்கள் காலையிலேயே அணிதிரண்டனர். இந்த போராட்ட அறிவிப்பதைத் தொடர்ந்து காவல் துறையின் மாநகர துணை ஆணையர் திருநாவுக்கரசு தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். பெண்கள் மதுபான போதையால் ஏற்படும் பாதிப்புகளை கூறியபடி கடையை மூட வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
இந்த போராட்டத்துக்கு மாதர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.மைதிலி தலைமை வகித்தார். மாநகரச் செயலாளர் செல்வி, துணைச் செயலாளர்கள் தேவி, சுதா, பொருளாளர் நிர்மலா, மாநகரக்குழு உறுப்பினர்கள் சுனிதா, பிந்து, சுமதி, அம்சவள்ளி உள்பட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
மாதர் சங்கப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் வை.ஆனந்தன், மாவட்டச் செயலாளர் ச.நந்தகோபால், வடக்கு மாநகரச் செயலாளர் எம்.ஜீவானந்தம் ஆகியோர் தலைமையில் இளைஞர்களும் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
காவல் துறையினரின் தடுப்பு அரணைத் தாண்டி மதுபானக் கடைக்குப் பூட்டுப் போடுவதற்காக முழக்கமிட்டபடி மாதர் சங்க நிர்வாகிகள் கடை நுழைவாயில் பகுதியில் புகுந்தனர். உடனடியாக காவல் துறையினர் திரண்டு அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை வாகனத்தில் ஏற்றி காவிரியம்மாள் திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர்.
திருப்பூர் வடக்கு மாநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 18 கிளைகளுக்கு மாநாடுகள் நடத்தப்பட்டு கிளைச் செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கிளைச் செயலாளர்கள் விபரம் வருமாறு: எஸ்.வி.காலனி - செல்வநாதன், சரளைக்காடு (மாதர்) - சுமதி, எம்ஜிஆர் நகர் - துரைசாமி, முருகானந்தபுரம் மாதர் - ஈ.வளர்மதி, மின்வாரிய அரங்கம் - நாகராசன், முருகானந்தபுரம் - சுகுமார், தியாகி பழனிசாமி நகர் 1 - துரைசாமி, கவுண்டநாயக்கன்பாளையம் - என்.வேலுச்சாமி, திருமலைநகர் - டி.எம்.எல். ஆறுமுகம், நெசவாளர் காலனி - மணி, செல்வலட்சுமிநகர் - அம்சவேணி, எம்.எஸ்.நகர் மாதர் - மரியசிசிலியா, எம்.எஸ்.நகர் - ஈ.பி.ஜெயகிருஷ்ணன், அம்பேத்கர் நகர் 1 - செல்வம், அம்பேத்கர் நகர் 2 - கனகராஜூ, அம்பேத்கர் நகர் 3 - ஆனந்தன், ரங்கநாதபுரம் - நந்தகோபால், பாப்பநாயக்கன்பாளையம் - பி.மனோகரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இம்மாநாடுகளில் மாநகரக்குழுச் செயலாளர் என்.கோபாலகிருஷ்ணன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.முருகேசன், ஆர்.ஈஸ்வரன், ஆர்.மைதிலி, எம்.சந்திரன், மாநகரக்குழு உறுப்பினர்கள் டி.குமார், த.நாகராஜன், ஈ.பி.ஜெயகிருஷ்ணன், கே.நாகராஜன், வை.ஆனந்தன், பி.ஆர்.கணேசன், பா.சௌந்தரராசன், ஒய்.அன்பு, எஸ்.ராஜேந்திரன், மனோகரன் ஆகியோர் பங்கேற்றனர்.
திருப்பூரில் பயணிகளிடம் அரசு விதிமுறைக்கு மாறாக கூடுதல் கட்டணம் வசூலிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக நி்ர்வாகத்தைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
திருப்பூரில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்படும் நகர, புறநகரப் பேருந்துகள் அனைத்தும் எல்.எஸ்.எஸ்., எக்ஸ்பிரஸ் என அறிவித்து சாதாரண பேருந்துகளை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்த பேருந்துகளிலும் அரசு நிர்ணயித்துள்ள கட்டணங்களுக்கு மாறாக, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இது தொடர்பாக தமிழக முதல்வருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் புகார் கடிதம் கொடுக்கப்பட்டது. இருப்பினும் விதிமுறைக்குப் புறம்பான கட்டண உயர்வை கைவிட போக்குவரத்து நிர்வாகம் தயாராக இல்லை. வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் கோரியதிலும் சாமானியப் பேருந்துகளுக்கு மாறாக விரைவுப் பேருந்துகள் இயக்க அனுமதி அளிக்கவில்லை என்ற விபரமும் தெரியவந்தது.
எனவே எந்த வகையிலும் நியாயம் இல்லாத வகையில், திருப்பூரில் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்களிடம் பகற்கொள்ளை போல கூடுதல் கட்டணம் வசூலிப்பதைக் கைவிட வேண்டும். அரசு விதிமுறைப்படி சாதாரண பேருந்துகளுக்கான கட்டணம் வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
புதன்கிழமை மாலை திருப்பூர் அவிநாசி சாலையில் வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அலுவலகம் முன்பாக இந்த போராட்டம் நடைபெறுகிறது. இதில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் எம்.எல்.ஏ., மாவட்டக்குழுச் செயலாளர் கே.காமராஜ் ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்ற உள்ளனர். கட்சி அணியினர், பேருந்து பயனாளிகள் பெருந்திரளாகப் பங்கேற்கின்றனர்.
தமிழகத்தில் முடக்கி வைக்கப்பட்டுள்ள அமைப்புசாராத் தொழிலாளர் நலவாரியப் பணிகளை தொழிற்சங்கங்கள் மூலம் உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க திருப்பூரில் அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டம் வலியுறுத்தி உள்ளது.
அமைப்புசாரா மற்றும் கட்டுமானத் தொழிறசங்கங்களின் கூட்டமைப்புக் கூட்டம் பி.முத்துசாமி (சிஐடியு) தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எம்.சந்திரன், டி.குமார், பி.பாலன், வி.சண்முகம் (சிஐடியு), என்.சேகர், எஸ்.சங்கர், சி.தண்டபாணி (ஏஐடியுசி), காளியப்பன், முத்துசாமி, சண்முகசுந்தரம் (எச்எம்எஸ்), சீனிவாசன், நாரயணசாமி (எல்பிஎப்), செ.முத்துக்குமாரசாமி (எம்எல்எப்), செந்தில் (பிஎம்எஸ்), ராஜேந்திரன் (ஐஎன்டியுசி) ஆகியோர் பங்கேற்றனர்.
தொழிலாளர் நலனைப் பாதுகாப்பதற்காகவே தொழிற்சங்கங்கள் அங்கீகரிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. ஆனால் தமிழகத்தில் தொழிற்சங்க உரிமையைப் பறிக்கும் நடவடிக்கையை மாநில அரசு செய்து வருகிறது. நலவாரிய பணிகளில் தொழிற்சங்கங்கள் பங்கேற்பை மறுக்கும் போக்கை கைவிட வேண்டும். நலவாரிய பணிக்காக தொழிலாளி ஏதேனும் ஒரு முறை தொழிலாளர் துறை அலுவலகத்துக்கு வந்தால் போதும் என்று சட்டப் பேரவையில் அமைச்சர் அளித்த உறுதிமொழியை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
தொடர்ந்து தொழிற்சங்கங்களை நலவாரியப் பணிகளில் மறுக்கும் நலவாரிய அதிகாரிகளுக்கு இக்கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தொழிலாளர் பதிவு புதுப்பித்தல், பணப்பயன் ஆகியவற்றிற்காக தொழிலாளர்களை அலைக்கழிக்கக் கூடாது. அவர்களது விண்ணப்பங்களை தொழிற்சங்கங்களிடமே பெற வேண்டும்.
அமைப்புசாரா மற்றும் கட்டுமான நலவாரியத்தில் கடந்த ஏழெட்டு மாதங்களாக பணப்பயன் கேட்டு விண்ணப்பித்துள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக உடனடியாக காலதாமதம் இல்லாமல் அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும்.
கட்டுமானத் தொழிலாளர் விபத்து மரண இழப்பீட்டு நிதி ரூ.5 லட்சம் வழங்குவதைப் போல் அனைத்து அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும். பதிவு செய்யும் தொழிலாளர்களுக்கு அட்டை வழங்கப்படாமல் நிறுத்தி வைத்துள்ளனர். உடனடியாக பதிவு அட்டை வழங்கிட வேண்டும்.
இந்த கோரிக்கைகள் தொடர்பாக நலவாரியத்திற்கு பொறுப்பான, சமூகப் பாதுகாப்புத் திட்ட அலுவலரையும், மாவட்ட ஆட்சியரையும், தொழிலாளர் துறை இணை ஆணையரையும் நேரில் சந்தித்து முறையிடுவது என்று இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதன் பிறகும் மேற்கண்ட பிரச்சனைகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்காவிட்டால் அடுத்த கட்டமாக அனைத்து தொழிற்சங்கங்களும் மறுபடியும் கூடிப் பேசி, தேவையான போராட்ட நடவடிக்கையில் ஈடுபடுவது என்றும் இந்த கூட்டத்தில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.
-------------
திருப்பூரில் அங்கம்மாள் முத்துசாமி நினைவு அறக்கட்டளை சார்பில் பெண் எழுத்தாளர்களுக்கான 2014ம் ஆண்டு இலக்கியப் பரிசுகள்
வழங்கப்பட்டன.
திருப்பூர் கே.ஆர்.சி. சிட்டி சென்டரில்
ஞாயிறன்று
நடைபெற்ற இந்த விழாவுக்கு அறக்கட்டளை நிர்வாகி அரிமா மு.ஜீவானந்தம் தலைமை ஏற்றார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.ஈஸ்வரன் வரவேற்றார்.
இதில் கவிதைப் பிரிவில் சாத்தான்களின் அந்தப்புரம் என்ற நூலுக்கு நறுமுகை தேவி முதல் பரிசும், பிரியங்களின் அந்தாதி என்ற நூலுக்கு இவள் பாரதி சிறப்புப் பரிசும், பறையொலி நூலுக்கு தனலட்சுமி பாஸ்கரன் பாராட்டுப் பரிசும் பெற்றனர். முதல் தொகுப்பிற்கான பரிசை இலைகள் பழுக்காத உலகம் நூலுக்கு ராமலட்சுமி பெற்றார்.
நாவல் பிரிவில் கால்புழுதி நூலுக்கு கனக தூரிகா முதல் பரிசு பெற்றார். திரிந்தலையும் திணைகள் நூலுக்கு ஜெயந்தி சங்கர் சிறப்புப் பரிசும், அஞ்சாங்கல் காலம் நூலுக்கு உமா மகேசுவரியும், ஐயாரப்பன் வீடு நூலுக்கு மைதிலி சம்பத் ஆகியோருக்கு பாராட்டுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
மொழிபெயர்ப்பு துறையில் மூடுபனிச்சிறையில் வண்ணங்கள் என்ற இந்தி மூலத்தை தமிழில் மொழி பெயர்த்த முனைவர் வி.பத்மாவதி முதல் பரிசு பெற்றார். ஹிமாலயம் மலையாள நூலை தமிழ் மொழி பெயர்த்த கே.விஜெயஸ்ரீக்கு சிறப்புப் பரிசும், அம்மா என்ற இந்தி மூலத்தை தமிழாக்கம் செய்த ராஜேஸ்வரி கோதண்டம் பாராட்டுப் பரிசும் பெற்றனர்.
சிறுகதைத் துறையில் பிருந்தாவும் இளம்பருவத்து ஆண்களும் நூலுக்கு அ.வெண்ணிலா முதல் பரிசும், பெண் வழிபாடு நூலுக்கு புதிய மாதவி சிறப்புப் பரிசும், ஜெயந்தி சங்கர் கதைகளுக்கு ஜெயந்தி சங்கர் பாராட்டுப் பரிசும் பெற்றனர். இத்துடன் முதல் முயற்சிக்கான பரிசுகள் கிராமத்து ராட்டினம் நூலுக்கு ஜி.மீனாட்சியும், ஆத்மாவின் கோலங்கள் நூலுக்கு ஜெயஸ்ரீ சங்கரும் பரிசு பெற்றனர்.
கட்டுரைப் பிரிவில் கரிகால் சோழன் நூலுக்கு நிரஞ்சனாதேவி முதல் பரிசும், தமிழக சிற்பங்களின் பெண் தொன்மம் நூலுக்கு முனைவர் நிர்மலா சிறப்புப் பரிசும், நகரத்தின் கதை நூலுக்கு சித்ரா ரமேஷ் பாராட்டுப் பரிசும், சிச்சுப்புறா நூலுக்கு செல்வி சுகானா வளர் எழுத்தாளரு்ககான ஊக்கப் பரிசும் பெற்றனர்.
Wednesday, October 15, 2014
On Wednesday, October 15, 2014 by Unknown in Tiruppur
கிராம சபை கூட்டம் -குடிமங்கலம் ஒன்றியம் ஆமந்தகடவு ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி வளாகம்தலைமை:கு கோவிந்தராஜ் , திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ,உடுமலை கோட்டாட்சியர் குணசேகரன் ,வட்டாட்சியர் சைபுதீன் ஊராட்சி மன்றத்தலைவர் மற்றும் திரளான பொது மக்கள் பங்கேற்றனர் .
Subscribe to:
Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...







