Thursday, October 23, 2014

சென்னை கே.கே.நகர் பங்காரு நாயுடு காலனியைச் சேர்ந்தவர் ஹிரா ராம் (54). அடகு கடை அதிபர். விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் ஹிரா ராம் அடகு கடை உள்ளது. செல்போன் ரீஜார்ஜும் செய்து வந்தார்.
நேற்று தீபாவளி தினம் என்றாலும் வழக்கம் போல் கடையை திறந்தார். நேற்று மாலை 5 மணியளவில் கடையில் இருந்தார். அப்போது அங்கு வந்த சிலர் ஒரு தங்க நகையை அடகு வைக்க வேண்டும் என்றனர். நகையை உரசிப் பார்த்து, எடை போட்டார். நகையை லாக்கரில் வைத்து விட்டு, பணத்தை எடுப்பதற்காக லாக்கர் அறைக்குள் சென்றார்.
அப்போது, அங்கு புகுந்த 2 பேர் ஹிரா ராமை திடீரென்று அரிவாளால் வெட்டினார்கள். அவர் மீது 4 வெட்டுகள் விழுந்தன. ரத்தம் பீறிட அவர் தரையில் சாய்த்தார். இதற்குள் அங்கு அடகு வைப்பது போல் நின்று கொண்டிருந்தவர்கள் அறைக்குள் புகுந்து லாக்கரில் இருந்த நகைகளை அள்ளிச் சென்றனர். 16 நகை பாக்ஸ்கள் காலியாக கிடந்தன. கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் 60 முதல் 100 பவுன் இருக்கலாம் என்று தெரிகிறது.
இரவு 8.30 மணியளவில் ஹிரா ராம் ரத்த வெள்ளத்தில் கடைக்குள் விழுந்து கிடப்பது அவரது மகன் ஆனந்த் மூலம் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது. தென்சென்னை போலீஸ் கூடுதல் கமிஷனர் (பொறுப்பு) திருஞானம், தி.நகர் துணை கமிஷனர் பகலவன், அசோக் நகர் உதவி கமிஷனர் ஆறுமுகம், கே.கே.நகர் இன்ஸ்பெக்டர் சந்துரு ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். கை ரேகை நிபுணர்கள் வந்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.
நகை கடை அதிபர் ஹிரா ராம் வடபழனியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை 6.30 மணிக்கு பரிதாபமாக உயிர் இழந்தார். 2½ கிலோ நகை – பணம் தப்பின. லாக்கரில் இருந்த பணம் மற்றும் 105 பைகளிலும், தனியாகவும் இருந்த 2½ கிலோ அடகு நகைகள் தப்பின. 3 ரீஜார்ஜ் செல்போன்கள், 3 அடகு சீட்டுகள் ஆகியவை கிடந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றினார்கள்.
அடகு கடைக்குள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பயன்படுத்தபப்டும் வெட்டரிவாள் கிடந்தது. அதை போலீசார் கைப்பற்றி உள்ளனர். எனவே அந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இந்த பகுதியில் தங்கி இருந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்களா? என்பது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது.
எப்போதும் மக்கள் நடமாட்டம் உள்ள ஆற்காடு சாலையில் இருக்கும் இந்த அடகு கடையில், அதன் அதிபரை வெட்டி விட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. நேற்று தீபாவளி தினம் என்பதால் ஆள் நடமாட்டம் குறைவாக இருந்த நேரம் பார்த்து இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. அந்த பகுதியை நன்கு அறிந்தவர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
செல்போன் ரீஜார்ஜ் செய்தவர்கள், ஹிரா ராம் போனில் பேசியவர்கள், நகை அடகு வைத்தவர்கள் பட்டியலை போலீசார் தயாரித்து வருகிறார்கள். கடையை நோட்டமிட்டு திட்டம் போட்டு கொள்ளையடித்தார்களா? அல்லது முன் விரோதத்தில் கொலை செய்து விட்டு அதை மறைப்பதற்காக நகைகளை அள்ளிச் சென்றார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் பட்டப்பகலில் நடந்துள்ள இந்த கொலை – கொள்ளை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொலையுண்ட ஹிரா ராம் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரது மனைவி ரமாபாய் (50). இவர்களுக்கு காஞ்சனா, மஞ்சு என்ற மகள்களும், ஆனந்த் (22) என்ற மகனும் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி விட்டது. ஆனந்த் சி.ஏ. படித்து வருகிறார். நேற்று மாலை 5.30 மணிக்கு ஆனந்த் மோட்டார்சைக்கிளில் தங்கள் அடகு கடை முன்பாக சென்றுள்ளார். அப்போது தந்தை ஹிரா ராம் உள்ளே இல்லை. எனவே வெளியே சென்று இருப்பார் என்று நினைத்துக் கொண்டார்.
இரவு 8.30 மணிக்கு வீடு திரும்பிய ஆனந்த் அப்போதும் தந்தை வீட்டுக்கு வராததால் அடகு கடைக்கு சென்றுள்ளார். அங்கு ‘லாக்கர்’ அறையில் ஹிரா ராம் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அலறி துடித்தார். உடனே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஹிரா ராம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். 5 மணிக்கே ஆனந்த் கடைக்குள் வந்து இருந்தால் கொள்ளையர்கள் சிக்கி இருக்கலாம். ஹிரா ராமும் உயிர் பிழைத்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
On Thursday, October 23, 2014 by Unknown in Thoothukudi
வேளச்சேரி திரவுபதி அம்மன் கோவில் தெருவில் திரவுபதி அம்மன் கோவிலில் தற்போது கோபுரம் கட்டும் பணி நடந்து வருகிறது.
இதற்காக கோவிலை சுற்றி தென்னை ஓலையால் கூரை வேயப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி அம்மன் கோவில் அருகில் சிறுவர்கள் பட்டாசு வெடித்தனர். அப்போது ராக்கெட் பட்டாசு ஒன்று பாய்ந்து சென்று கோவிலை சுற்றி கட்டப்பட்டிருந்த ஓலை கூரை மீது விழுந்தது. இதில் ஓலை தீப்பிடித்து எரிந்தது.
உடனடியாக அந்த பகுதி மக்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டனர். தீயணைப்பு படையினரும் விரைந்து வந்தனர். அவர்கள் தீயை அணைத்தனர். இதில் கோவிலை சுற்றி கட்டியிருந்த ஓலை கூரை முழுவதும் எரிந்து சாம்பலானது.
இம்மாநாடுகளில் தேர்வு செய்யப்பட்ட கிளைச் செயலாளர்கள் விபரம் வருமாறுச தியாகி பழனிச்சாமி நகர் 2வது கிளை - எஸ்.குணசேகரன், அண்ணாகாலனி - பி.ஆர்.கணேசன், குமரானந்தபுரம் தெற்கு - கணேசன், ராமையா காலனி - ரூபேஷ் மற்றும் மாவட்ட அலுவலகக் கிளைச் செயலாளர் - பா.சௌந்தரபாண்டியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இம்மாநாடுகளில் வடக்கு மாநகரச் செயலாளர் என்.கோபாலகிருஷ்ணன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.முருகேசன், ஆர்.மைதிலி, மாநகரக்குழு உறுப்பினர்கள் எஸ்.ராஜேந்திரன், வை.ஆனந்தன், பி.ஆர்.கணேசன், கே.நாகராஜன், டி.நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் தெற்கு மாநகருக்கு உட்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 42 கிளை மாநாடுகள் நடைபெற்று முடிந்தன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு மாநகருக்கு உட்பட்ட பின்வரும் கிளைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளர்கள் விபரம் வருமாறு:
கருவம்பாளையம் - ஆர்.சக்திவேல், கே.வி.ஆர்.நகர் - சி.முருகேசன், பாரப்பாளையம் - ஏ.லெனின்குமார், பூச்சக்காடு - ஜி.ஈஸ்வரமூர்த்தி, கல்லம்பாளையம் - கே.முத்துசாமி, கல்லம்பாளையம் மாதர் - எம்.தர்மேந்திரகுமார், ராயபுரம் மாதர் - எல்.பரிமளா, ராயபுரம் - லாரன்ஸ், ஸ்டேட் பேங்க் காலனி - வள்ளிநாயகம், ஆட்டோ - பொன்னுசாமி, டவுன் - கே.சுரேஷ், கலாஸ் - ஆர்.சதாசிவம், கடைவீதி - ஏ.முருகசாமி, பிள்ளையார் கோயில் - கிஷோர்குமார், மிஷின் வீதி - ஜி.செந்தில்குமார், வெங்கடேஸ்வரா நகர் - சையது முஸ்தபா, புஷ்பாநகர் - ரவிச்சந்திரன், கோட்டைக்காடு - ஆர்.பாலசுப்பிரமணியம், கரட்டாங்காடு - ஜி.கணேசன், கோபால்நகர் - ஆர்.விஸ்வநாதன், வெள்ளியங்காடு மேற்கு - சந்திரசேகர், வெள்ளியங்காடு கிழக்கு - கே.பொம்முதுரை, வெள்ளியங்காடு மாணவர் அரங்கம் - மாரிமுத்து, வெள்ளியங்காடு மாதர் - ராஜாத்தி, தென்னம்பாளையம் காலனி - ஜி.கதிர்வேல், பட்டுக்கோட்டையார்நகர் வடக்கு - டி.ஆறுக்குட்டி, பட்டுக்கோட்டையார் நகர் தெற்கு - சி.கிருஷ்ணன், பட்டுக்கோட்டையார் நகர் மாதர் - ஜி.சுமதி, தென்னம்பாளையம் மேற்கு - ஏ.சுப்பிரமணி, தென்னம்பாளையம் கிழக்கு - எஸ்.பழனிச்சாமி, காட்டுவளவு - தி.ஆ.சம்பத், பூம்புகார் மேற்கு - எஸ்.ராமகிருஷ்ணன், பூம்புகார் கிழக்கு - எஸ்.ஏ.பிரதீப்குமார், மார்க்கெட் - கார்த்திக், எம்.ஜி.புதூர் - மூர்த்தி, பெரியகடை வீதி - யூ.நாசர் அலி, துளசிராவ் வீதி - பாலாமணி, சிடிசி ஏ - டி.பிரபு, சிடிசி பி - எஸ்.நாகராஜன், ஜேடிசி - என்.சுப்பிரமணியம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இம்மாநாடுகளில் மாநகரச் செயலாளர் எம்.ராஜகோபால், மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.ஜெயபால், எஸ்.சுந்தரம், மாநகரக்குழு உறுப்பினர்கள் பி.பாலன், எஸ்.விஜயா, டி.ஆறுக்குட்டி, ஏ.சுப்பிரமணி, கே.பொம்முதுரை, ஜி.ஈஸ்வரமூர்த்தி, ஜி.கணேசன், பி.செல்லதுரை, ஏ.முருகசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நவம்பர் 16, 17 ஆகிய இரு நாட்கள் திருப்பூர் தெற்கு மாநகர மாநாடு நடத்தவும் முடிவு செய்யப்பட்டு இக்கிளை மாநாடுகளில் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
Tuesday, October 21, 2014
Subscribe to:
Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
.jpg)





