Saturday, November 01, 2014

On Saturday, November 01, 2014 by Unknown in ,    
எம்.குமாரசாமி கல்லூரிமாணவர்கள் சாதனை                                                             கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில், 2013-14ம் ஆண்டில் நடந்த அண்ணா பல்கலை தேர்வில், நான்கு தங்கப்பதக்கங்கள் உட்பட, 108 பல்கலை ரேங்க்குகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.இதில், இ.சி.இ., 21 பேர், இ.இ.இ., 24 பேர், இ.ஐ.இ., 8 பேர், ஐ.டி., 18 பேர், சி.எஸ்.இ., 12 பேர், மெக்கானிக்கல், 9 பேர், எம்.பி.ஏ., 3 பேர், எம்.சி.ஏ., 2 பேர், எம்.எஸ்இ., 2 பேர் என, 108 மாணவ, மாணவியர் பல்கலைக்கழக அளவில் ரேங்க் பெற்றனர்.
இவர்களில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையைச் சேர்ந்த ரம்யா, மின்னணுவியல் மற்றும் கருவியல் துறையைச் சேர்ந்த பிருந்தா, தகவல் தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்த பாக்யவினாயகி, முதுகலை மென்பொருள் துறையைச் சேர்ந்த ஹேமா ஆகிய நால்வரும் தங்கப்பதக்கம் பெற்றனர்.சாதனை மாணவர்களை எம்.குமாரசாமி கல்லூரி தலைவர் குமாரசாமி, செயலர் ராமகிருஷ்ணன், முதல்வர் வளவன், செயல் இயக்குனர் குப்புசாமி மற்றும் அனைத்துத்துறை தலைவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.                               
On Saturday, November 01, 2014 by Unknown in ,    

மழை காரணமாக ஜவுளி, கொசுவலை, பஸ்பாடி தொழில்கள் கடும் பாதிப்பு                                                                                             கரூர் பகுதியில் மழை காரணமாக ஜவுளி, கொசுவலை, பஸ் பாடி தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

 கரூரில் கைத்தறி, விசைத்தறி, கொசுவலைக் கூடங்கள், பஸ் கூட்டு கட்டும் தொழில்கள் நடைபெற்று வருகின்றன. ஆனாலும் சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை, பக்ரீத் என விடுமுறை நாட்கள் வந்ததால் தொழிற்சாலைகள் இயங்கவில்லை. இதனைடுத்து தீபாவளி பண்டிகைக்காக விடுமுறை விடப்பட்டது. தீபாவளி விடுமுறைக்காக தொழிலாளர்கள் வெளியூர் சென்றிருந்தனர். இவர்கள் கடந்த திங்கள் முதல் வேலைக்கு வர ஆரம்பித்தனர். ஆனால் 15 நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. நேற்று சற்று மழை குறைந்திருந்தது.

 இதுபோன்ற காரணங்களினால் கரூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் உற்பத்தி பாதிக்கப்பட்டது. மழை, வெள்ளம் காரணமாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்யாமல் இருந்தால் வரும் திங்கள் முதல் இந்த நிலைமை சீரடையும் என எதிர்பார்ப்பதாக தொழிலகங்களை நடத்துவோர் தெரிவித்தனர். நாள் ஒன்றுக்கு ஜவுளித் துறை சார்ந்த தொழிலகங்களிலும், கொசுவலைக்கூடங்களிலும் ரூ.ஒன்னரைக்கோடி அளவுக்கு உற்பத்தி செய்யப்படும். இதில் பாதிஅளவுக்குக்கூட உற்பத்தி நடைபெறவில்லை என அவர்கள் தெரிவித்தனர். 

 இதுகுறித்து ஜவுளி, கொசுவலை தொழில் நடத்துவோர் கூறுகையில், ஜீரோ டிஸ்சார்ஜ் முறையில் சாயக்கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யவேண்டும் என்கிற கட்டாயம் ஏற்பட்டதால் ஆர்ஓ சிஸ்டம் உபகரணங்களை நிறுவி சாயஆலைகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த முறையில் சாயக்கழிவுநீரை சுத்திகரிப்பு செய்வதற்கு கூடுதல் செலவு ஆகிறது. இம்முறையை பின்பற்றாமல் ஏற்கனவே இயங்கி வந்த 400க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் மூடப்பட்டன. புதிய முறைப்படி குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் ஆர்ஓ சிஸ்டம் முறையில் ஆலைகள் இயங்குகின்றன,. இப்பிரச்னையால் தடுமாறும் ஜவுளித்தொழில் உற்பத்தி இழப்பு காரணமாக மேலும் தடுமாற்றத்திற்கு ஆளாகி உள்ளது.

 இதேபோன்று கொசுவலை நூல் துணியை உற்பத்தி செய்யும் மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு பிரச்னை காரணமாக உற்பத்தி குறைந்து வரும் நிலையில் தற்போதைய பிரச்னைகளால் கொசுவலை உற்பத்தியும் பாதிக்கப்பட்டிருப்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். 
 வெளிநாடுகளில் ஆர்டர்களை பெறும்போது ஏற்றுமதி ஆர்டர்களுக்கான அட்வான்ஸ்தான் அன்றைய தேதியில் ஜவுளி வாங்குவோரால் இறுதி செய்யப்படுகிறது. ஆனால் ஏற்றுமதி ஆர்டர் பெறுவதை மையமாக வைத்துத்தான் ஜவுளி ஏற்றுமதி கணக்கிடப்படுகிறது. வெளிநாட்டு ஏற்றுமதி ஜவுளி உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்பட்ட மூலப்பொருட்களை பயன்படுத்த வேண்டியதிருக்கிறது. கொட்டேஷன் கொடுத்து சில மாதங்களுக்கு பிறகு டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரிந்தால் அன்றைய நிலவரப்படி அதிகவிலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. இதனால் ஜவுளி உற்பத்தி விலை அதிகமாகிறது  இதுபோன்று பல பிரச்னைகளை ஏற்றுமதியாளர்கள் சந்தித்து வருகின்றனர்.
On Saturday, November 01, 2014 by Unknown in ,    

மனைவி மாயம்: கணவன் புகார்                                                                                                         கரூர், : மனைவி மாயமானது குறித்து கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். 

கரூர் அடுத்த வெள்ளியணை அருகேயுள்ள சின்ன மூக்காணங்குறிச்சியை சேர்ந்த கணேசன் என்பவர் வெள்ளியணை காவல் நிலையத்தில் அளித்த புகாரில், கடந்த செப் 28ம்தேதி அன்று வீட்டில் இருந்த தனது மனைவி செல்லம்மாள் திடீரென மாயமானார். தொடர்ந்து இதுநாள் வரை வீடு திரும்பவில்லை என புகாரில் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், வெள்ளியணை போலீசார் வழக்குப் பதிந்து மாயமான செல்லம்மாளை தேடி வருகின்றனர்.         

On Saturday, November 01, 2014 by Unknown in ,    
வாக்காளர் பெயர் சேர்க்க  விழிப்புணர்வு பேரணி   :-                                      லாலாபேட்டை:வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் குறித்த விழிப்புணர்வு பேரணியில், கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.பேரணியை, குளித்தலை ஆர்.டி.ஓ., சித்திரைராஜ் பள்ளி வளாகத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார். கிருஷ்ணராயபுரம் (தனி) சட்டசபை தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணராயபுரம் பகுதியில், 1.1.2015 தகுதி நாளாகக் கொண்டு, 18 வயது பூர்த்தியடைந்த இளம் வாக்காளர்கள் புதிதாக பெயர் பட்டியலில் சேர்ப்பதற்காக கிருஷ்ணராயபுரம், தேர்தல் பிரிவு சார்பில், இந்த விழிப்புணர்வு பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.பேரணி முக்கிய பகுதிகளான, கரூர்- திருச்சி மெயின் ரோடு, பகவதியம்மன் கோவில் தெரு, அக்ரஹாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், விழிப்புணர்வு பதாகைகளுடன் ஊர்வலமாக சென்று மீண்டும் பள்ளி வளாகம் திரும்பினர்.
On Saturday, November 01, 2014 by Unknown in ,    
நபார்டு வங்கியின் கடன் இலக்கு... ரூ.2,745 கோடி  =   கரூர்       மாவட்ட கலெக்டர் தகவல்                                                                                                                                                கரூர்: ""கரூர் மாவட்டத்துக்கு, நபார்டு வங்கி மூலம், 2015-16ம் ஆண்டுக்கான கடன் இலக்கு, 2,745 கோடி ரூபாய்,'' என்று கரூர் கலெக்டர் ஜெயந்தி தெரிவித்தார்.நபார்டு வங்கியின் மூலம் வளம் சார்ந்த கடன் திட்டம், 2015-16ம் ஆண்டுக்கான ஆண்டு திட்ட அறிக்கை வெளியீட்டு கூட்டம், கரூர் கலெக்டர் ஜெயந்தி தலைமையில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.கரூர் மாவட்ட நபார்டு வங்கி பொது மேலாளர் பார்த்திபன் வரவேற்றார்.திட்ட அறிக்கையை வெளியிட்டு, கரூர் கலெக்டர் ஜெயந்தி பேசியதாவது:கரூர் மாவட்டத்தில், இந்தாண்டு பருவமழை பெய்துள்ளதால், விவசாயம் மற்றும் அதன் சார்ந்த வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். நபார்டு திட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பது போல், விவசாயிகளுக்கு தேவையான காலகட்டத்தில் ஆலோசனையுடன் நிதிஉதவி வழங்க வேண்டும். மிகவும் பின் தங்கியவர்களுக்கு, தனிநபர் கடன் அதிகளவில் வழங்க வேண்டும்.கரூர் மாவட்டத்துக்கான, 2015-16ம் ஆண்டு நபார்டு வங்கியின் திட்ட அறிக்கையில், 2,745 கோடி முன்னுரிமை கடன்களுக்கான இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
குறுகிய காலப்பயிர் கடனாக, 928 கோடியும், நீர் வளமேம்பாடு, விவசாய கருவிகள், கால்நடை வளர்ப்பு, தோட்டக்கலை பயிர் வளர்ப்பு, சூரிய மின்சக்தி உற்பத்தி, விவசாய கிடங்குகள் போன்றவைகளுக்கு நீண்டகால கடனாக, 460 கோடியும், பண்ணைசாரா பணிகளுக்காக, 906 கோடியும், இதர முன்னுரிமை கடன்களுக்காக, 451 கோடியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில், 1,300 கூட்டு பொறுப்புக் குழுக்கள் மூலமாக விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் நடத்த சிறு, குறு விவசாயிகளுக்கு தேவையான கடன்கள் அளிக்க வங்கிகள் முன்வர வேண்டும். உட்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பங்கள் பற்றிய கருத்துக்களும் திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நீர்வள மேம்பாட்டுக்காக காவிரி ஆற்று வாய்க்கால்களை செப்பனிடுதல், அவைகளின் குறுக்கே வரும் சிறு நடை பாலங்கள், மதகுகள், ஷட்டர்ஸ் ஆகியவைகளை சீரமைத்தல் அமராவதி, நங்காஞ்சியாறு மற்றும் குடகனாறுகளில் தேவையான இடங்களில் தடுப்பணைகள் கட்டுதல், ஏரிகள் சீரமைத்தல், நிலத்தடி நீரை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.கால்நடை வளர்ச்சிக்கு தேவையான கால்நடை மருத்துவமனைகள், ஆடு மற்றும் மாடுகள் விற்பனை செய்யப்படும் சந்தைகளுக்கான மேம்பாடு மற்றும் நெல், முருங்கை, வாழை விவசாயிகளுக்கு வேண்டிய ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிடங்கு மேம்பாடு வசதிகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாயனூரில் இருந்து, குளித்தலை வரை காவிரி ஆற்று வாய்க்கால்களின் குறுக்கே இருக்கும் பாலங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளையும் நபார்டு வங்கி மூலம் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டால், பல கிராம விவசாயிகளின் வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக இருக்கும்.
இவ்வாறு கலெக்டர் ஜெயந்தி பேசினார்.நிகழ்ச்சியில், ஐ.ஓ.பி., முதுநிலை மண்டல மேலாளர் நரசிம்மன், கனரா வங்கி மண்டல மேலாளர் மணிவண்ணன், முன்னோடி வங்கி மேலாளர் முருகேசன், கனரா வங்கி கிளை மேலாளர் பாபு, மகளிர் திட்ட இணை இயக்குனர் முகம்மது சகாபுதீன், புதுவாழ்வு திட்ட மேலாளர் ரூபவேல் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Friday, October 31, 2014

On Friday, October 31, 2014 by farook press in ,    
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை பணி குறித்த அனைத்துததுறை அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமையில் நடந்த இந்தகூட்டத்தில் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேரிடர் மேலாண்மை பணிகள் குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும் மழைக்காலம் தொடரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் எந்த நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுகொண்டார்..
திருப்பூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்தது தொடர்பாக வெள்ளம் ஏற்பட்டன. கடந்த 2013ம் ஆண்டு மாவட்டத்தில் 303 மி.மீ,. மட்டுமே; ஆனால் இந்த ஆண்டு 28.10.2014 வரை 650 மி.மீ.,  பெய்துள்ளது. இது கடந்த ஆண்டை  விட இருமடங்காகும். மேலும் மழைப்பொழிவு இன்னும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 திருப்பூர் மாவட்டத்தில் மழை காரணமாக காங்கயம்-தாராபுரம் ரோட்டில் முதலிபாளையம் பகுதியில் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. இதில் போக்குவரத்து முழுவதுமாக தடைபட்டது. இப்பாலம் நெடுஞ்சாலை  துறை மூலமாக சரி செய்யப்பட்டுள்ளது.கடந்த 1-ந்தேதி முதல் 25.10.2014 வரை மழையால்  சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ. 2500 வீதம் 15 ஆயிரம்  ரூபாயும்,முழுவதுமாக சேதமடைந்த 8 குடிசைகளுக்கு ரூ. 5 ஆயிரம் வீதம் 40 ஆயிரம் ரூபாய் என மொத்தம் ரூ. 55 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர், தாராபுரம்  அருகில் உள்ள அலங்கியம் காந்திநகரில் வசிக்கும் நாசுவம்புளியன் மகன் சுஜித் (வயது 12) என்பவர் கடந்த 27 -ந்தேதி அப்பகுதியில் தேங்கி நின்ற மழை நீரில் மூழ்கி இறந்தார். மேலும் அவினாசி, ராயம்பாளையம் வடிவேல் மகன் உதயகுமார் என்கிற மணிகண்டன் (வயது 10) ஓடைப்புரம்போக்கில் தேங்கி இருந்த மழை நீரில் கடந்த 28-ந்தேதி மூழ்கி இறந்தார். மழை நீரில் மூழ்கி இறந்த இரண்டு சிறுவர்களின் குடும்பத்துக்கு உடனடி நிவாரண உதவியாக தலா ரூ.1.50 லட்சம் என ரூ.3 லட்சம் உதவி தொகை வழங்கப்பட்டது. இத்தொகைக்கான காசோலையை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.. ஆனந்தன் வழங்கினார். அப்போது திருப்பூர் கலெக்டர் .ஜி.கோவிந்தராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் பாரிவேல் மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், திருப்பூர் சப்-கலெக்டர் செந்தில்ராஜன், துணை மேயர் சு.குணசேகரன், அவினாசி பேரூராட்சி மன்ற தலைவர் ஆர்.ஜெகதாம்பாள், மாமன்ற உறுப்பினர்கள் எம்.கண்ணப்பன்  சண்முகசுந்தரம்,தாசில்தார்கள் சைபுதீன், கண்ணன்,மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை பணியில் சிறப்பாக ஈடுபட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட வருவாய் அலுவலர் பாரிவேள் நன்றி தெரிவித்தார்.


On Friday, October 31, 2014 by farook press in ,    
பள்ளிகள் மற்றும் சாலையோரங்களில் 1000 மரக்கன்றுகள் நடும் விழா சட்டமன்ற உறுப்பினர் சி.சண்முகவேலு தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கொமரலிங்கம் பேரூராட்சித்தலைவர் கே.ஆர்.சிவக்குமார், பேரூர் கழகச் செயலாளர் கே.ஏ.வரதராஜ், செயல அலுவலர் தாஜ்நீஷா மற்றும் அண்ணா தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
On Friday, October 31, 2014 by farook press in ,    
சிக்கி உயிரிழந்த தாராபுரம் வட்டம் அலங்கியத்தைசேர்ந்த சிறுவன் சுஜீத்தின் பெற்றோர்க்கு மக்களின் முதல்வர் ஜெயலலிதா  அறிவுறைப்படி வனத்துறை அமைச்சர்எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலா 1.50 லட்சம் மதிப்புள்ள காசோலையை வழங்கினார்.அருகில்  மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், மாவட்ட ஊராட்சித்தலைவர் எம்.சண்முகம், துணைமேயர் சு.குணசேகரன் மாவட்டவருவாய் அலுவலர் பாரிவேல் ஆகியோர் உள்ளனர்.

On Friday, October 31, 2014 by farook press in ,    
107வது தேவர் ஜெயந்தி விழாவில் அவரது படத்திற்கு மாநகராட்சி துணை மேயர் சு.குணசேகரன் மாலை அணிவித்து 500 பேருக்கு அன்னதானம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி நிலைக்குழு தலைவர் அன்பகம் திருப்பதி, வளர்மதி கரு.ராமச்சந்திரதேவர், பிரிண்ட் பீல்டு தம்பி, மூகாம்பிகை தங்கவேல்,அருணகிரி தேவர், டைகர் சிவா, குப்பாண்டிதேவர், மாணிக்கம்,தமயநாதன், தினேஷ், சண்முகம் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.