Wednesday, March 04, 2020

On Wednesday, March 04, 2020 by Tamilnewstv in    
*திருச்சியில் உறையூர் பஞ்சவர்ண சுவாமி திருக்கோயிலில்  ருத்ர ஹோமம்  நடைபெற்றது* 




ருத்ர ஹோமம் என்றால் படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முத்தொழில்களைப் புரியும் மும்மூர்த்திகளுள் ஒருவர், சிவபெருமான். சிவபெருமானின் அம்சமே ருத்ர மூர்த்தி வடிவம் ஆகும். ரிக் வேதம், ருத்ரனை, “வல்லவருக்குள் வல்லவர்” எனப் போற்றுகிறது. இந்த சக்தி வாய்ந்த ருத்ரனுக்கு அர்ப்பணிக்கப்படும் ஹோமமே, ருத்ர ஹோமம் ஆகும்.


ருத்ரனை ஆராதிக்கும் வகையில் செய்யப்படும் இந்த ஹோமம், பயம் மற்றும் கவலையைப் போக்கி, பாதுகாப்பை அளிக்க வல்லது. ருத்ரனின் அருளால், இக பர இன்பங்களை அள்ளித் தரக் கூடியது. மேலும், நவக்கிரகங்கள் எனப்படும் சக்தி வாய்ந்த ஒன்பது கோள்களை சாந்தப்படுத்தி, அதன் மூலம் தோஷங்களை நிவர்த்தி செய்து, நன்மை தரும் பலன்களை அதிகரிப்பதற்காகவும், இது மேற்கொள்ளப்படுகின்றது. இப்படிப்பட்ட ஹோமத்தை சிவாச்சாரியார்கள் இன்று பஞ்சவர்ண சுவாமி திருக்கோயிலில் ஹோமம் வளர்த்தனர்
On Wednesday, March 04, 2020 by Tamilnewstv in    
திருச்சி: மலேசியா மற்றும் சார்ஜாவிலிருந்து வந்த 11 மாதக் குழந்தை உட்பட மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் அறிகுறி இருப்பதாக சந்தேகம் எழுந்ததால், அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் நோய் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதன் எதிரொலியாக இந்தியா வரும் அனைத்து விமானப் பயணிகளும் தீவிர மருத்துவ சோதனைக்குப் பின்னரே நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் திருச்சி விமான நிலையத்திலும் மருத்துவக்குழுவினர் பயணிகளைத் தீவிரமாக சோதனை செய்த பின்னரே அனுமதித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை மலேசியா மற்றும் சார்ஜாவிலிருந்து வந்த பயணிகளை மருத்துவக் குழுவினர் தீவிரமாக சோதனையிட்டனர். அப்போது மூன்று பேருக்கும் வைரஸ் தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து உடனடியாக அவர்கள் திருச்சி விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குப் பிரத்யேக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகம்மது இப்ராஹிம் என்ற 11 மாதக் குழந்தை, தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த சுந்தா் ராஜன், சேலத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் ஆகிய 3 பேர் மருத்துவமனையில் ஏற்கெனவே தயார் நிலையில் இருந்த கொரோனா வைரஸ் நோய்க்கான பிரத்யேக சிகிச்சைப் பிரிவில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இவர்களைத் தாக்கியிருப்பது கொரோனா வைரஸா? அல்லது வேறு ஏதும் வைரஸா? என்பதை கண்டறிவதற்காக ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இவர்கள் மூன்று பேரும் 24 மணி நேரமும் மருத்துவக் குழுவினரின் கண்காணிப்பில் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
On Wednesday, March 04, 2020 by Tamilnewstv in    
தஞ்சை காவல்துறையினருக்கு தொடர்ச்சியாக மிரட்டல் ஆடியோ   ELFIN சகோதரர்கள் இன்றைக்கு துபாயிலிருந்து அழகர்சாமி என்கிற ராஜா மிரட்டல் ஆடியோ தஞ்சை காவல்துறை தொடர்ச்சியாக நம்மீது  பொய்யான 


புகாரின் அடிப்படையில்  வழக்கு போட்டும் மேலும் வழக்கு போடுவதற்கு முயற்சி எடுத்து வருகிறார்கள் இதனை முறியடிக்கும் வகையில் காவல்துறை யாரை அழைத்தாலும் அதை ஆடியோ பதிவு செய்யுங்கள் 


நமது வழக்கறிஞரை அழைத்து சென்று விசாரணை நடத்தும் போது அதையும் வீடியோ பதிவு செய்யுங்கள் காவல்துறைக்கு தக்க தண்டனை வாங்கித் தருவோம் இன்று துபாயில் இருந்து மிரட்டல் ஆடியோ காவல்துறைக்கு எதிராக அழகர்சாமி என்கிற ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார் இதற்கு காவல்துறை அடுத்த நடவடிக்கையாக என்ன செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

(மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு RMWC  ஓரியண்ட் ஹைபர் மார்க்கெட் பார்ட்னர்கள் பாதுஷா மற்றும் இரண்டு நபர்கள் டின் நம்பர் 0002927268 அடுத்தது  வராக மணி பார்ட்னர்கள் ரமேஷ்குமார் விஸ்வநாதன் செட்டியார் டின்  நம்பர் 0003161010 & 0006833411 அடுத்தது 2017 எல்ஃபின் பார்ட்னர்கள் ரமேஷ்குமார்  & பாதுஷா    டின் நம்பர் 0003161010 & 0002927268 அடுத்தது 2019 ஸ்பேரோ  குளோபல் டிரேடிங் பார்ட்னர்கள் பால்ராஜ் அறிவுமணி பாபு பார்ட்னர்கள் பால்ராஜ் அறிவுமணி பாபு ஜிஎஸ்டி பின் நம்பர் 33ADSFS9169BIZN
 என்ற நிறுவனம் நடத்தி மக்களை ஏமாற்றி இதற்குரிய வழக்குகள் இன்னும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது )

இத்தனை நிறுவனங்கள் நடத்தி ஏமாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Tuesday, March 03, 2020

On Tuesday, March 03, 2020 by Tamilnewstv in    
திருச்சி


தமிழகத்தில் உள்ள மத்திய அரசு தொழில் நிறுவனங்களில் தமிழக  இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் -  அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநில செயலாளர் வலியுறுத்தல்
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு தொழில் நிறுவனங்களில் தமிழக  இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் -  அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநில செயலாளர் வலியுறுத்தல்

தமிழக அரசே எங்கே  எனது வேலை என கோரிக்கை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 21ம் தேதி முதல் மார்ச் 5ம் தேதி வரை 1 கோடி இளைஞர்களை  சந்தித்து கையெழுத்து இயக்கத்தை அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் நடத்தி வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி மாநகர் மாவட்ட மணிகண்ட ஒன்றியத்தின்
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம்
 சார்பில் திருச்சி  சோமரசம்பேட்டையில் மாவட்ட துணை தலைவர் ராஜா முகமது தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
கை எழுத்து
இயக்கத்தை அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநில செயலாளர் பாரதி துவக்கி வைத்து கண்டன உரையாற்றினார்.  கூட்டத்தில் திமுக மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆனந்த், விவசாய அணி செயலாளர் துரைப்பாண்டியன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செல்வகுமார்,
திமுக ஊராட்சி செயலாளர் பெரியசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அனைத்திந்திய  இளைஞர் பெருமன்ற மாநில செயலாளர் பாரதி

தமிழகத்தில் 96 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும், மேலும் வேலைவாய்ப்பற்ற காலங்களில் இளைஞர்களுக்கு நிவாரண நிதியாக ரூ 10 ஆயரம் வழங்க வேண்டும், மேலும் அரசாணை எண்
56ஐ ரத்து செய்ய வேண்டும்,
மத்திய அரசின் தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வங்கி, ரயில்வே துறை உள்ளிட்ட பணிகளில் தமிழக இளைகளுக்கு முன்னுரிமை வழங்க
வேண்டும் என கூறினார்


On Tuesday, March 03, 2020 by Tamilnewstv in    
சமூகப் பொறுப்புத் திட்டத்தில் தேர்ப்பேட்டை ஏரியைப் புனரமைத்தது கேட்டர்பில்லர்
                           

சமூகப் பொறுப்புத் திட்டத்தின் கீழ் ஓசூர் அருகிலுள்ள கிராமமக்களுக்காக தெர்பேட் ஏரியை கேட்டர்பில்லர் நிறுவனம் புனரமைத்துக்கொடுத்துள்ளது
                  

கேட்டர்பில்லர் இந்தியா நிறுவனத்தின் தொழிற்துறை மின்சாதனங்கள் தயாரிப்பு (IPSD) ஆலையின் அருகில் உள்ள கிராமப்பகுதியில் இந்த ஏரி அமைந்துள்ளது. கடந்த டிச.17, 2018ல் இந்தத்திட்டத்தை கேட்டர்பில்லர் நிறுவனம் தொடங்கியது. இந்தத்திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டுக்குப் பின்பு இந்த ஏரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளன.

எட்டு ஏக்கர் நிலம் மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் குடிமராமத்து செய்யப்பட்டு பாதைகள் மற்றும் இருக்கை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2014ம் ஆண்டு முதல் சமூகப்பொறுப்புத் திட்டத்தின் கீழ் பொது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்து வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது என்று ஐபிஎஸ்டி நிறுவனத்தின் இந்திய செயல்பாட்டுப் பிரிவு பொது மேலாளர் ரமேஷ் முத்துராமன் தெரிவித்தார். நகர்ப்புறங்களில் உள்ள பல்வேறு ஏரிகள் கடுமையாக மாசுபட்டுள்ளன என்றும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதிலும், வறட்சியை எதிர் கொள்வதிலும் ஏரிகள் மற்றும் குளங்களை புனரமைப்பது முக்கியமான நடவடிக்கை என நாங்கள் அறிவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

நாம் வாழும் மற்றும் பணிபுரியும் இடங்களின் சுற்று வட்டாரப் பகுதிகளில் சூழலியல் சமநிலையை நிலை நிறுத்து வதற்கான வாய்ப்பு என்பதால், தேர்ப்பேட்டை ஏரியை புனரமைப்பதற்கு முதலீடு செய்தது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

தரமான கல்வி, தூய்மையான குடிநீர், தூய்மை விழிப்புணர்வு மற்றும் சுகாதார கட்டமைப்புகள் ஆகிய வசதிகளை ஏற்படுத்தித்தருவது, ஆலைகள் அமைந்துள்ள சுற்றுவட்டார மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காக செலவிடுவது உள்ளிட்ட சமூகப்பணிகளை மேற்கொள்வதில் கேட்டர்பில்லர் நிறுவனத்திற்கு நீண்ட வரலாறு உண்டு.

இந்தத்திட்டத்தை துவங்கும் முன்னர் இந்த ஏரியின் சுத்திகரிக்கப்படாத நீர் பாசி படிந்து மிகவும் அழுக்காகக்காணப்பட்டது. இந்த நிலையில் ஏரி மற்றும் அதனைப் பயன்படுத்தும் பொது மக்களைப் பாதுகாக்கும் மற்றும் ஏரிப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் ஏற்படுவதைத் தடுக்கும் விதமாக பாதுகாப்பான, அழகான மற்றும் குப்பைக் கூளங்களற்ற பகுதியாக மாற்றும் திட்டத்தை கேட்டர்பில்லர் நிறுவனம் முன்னெடுத்தது.

குடிமராமத்துப் பணிகளுடன் ஏரி நீரும் சுத்திகரிக்கப்பட்டதை அடுத்து இந்த ஏரியின் நீர்த்தேக்கத்திறன் 61 மில்லியன் லிட்டராக அதிகரித்தது. அத்துடன் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்ததால் தற்போது இந்த ஏரி 1500 குடும்பங்களுக்கு பயன்பட்டு வருகிறது. கரைப்பகுதியில் மண் அரிப்பைத் தடுக்கும் விதமாககற்கள் பதிக்கப்பட்டு ஏரியைச் சுற்றிவலை அமைக்கப்பட்டுள்ளது. ஏரியைச் சுற்றிலும் விளக்குகளும் இருக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் 1930ம் ஆண்டிலிருந்தே கேட்டர்பில்லர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு 11,000த்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
On Tuesday, March 03, 2020 by Tamilnewstv in    
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலி கிராமத்தைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் இவர் அதிமுக எம்ஜிஆர் மன்ற ஒன்றிய செயலாளராக உள்ளார். மேலும் இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இன்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இவரது மளிகைக் கடையின் உள்ளே நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் வெடிகுண்டு வெடித்ததில் கடையில் இருந்த சோமசுந்தரத்தின் மனைவி புஷ்பா காயமடைந்தார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து புஷ்பாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து மண்ணச்சநல்லூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Monday, March 02, 2020

On Monday, March 02, 2020 by Tamilnewstv in    
திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் முழுவதும் அமைத்து தமிழகம் மற்றும் புதுச்சேரி பொது மக்களை மூளை சலவை செய்து ஏமாற்றி வரும் கோடிகோடியாக பணம் சம்பாதித்து வரும் நிறுவனம் எல்பின். இதன் உரிமையாளர்கள் அழகர்சாமி (எ) ராஜா, SRK என்னும் ரமேஷ் குமார்.


(மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு RMWC  ஓரியண்ட் ஹைபர் மார்க்கெட் பார்ட்னர்கள் பாதுஷா மற்றும் இரண்டு நபர்கள் டின் நம்பர் 0002927268 அடுத்தது  வராக மணி பார்ட்னர்கள் ரமேஷ்குமார் விஸ்வநாதன் செட்டியார் டின்  நம்பர் 0003161010 & 0006833411 அடுத்தது 2017 எல்ஃபின் பார்ட்னர்கள் ரமேஷ்குமார் & பாதுஷா    டின் நம்பர் 0003161010 & 0002927268 அடுத்தது 2019 ஸ்பேரோ  குளோபல் டிரேடிங் பார்ட்னர்கள் பால்ராஜ் அறிவுமணி பாபு  ஜிஎஸ்டி பின் நம்பர் 33ADSFS9169BIZN
 என்ற நிறுவனம் நடத்தி மக்களை ஏமாற்றி இதற்குரிய வழக்குகள் இன்னும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது )

இவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் பல மாவட்டங்களிலும் நிலுவையில் உள்ள காரணத்தினால் தொடர்ந்து பல பிரச்சினைகள் வருவதாலும் இலுப்பூர் சேர்ந்த
 ராஜப்பா தலைமையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் போலியான ஆவணங்களை தயாரித்து உண்மையான நிறுவனம் போல் ஜோடிப்பு செய்து அனுமதி பெற்று அவரின் கீழ் 60 லீடர் களை ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைத்து தங்கள் பல நிறுவனத்தை  வளர்க்க ( முறையான அனுமதியுடன் ? ) முயற்சி செய்து வருவதாக தகவல் பரவுகிறது. இந்நிலையில் நேற்று திருச்சியை சேர்ந்த  யோகா குருஜி ஒருவர் எல்பின் உரிமையாளர் அழகர்சாமி என்கிற ராஜாவை சென்னை அழைத்துச் சென்று டாக்டர் பட்டம் வாங்கி கொடுத்துள்ளார்'

இதற்காக அந்த குருஜிக்கு  பல லட்சங்கள் கை மாறியதாக தகவல் வருகிறது. பணம் கொடுத்து டாக்டர் பட்டம் வாங்குவது தாங்கள் தூய்மையானவர்கள் எங்கள் மீது எந்த தவறும் கிடையாது என மக்களை போலியாக நம்ப வைப்பது மட்டுமே காரணம் என தெரிகிறது. போலீசை இவர்கள் மிரட்டியும் காவல்துறையினர் இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பது வியப்பாக உள்ளது. மத்திய புலனாய்வு பிரிவு காவல்துறையினர் இவ்வழக்கை கையில் எடுத்தால் மட்டுமே பல லட்சம் மக்களின் பணத்தை மீட்க முடியும். இல்லையென்றால் பல மக்களின் உயிர் தான் பரிதாபமாக பறிபோகும்.

தமிழகம் முழுவதும் பல்வேறு கிளைகள் நிறுவனம் நடத்தி மோசடி செய்தவர்கள் என்பதும் மோசடி நிறுவனம் தற்போது வரை பல பொதுமக்களை ஏமாற்றி வருகிறது காவல்துறைக்கும் சவாலாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது


பின்குறிப்பு :-

 *ELFIN நிதி நிறுவன சகோதரர்கள் பல அடியாட்கள் மற்றும் கொலை சம்பவங்களில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு மாதாமாதம் பணம் கொடுத்து உதவி வருவதாகவும் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் எல்பின்  நிறுவனத்திற்கு எதிராக செய்தி வெளியிடுவோர்  மீதும் அதற்கு உறுதுணையாக இருக்கும் நபர்கள் மீதும் ராமஜெயம் கொலை வழக்கு போன்று ஆகிவிடும் என்று அவர்கள் சுற்றுவட்டாரத்தில் கூறி வருவதாக தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.*


 *தொடர்ச்சியாக ELFIN செய்தி வெளியிட்டதால் மர்ம நபர்களால் ( சபரிநாதன் என்ற நான் )தாக்கப்பட்டேன் ஆனால் இதுநாள் வரை காவல்துறை அதிகாரிகள் தாக்கிய மர்ம நபர்களை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது பொதுநலன் கருதி செய்தி வெளியிடுவோர் மீது இப்படி தாக்குதல் நடத்தினால் மக்களின் நிலை என்ன ஆவது*
On Monday, March 02, 2020 by Tamilnewstv in    
திருச்சி

மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து
மத்திய தொழிற்சங்கங்கத்தினர்   ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது.
அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலம் முன்பு சி ஐ.டி.யு மாவட்ட செயலாளர் ரெங்ராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்தில்
எல்ஐசி, பிஎச்இஎல், சேலம் ஸ்டீல், பாரத் பெட்ரோல் மற்றும்  ரயில்வே பல பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை கண்டித்தும், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது கண்டித்தும்,  வேலைவாய்ப்பு உருவாக்காமல் தொழில் நெருக்கடியை ஏற்படுத்தி கண்டித்தும்,  முறைசாரா தொழிலாளர்கள் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக திட்டங்களை அறிவிக்க வலியுறுத்தினர்.
இதில் தொ.மு.ச. மாவட்ட கவுன்சில் தலைவர் குணசேகரன், ஏ.ஐ.டி.யு.சி நிர்வாகி சுரேஷ், ஐ.என்.டி.யு.சி நிர்வாகி துனரராஜ் உட்பட 100க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு
பேட்டியளித்த
சி ஐ.டி.யு மாவட்ட செயலாளர்
ரெங்ராஜன்,

50 கோடி முறைசாரா தொழிலாளர்கள் பணிபுரியும் அவர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டங்கள் அறிவிக்காமல், வேலை வாய்ப்பு ஏற்படுத்தாமல் நெருக்கடிக்கு தீர்வு காணாமல் அறிவிக்கப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். காலகாலமாக தொழிலாளர்கள் அனுபவித்து வரும்
 46வகையான சட்டங்களை நாலு தொகுப்பாக 4 தொகுப்பாக மாற்றி ஒரு தொகுப்பை நிறைவேற்றி,
மேலும் வரும்  நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மீதமுள்ள மூன்று தொகுப்பை  நிறைவேற்ற உள்ளனர் அன்றைய தினம் இந்தியா முழுவதும் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் மத்திய அரசு அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடக்க உள்ளது நடக்க உள்ளது எனக் கூறினார்
On Monday, March 02, 2020 by Tamilnewstv in    
திருச்சி 
                

திருச்சியில் 
அங்கீகாரம் இல்லாத குடிநீர் ஆலைகளுக்கு
உரிய  உரிம அனுமதி கோரி குடிநீர் ஆலை உரிமையாளர்கள் ஆட்சியரிடத்தில்  மனு 


சட்டவிரோதமாக இயங்கும்  குடிநீர் ஆலைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், குடிநீர் எடுக்க அரசு அனுமதியளிக்கக் கோரி, குடிநீர் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் திருச்சி பொன்மலை ஜி கார்னர் இன் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் இயங்கிவரும் அனுமதியற்ற குடிநீர் ஆலைகள் தொடர்பான வழக்கில் 
உரிமம் பெறாத 
132ஆலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுளதாக அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

எனினும் சட்டவிரோத குடிநீர் ஆலைகளை மூட ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றி மார்ச் 3ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் இல்லை என்றால், மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

இதையடுத்து இன்று திருச்சி மாவட்டத்தில் 
அனுமதி பெறாமல் இயங்கிய 23 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு திருச்சி பொதுப்பணித்துறை நிலத்தடி நீர் பிரிவு 
அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் oறு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சிவராசுவிடம் அலை உரிமையாளர்கள் 100க்கு மேற்பட்டோர் சென்று உரிய அனுமதி வேண்டி மனு அளித்தனர்.

பேட்டி: ஹேமநாதன்
செயலாளர் 
அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனையாளர்கள் நலச் சங்கம்.