Tuesday, March 17, 2020

On Tuesday, March 17, 2020 by Tamilnewstv in    
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில்

 திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்டம் சார்பில் கோயில் வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது


ஸ்ரீ ராமானுஜர் சன்னதி ,சக்ரத்தாழ்வார் சன்னதி ,தாயார் சன்னதி ,பெருமாள் சன்னதி ஆகிய இடங்களில் பக்தர்கள் வரிசையில் செல்லும் வழியில் உள்ள இடங்கள் மற்றும் கம்பிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது

இது இன்று முதல் தினமும் மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை தெளிக்கப்படும் என்று மாநகராட்சி உதவி ஆணையர் தெரிவித்தார். இந் நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் ஜெயராமன், மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்டம் உதவி ஆணையர் வைத்தியநாதன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் டேவிட் முத்துராஜ் , சகாயராஜ் ,சுகாதார மேற்பார்வையாளர் ராஜா மற்றும் மாநகராட்சி துப்புறவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
On Tuesday, March 17, 2020 by Tamilnewstv in    
திருச்சி

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

திருச்சி கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்
தேவதானம் பகுதியை சேர்ந்த வாலிபர் செல்வமணி என்பவர் அதே பகுதியை சேர்ந்த 6 வயது  சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில்  செல்வமணி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் முன் நிறுத்தப்பட்டு பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

On Tuesday, March 17, 2020 by Tamilnewstv in    
சமயபுரம் மாரியம்மனுக்கு 2 வது பூச்சொரித்தல் விழா விமர்சியாக நடைபெற்றது..!

உலக புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. பழமையான இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசிமாதம் கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை 28 நாட்கள் பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது.

மார்ச் 15 ம் தேதியான நேற்று 2 வது வார பூச்சொரித்தல் விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. காலை முதல் அன்னதானங்கள் வழங்கப்பட்டது , மாலைமுதல் புஸ்ப பல்லாக்குகள் விமர்சியாக
மேலதாலம் முழங்க நடனமாடிபடி  பூக்களை எடுத்து சென்றனர்.

இந்த நாள்களில் மக்களின் நலனுக்காக ஈஸ்வரனை நோக்கி மாரியம்மன் பச்சைப்பட்டினி விரதமிருப்பதாக நம்பப்படுகிறது.

இந்த விரத காலத்தில் அம்மனுக்கு இளநீர், நீர்மோர், பானகம், துள்ளுமாவு மட்டுமே படைக்கப்படுகிறது.
On Tuesday, March 17, 2020 by Tamilnewstv in    
திருச்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஜான்சன் லிப்ட் நிறுவனம் சார்பில் நடந்த இந்த இரு சக்கர வாகன  பேரணியை மாநகர போக்குவரத்து உதவி ஆணையர் விக்னேஸ்வரன் தொடங்கி வைத்தார்.


இந்த பேரணி திருச்சி மத்திய பேருந்து நிலையம் வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானாவில் இருந்து தொடங்கி எம்ஜிஆர் சிலை ரவுண்டானா, அரசு மருத்துவமனை, புத்தூர் நால்ரோடு, தென்னூர் ஹை ரோடு வழியாக தில்லை நகரை சென்றடைந்தது. இந்த பேரணியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முன்னதாக சாலை விதிகளை மீற மாட்டோம் என்று அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

பேட்டி:
 ஜான்சன் நிறுவன திருச்சி கிளை மேலாளர் கமலக்கண்ணன்
On Tuesday, March 17, 2020 by Tamilnewstv in    
அந்தமானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அனைத்திந்திய சட்ட உரிமைகள் கழகம் சார்பில்

திருச்சியில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. திருச்சி கீழே புலிவார்டு ரோடில்  அமைப்பின் நிறுவன தலைவர் அந்தமான் சுப்பிரமணியன் இந்த தண்ணீர் பந்தலை திறந்து வைத்து ஏழை எளியவர்களுக்கு வழங்கினார். இளநீர், தர்பூசணி, மோர் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டது. முதலாவது ஆண்டாக இந்த தண்ணீர் பந்தல் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து கோடை காலம் முடியும் வரை தினமும் இந்த தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு மக்கள் தாகம் தீர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் சேகர், அமைப்பு செயலாளர் கோவிந்தராஜ், நிர்வாகிகள் காட்வின், முபாரக், சந்தோஷ் குமார், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் இந்த தண்ணீர் பந்தல் மூலம் கீழப்புலியூர் பகுதியைச் சேர்ந்த மக்கள் மற்றும் தொழிலாளர்கள் பயனடைந்தனர்.

Monday, March 16, 2020

On Monday, March 16, 2020 by Tamilnewstv in    
திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி பொதுமக்களை ஏமாற்றி பல நூறு கோடி சம்பாதித்து வரும் நிறுவனம் தான் எல்பின்
இந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் ராஜா என்னும் அழகர்சாமி , எஸ் ஆர் கே என்னும் ரமேஷ் குமார் ஆகிய இருவர் மீதும் ஒவ்வொரு மாவட்டத்திலும்  காவல்துறை குற்றப்பிரிவில்  பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தஞ்சையில் அனுமதியின்றி கூட்டம் நடத்திய லீடர்கள் கைது செய்யப்பட்டனர். காவல்துறை டிஎஸ்பியை மிரட்டி அந்த வழக்கை வாபஸ் பெற வைத்ததாக கூறி வருகின்றனர்.
தற்போது மதுரையிலும் வழக்கு பதிவு  செய்யாமல்  இருக்க காவல்துறை அதிகாரிகளிடம் பேசி சரி செய்து விட்டதாக அவர்கள் தரப்பில் கூறி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து மீண்டும் தமிழகம் முழுவதும் ELFIN
ஆலோசனை கூட்டம் நடத்த தயாராகி வருகின்றனர். முதலில் திருச்சியில் மாபெரும் கூட்டத்தை நடத்தி பின்னர் தமிழகம் முழுவதும் கூட்டம் நடத்த தயாராகி வருகின்றனர்.
எல்பின் நிறுவனத்தின் சார்பில் ஒன்று கொடுத்தால் மூன்று என்ற திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் தந்தால் 3 லட்சம், 3 லட்சம் தந்தால் 9 லட்சம், 10 லட்சம் தந்தா 30 லட்சம், ஒரு கோடி கொடுத்தால் 3 கோடி என்ற இந்த மாய வலையில் சிக்கிய பணம் கட்டியவர்களுக்கு  இதுவரை எந்த செக்கும் பாஸ் ஆகவில்லையாம். இதனால் தற்போது எல்பின்  நிறுவனத்திற்குள் தற்போது புகைச்சல் ஏற்பட்டு உள்ளதாக தகவல்.

தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு இவர்களது முகமூடியைக் கிழித்து எல்பின் இயக்குனர்கள் ராஜா என்னும் அழகர்சாமி  மற்றும் எஸ் ஆர் கே என்னும் ரமேஷ் குமார் அவர்களது கூட்டாளிகள்  பினாமிகள் ஆகியோர் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என பொதுமக்கள் ம்ற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு.
On Monday, March 16, 2020 by Tamilnewstv in    
திருச்சி மாவட்டம், உறையூர் காசிசெட்டித்தெருவை

சேர்ந்த சரவணகுமார்  என்பவர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு  அளித்தார் சில நாட்களுக்கு முன்பு நான் வளர்த்த ஆடுகளை  அடையாளம் தெரியாத நபர்கள் ஆடுகளை திருடி சென்றதாகவும் இது குறித்து  காவல் நிலையத்தில் புகார் செய்தும் Pending நிலையில் உள்ளது என்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள்  என்னுடைய ஆடுகளை கடத்தியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் சம்மந்தப்பட்ட உரிமையாளர்கூறியுள்ளனர்.
On Monday, March 16, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி துறையூர் கோவிந்தபுரம் பகுதி சார்ந்த மக்கள் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கியதில் முறைகேடு சேர்த்து நபர்களை நீக்கம் செய்து அளந்து கொடுத்தல் சம்பந்தமாக கிராம பொதுமக்கள் மனு அளித்தனர்


துறையூர் வட்டம் கோவிந்தபுரம் கிராம ஆதிதிராவிட மக்களுக்கு 1995 1996இல் ஆதிதிராவிடர் நலத்துறை இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கியதில் வெளியூர் நபர்கள் உள்ளவர்களுக்கு முறைகேடாக வழங்கியுள்ளனர் அதனால் அந்த ஊரில் வசித்து வரும் தாழ்த்தப்பட்ட இனத்தவர்களுக்கு 202 வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது மேற்படி அரசால் கொடுக்கப்பட்ட 202 பட்டாவில் சுமார் 50 நபர்களுக்கு வெளியூர் சார்ந்தவர்களாவர் முறைகேடாக பட்டா வழங்கப்பட்டுள்ளது இதனை கருத்தில்கொண்டு மாவட்ட ஆட்சியர் ஆதிதிராவிடர் நலம் கருதி துறையூர் கோவிந்தாபுரம் மக்களுக்கு முறையாக பட்டாவை நில அளவையும் செய்து தர வேண்டும் என்று மனு அளித்தனர்
On Monday, March 16, 2020 by Tamilnewstv in    
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா  குறித்து அரசு சார்பிலும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்படுகிறது.


இதைத் தொடர்ந்து சமூக அமைப்புகள் சார்பிலும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
 திருச்சி ஒயிட் ரோஸ் சமூக சேவை அமைப்பு, தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கம் ஆகியவை சார்பில் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
 இந்த அமைப்பு தலைவர் சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் யோகா குரு கிருஷ்ணகுமார், திருச்சி மாவட்ட பணத்தாள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரங்களை வழங்கி தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விளக்கங்களை அளித்தனர்.