Tuesday, March 24, 2020
On Tuesday, March 24, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மார்ச் 23
துபாய், சார்ஜா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஸ்கூட் விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த வெளிநாட்டினர்
12பெண்கள் உட்பட
22பேர் திருச்சி கள்ளிக்குடி சிறப்பு சுகாதார வளாகத்தில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களுக்கு தொடர் சிகிச்சை வந்த நிலையில், அனைவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என உறுதியானதையடுத்து தற்போது அவரவர் சொந்த ஊர்களுக்கு திரும்பினர்கள். தற்போது இயங்கி வரும் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் கொரோனா பாதித்தவர்கள் யாரும் இல்லை.
வெளிநாட்டில் இருந்து வந்த சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 22 பேர் வீடு திரும்பினர்.
துபாய், சார்ஜா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஸ்கூட் விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த வெளிநாட்டினர்
12பெண்கள் உட்பட
22பேர் திருச்சி கள்ளிக்குடி சிறப்பு சுகாதார வளாகத்தில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களுக்கு தொடர் சிகிச்சை வந்த நிலையில், அனைவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என உறுதியானதையடுத்து தற்போது அவரவர் சொந்த ஊர்களுக்கு திரும்பினர்கள். தற்போது இயங்கி வரும் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் கொரோனா பாதித்தவர்கள் யாரும் இல்லை.
Sunday, March 22, 2020
On Sunday, March 22, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதன் படி இன்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு நடைபெற்று வருகிறது.
கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்தும் வகையில் இந்த ஊரடங்கு இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது.
இந்த வகையில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனினும் வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை ஏற்றி வரும் விமானம் வந்து செல்கிறது.
இந்த வகையில் இன்று காலை சிங்கப்பூரில் இருந்து 163 பயணிகளும், சார்ஜாவில் இருந்து 136 பயணிகளும், துபாயில் இருந்து 86 பயணிகளும் திருச்சி வந்தனர். இதில் மொத்தம் 385 பயணிகளுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை நடைபெற்றது. இதில் 12 பெண்கள் உட்பட22 பேருக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தது.
இதையடுத்து அவர்கள் திருச்சி கள்ளிக்குடியில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக சிகிச்சை வார்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதற்கட்ட பரிசோதனை நடைபெற்றது. அதில் அவர்கள் யாருக்கும் அத்தகைய வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகவில்லை. எனினும் அதில் மலேசியாவிலிருந்து வந்த ஈரோட்டைச் சேர்ந்த ஒருவருக்கு மட்டும் வைரஸ் தாக்குதலுக்கான அறிகுறி இருப்பதாக சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்தும் வகையில் இந்த ஊரடங்கு இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது.
இந்த வகையில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனினும் வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை ஏற்றி வரும் விமானம் வந்து செல்கிறது.
இந்த வகையில் இன்று காலை சிங்கப்பூரில் இருந்து 163 பயணிகளும், சார்ஜாவில் இருந்து 136 பயணிகளும், துபாயில் இருந்து 86 பயணிகளும் திருச்சி வந்தனர். இதில் மொத்தம் 385 பயணிகளுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை நடைபெற்றது. இதில் 12 பெண்கள் உட்பட22 பேருக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தது.
On Sunday, March 22, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி: கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்துவதற்காக இன்று 22ஆம் தேதி சுய ஊரடங்கு உத்தரவுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார்.
மத்திய அரசும் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. இதை தொடர்ந்து மாநில அரசு சுய ஊரடங்கு கான ஏற்பாடுகளை செய்தது. இன்றைய தினம் அரசு போக்குவரத்து கழகங்களின் அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டது.
அதேபோல் ரயில்வே நிர்வாகமும் அனைத்து ரயில் இயக்கத்தையும் நிறுத்தியது. அனைத்து விமானங்களும் நிறுத்தப்பட்டன. திருச்சி மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், ஜங்ஷன் ரயில் நிலையம், திருச்சி சர்வதேச விமான நிலையம் ஆகியவை பயணிகள் யாரும் வராததால் முற்றிலும் வெறிச்சோடி காணப்பட்டது. காந்தி மார்க்கெட், வணிக வளாகங்கள் திரையரங்கங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன. சிறிய கடைகள் முதல் பெரிய அளவிலான கடைகள் வரை இன்று அடைக்கப்பட்டன. திருச்சி மாவட்டத்தில் உள்ள 96 திருமண மண்டபங்களில் இன்று பல்வேறு விசேஷங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த விசேஷங்களும் ஆட்சியரின் அறிவுரைப்படி குறிப்பிட்ட நேரத்திற்குள் நடத்தி முடிக்கப்பட்டது. இந்த விசேஷங்களுக்கும் குறைந்த அளவிலான விருந்தினர்கள் மட்டுமே வந்திருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இது தவிர திருச்சி மாநகரில் எந்நேரமும் பரபரப்பாக காணப்படும் புத்தூர் நால்ரோடு, தலைமை தபால் நிலைய சந்திப்பு, ஒத்தக்கடை சிக்னல், கண்டோன்மென்ட், என் எஸ் பி ரோடு, தில்லைநகர்,
சத்திரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டம் இன்றியும், வாகன போக்குவரத்து இன்றியும் வெறிச்சோடி காணப்பட்டது. லாரி, வேன், கார், ஆட்டோ போன்ற வாகனங்களும் இன்று ஓட வில்லை. இதனால் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன மக்கள் அதிக அளவில் கூடாத வகையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். முக்கிய இடங்களில் காவலர்கள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மத்திய அரசும் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. இதை தொடர்ந்து மாநில அரசு சுய ஊரடங்கு கான ஏற்பாடுகளை செய்தது. இன்றைய தினம் அரசு போக்குவரத்து கழகங்களின் அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டது.
Saturday, March 21, 2020
On Saturday, March 21, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
திருச்சி விமான நிலையத்தில் இருந்து கடந்த மார்ச் 8ஆம் தேதி முதல் வருகை தந்த வெளிநாட்டு பயணிகள் 3,400 பேருக்கு மருத்துவ குழுவினரால் விமான நிலையத்திலேயே பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 191 பேருக்கு சளி காய்ச்சல் இருமல் போன்ற அறிகுறி இருந்ததால் திருச்சி அரசு மருத்துவமனை மற்றும் கள்ளிக்குடி கொரோனா பிரத்யேக சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் நடத்தப்பட்டது. இதில் யாருக்கும் கொரோனா தாக்குதல் இல்லை என்பது ரத்த பரிசோதனை முடிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த வகையில் நேற்று துபாய், சார்ஜாவில் இருந்து வந்த 428 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 34 பேருக்கு சளி காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் கள்ளிக்குடி தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய 191 பேரும் தொடர்ந்து மருத்துவ குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். மருத்துவ குழுவினர் தடுப்பு நடவடிக்கையில் பாராட்டுக்குரிய வகையில் ஈடுபட்டு வருகிறார்கள். நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்ற சுய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு வாகனங்கள் உள்பட அரசுப் பேருந்துகளும் நாளை நிறுத்தப்படும். காய்கறி, பால் போன்ற அத்தியாவசிய வாகனங்கள் மட்டும் செல்ல தடை கிடையாது. பொதுமக்கள் சாலையில் தேவையற்று கூட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. அத்தியாவசிய சிகிச்சை தவிர வேறு எதற்காகவும் வெளியில் வர வேண்டாம். மருத்துவமனை, பொது இடங்களில் நாளை கூடுவதை தவிர்க்க வேண்டும். காவல்துறையினர், மருத்துவக் குழுவினர் நாளை பணியில் இருப்பார்கள்.
ஏற்கனவே கொரோனா ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளும் மையம் இந்தியாவிலேயே புனேயில் மட்டும்தான் இருந்தது. இதற்கு அடுத்தபடியாக கிங்ஸ் மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் ஐந்து இடங்களில் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 2 அமைக்க அரசு முடிவு செய்து உள்ளது. இதில் ஒன்று திருச்சி அரசு மருத்துவமனையில் அமைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நகர்ப்புறப் பகுதிகளில் கைகழுவும் விழிப்புணர்வு அதிக அளவில் உள்ளது. ஆனால் கிராமப்புற மக்களிடம் இது சற்று குறைவாக உள்ளது. மகளிர் சுய உதவி குழு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்களை பரவி மக்களை பீதி அடைய செய்யக் கூடாது. அவ்வாறு ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கொரோனா வைரஸ் நோய் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது.
இந்த வகையில் இந்தியாவில் இந்த வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
வெளிநாடுகளுக்கு செல்லும் பெரும்பாலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில்களிலும் சில சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான திரையரங்கம், மால்கள், ஜவுளிக்கடைகள், கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்டவற்றை இன்று 20ம் தேதி முதல் வரும் 31ஆம் தேதி வரை மூட உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இதில் எந்தெந்த கோவில்கள் மூடப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகியவை 20ம் தேதி முதல் 30ம் தேதி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
வழக்கம்போல பூஜைகள் நடைபெறும். ஆனால் பக்தர்கள் தரிசனம் கிடையாது என்ற அறிவிப்பும் வெளியாகியிருந்தது.
இதைத் தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை என்பதால் காலை முதல் பக்தர்கள் அருகில் உள்ள இதர கோவில்களுக்கு சென்றனர். ஆனால் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களும் பூட்டப்பட்டிருந்தது. முன்னறிவிப்பின்றி பூட்டப்பட்டு இருந்ததால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மக்கள் அதிகம் கூடுவதை தவிர்ப்பதற்காக கோவில்கள் மூடப்படுவது வரவேற்கத்தக்கது. ஆனால் முன்கூட்டியே அறிவித்து இருந்ததால் கோவில்களுக்கு வந்திருக்க மாட்டோம் என்று பக்தர்கள் புலம்பிக் கொண்டு சென்றனர்.
இந்த வகையில் திருச்சியில் உறையூர் வெக்காளியம்மன் கோவில், தென்னூர் உக்கிரமாகாளியம்மன் கோவில், உறையூர் நாச்சியார் கோவில், திருவானைக்காவல், மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவில் உள்பட அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சிறிய மற்றும் பெரிய கோவில்களும் இன்று காலை முதல் மூடப்பட்டிருந்தது.
இந்த வகையில் இந்தியாவில் இந்த வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
வழக்கம்போல பூஜைகள் நடைபெறும். ஆனால் பக்தர்கள் தரிசனம் கிடையாது என்ற அறிவிப்பும் வெளியாகியிருந்தது.
இதைத் தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை என்பதால் காலை முதல் பக்தர்கள் அருகில் உள்ள இதர கோவில்களுக்கு சென்றனர். ஆனால் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களும் பூட்டப்பட்டிருந்தது. முன்னறிவிப்பின்றி பூட்டப்பட்டு இருந்ததால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மக்கள் அதிகம் கூடுவதை தவிர்ப்பதற்காக கோவில்கள் மூடப்படுவது வரவேற்கத்தக்கது. ஆனால் முன்கூட்டியே அறிவித்து இருந்ததால் கோவில்களுக்கு வந்திருக்க மாட்டோம் என்று பக்தர்கள் புலம்பிக் கொண்டு சென்றனர்.
இந்த வகையில் திருச்சியில் உறையூர் வெக்காளியம்மன் கோவில், தென்னூர் உக்கிரமாகாளியம்மன் கோவில், உறையூர் நாச்சியார் கோவில், திருவானைக்காவல், மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவில் உள்பட அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சிறிய மற்றும் பெரிய கோவில்களும் இன்று காலை முதல் மூடப்பட்டிருந்தது.
On Saturday, March 21, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் அசரப் அலி மற்றும் மாவட்ட பொருளாளர் மைதீன் அப்துல் காதர் தலைமையில் அக்கட்சியினர் இன்று ஆட்சியர் சிவராசுவை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
அதில், உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மக்களிடம் இது குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் பகுதிகள் மூடப்பட்டு இருப்பதால் தினக்கூலி தொழிலாளர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் சுய உதவிக்குழு, தினசரி பைனான்ஸ் கந்து வட்டி போன்றவர்களிடம் கடன் பெற்றுள்ளனர். இந்த கடன் வசூலை ஒருமாத காலம் நிறுத்தி வைக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுக்கடைகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 மாதங்களுக்கு பூட்ட வேண்டும். மக்களுக்கு அத்தியாவசியமான மாஸ்க் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதை தடுக்கும் வகையில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இவற்றை இலவசமாக மக்களுக்கு வழங்க வேண்டும். வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் 24 மணி நேரமும் தயாராக உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
அதில், உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மக்களிடம் இது குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் பகுதிகள் மூடப்பட்டு இருப்பதால் தினக்கூலி தொழிலாளர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Friday, March 20, 2020
On Friday, March 20, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மன்னார்புரத்தில் தற்போது தலைமை அலுவலகம் அமைத்து ஏழை நடுத்தர மக்களை ஏமாற்றி வரும் நிறுவனம்தான் இந்த எல்பின் .
இந்த நிறுவனத்தின் மீது திருச்சி ( 1 /19) தஞ்சை (1/20), புதுகை, கோவை, மதுரை போன்ற பல மாவட்டங்களிலும் மாவட்ட குற்ற பிரிவில் பண மோசடி வழக்குகள் மற்றும் பல்வேறு வழக்குகள் இன்று வரை நிலுவையில் உள்ளது.
(மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு RMWC ஓரியண்ட் ஹைபர் மார்க்கெட் பார்ட்னர்கள் பாதுஷா மற்றும் இரண்டு நபர்கள் டின் நம்பர் 0002927268 அடுத்தது வராக மணி பார்ட்னர்கள் ரமேஷ்குமார் விஸ்வநாதன் செட்டியார் டின் நம்பர் 0003161010 & 0006833411 இதுநாள்வரை பல கோடிகள் சுருட்டியது போதவில்லை என்று அடுத்தது தற்போது 2017 எல்ஃபின் பார்ட்னர்கள் ரமேஷ்குமார் & பாதுஷா டின் நம்பர் 0003161010 & 0002927268 அடுத்தது 2019 ஸ்பேரோ குளோபல் டிரேடிங் பார்ட்னர்கள் பால்ராஜ் அறிவுமணி பாபு ஜிஎஸ்டி பின் நம்பர் 33ADSFS9169BIZN
என்ற நிறுவனம் நடத்தி மக்களை ஏமாற்றி வருகின்றனர் )
கடந்த அக்டோபர் மாதம் மதுரையில் இந்நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்ஆர்கே என்னும் ரமேஷ் குமார் மீது ரூ.4.63கோடி வெடி வாங்கிய வகையில் மோசடி என்ற வழக்கில் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி தினமலர் நாளிதழில் கூட வெளிவந்தது.
ஆனால் 2 ஆட்களில் மீண்டும் சுதந்திரமாக வெளியில் வந்தனர். மூன்று மாதத்தில் ரூபாய் 10 கோடி தருகிறேன் என கூறி வெளியில் வந்தனர். ஆனால் இதுவரை அந்த நபருக்கு பணமும் செட்டில் செய்யவில்லை என கூறப்படுகிறது.
தற்போது கடந்த மாதம் தஞ்சையில் அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்த இருந்ததாக கூறி அவர்கள் டீம் லீடர் கள் பிரசன்ன வெங்கடேஷ் மற்றும் கிங்ஸ்லி இருவரும் கைது செய்யப்பட்டனர். சிறிது நாட்கள் சிறையில் இருந்தவர்கள் இருவரும் தற்போது மீண்டும் தங்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சையில் கைதின் போது போலீசார் லத்திசார்ஜ் செய்தனர் இதனால் கடும் கோபமடைந்த எல்பின் உரிமையாளர் ராஜா காவல் துறையை எச்சரிக்கும் படி பல பதிவுகளை வாட்ஸ் அப் குழுக்களில் வெளியிட்டார்.
உங்கள் வீட்டிற்க்கு யாராவது போலீசார் விசா ரனைக்கு வந்தால் அவரை போட்டோ எடுங்கள், வீடியோ எடுங்கள் போன் செய்தால் பதிவு செய்யுங்கள் நான் அவர்களை என்ன செய்ய வேண்டுமோ செய்து கொள்ளலாம் என்றும் ராஜா என்கிற அழகர்சாமி கூறினார். ஜாமினில் வெளி வந்தவர்களை வெளிநாட்டிற்கு அழைத்து சென்றார்
இப்படி எல்லாம் பேசிய ராஜா மீது எந்த வழக்கும் இதுவரை பதிவு செய்யவில்லை என்பது வருத்தத்துக்குரியதாகும்.
இவர்கள் இவ்வளவு தைரியமாக பேசுவதற்கு என்ன காரணம் என்றால் இவர்கள் நிதிநிறுவனத்தில் முன்னாள் காவல்துறையில் உயர்பதவியில் பணியாற்றிய முன்னாள் அதிகாரிகளே காரணம் என கூறப்படுகிறது.
இவர்கள் அனைத்து உயர் காவல் துறையினருக்கும் பேசி சரி செய்து விடுகிறார்களாம். இந்த முன்னாள் காவல்துறை அதிகாரிகளுக்கு மாதம் பல லட்சம் சம்பளம் கொடுக்கிறார்களாம் முன்னாள் காவல் துறை அதிகாரிகள் துணையுடன் தான் ராஜா காவல்துறை செயல்பாடுகளை முடக்கும் அளவிற்கு
இவ்வாறு ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ்குமார் என்கிற எஸ் ஆர் கே ரமேஷ் இப்படிக்கு செயல் படுகிறார்களாம்
நேர்மையாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி திரிபாதி அவர்கள் இதனை கண்டறிந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

மக்கள் சமூகநீதிப் பேரவை மாநில அமைப்பாளர் கோவிந்தன் திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தில் திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சி புரிந்துள்ளன. அண்ணன் தம்பி போல் இரண்டு கட்சிகளும் ஊழலில் ஈடுபட்டுள்ளன. அரசியலில் மாற்றம் வேண்டும் என்று தமிழக இளைஞர்களும், பெண்களும் விரும்புகின்றனர்.
On Friday, March 20, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மாவட்ட தலைமை விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா தலைமையில்
கோட்டை காவல்துறை உதவி ஆணையர் ஸ்ரீகாந்த்,
கொரோனா வைரஸ் விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை பொதுமக்களுக்கு வழங்கினார். இதில் விஜய் ரசிகர் மன்றத்தினை சேர்ந்த மாவட்ட துணை செயலாளர் சுரேஷ், மாவட்ட இணைச் செயலாளர் ஞானவேல், மாவட்ட மகளிரணி தீபா, நிர்வாகிகள் அலெக்சாண்டர், சதீஷ், அஸ்வின், ராம்கி, மோசஸ், கௌதம், நவீன், பார்த்திபன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...