Sunday, May 03, 2020

On Sunday, May 03, 2020 by Tamilnewstv in    
தமிழ்நாடு இந்து திருக்கோவில் கூட்டமைப்பு திருச்சி மாவட்டத்தின் சார்பாக
144 ஊரடங்கு தடை உத்தரவு அமலில் உள்ளதால் பொதுமக்களுக்கு அரிசி பருப்பு .என்னை மிளகாய்த்தூள் மஞ்சள் தூள. மல்லித்தூள் 
புலி .பூண்டு .கோதுமை மாவு . உப்பு . காய்கறிகள் குழந்தைகளுக்கு பிஸ்கட் அனைத்தும் ஒரு குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசியப் பொருள்கள் திரு.க.விஜயகுமார் மாநிலசெயலாளர் அவர்களின் தலைமையில் மற்றும் மாவட்ட .ஒன்றிய . நகரம் நிர்வாகிகள் முன்னிலையில் பொதுமக்களுக்கு
துறையூர் வட்டாட்சியர் திருமதி
எஸ் .அகிலா அவர்கள் துறையூர் சௌபாக்கியா மண்டபத்தில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கி துவக்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் புறநகர் மாவட்ட செயலாளர் ராஜமாணிக்கம் புறநகர் மாவட்ட துணைச் செயலாளர் செல்வகுமார் துறையூர் கௌரவத் தலைவர் மதுரை வீரன் துறையூர் நகர கௌரவத் தலைவர் மகேஸ்வரன் ஒன்றிய சட்ட ஆலோசகர் சுதாகர் ஒன்றியத் தலைவர் தில்லைநாயகம் ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் ஒன்றிய இளைஞரணி செயலாளர் நவநீதகிருஷ்ணன் ஒன்றிய மகளிரணி செயலாளர் மணிமேகலை ஒன்றிய அமைப்பாளர் ராம்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அத்தியவசிய பொருட்களை வழங்கினார்கள்.
On Sunday, May 03, 2020 by Tamilnewstv in    
மணப்பாறை அருகே 
எந்தவித உதவியுமின்றி பரிதவிக்கும் நாடக கலைஞர்கள். 


வேடமணிந்து ஆட்டம் போட்டு பாட்டுப்பாடி அரசுக்கு கோரிக்கை.

ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் தொடங்கி ஆனி மாதம் வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திருவிழா நடைபெறும். சித்திரை மற்றும் வைகாசி மாதங்களில் தான் அதிக அளவில் திருவிழாக்கள் நடைபெறும் நிலையில் இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைளின் தொடர்ச்சியாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
இதனால் எந்த பகுதிகளிலும் நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் நடைபெறவில்லை. 
இந்நிலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கோவில்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் நாடக கலைஞர்கள் மற்றும் தெருக்கூத்து கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவு செய்யப்படாத நிலையில் இதுவரை எந்தவித உதவியும் இல்லாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். 
சுமார் 100 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கடந்த ஒன்றரை மாதமாக வீடுகளுக்குள் முடங்கி உள்ள நிலையில் சாப்பிட்டிற்கு கூட வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில் பட்டிச்சாவு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஆகவே அரசு கோவில்பட்டி சங்கத்தில் உள்ள நாடக கலைஞர்களுக்கு உதவிட வேண்டும் என்று நாடக – நடிகர்கள் வேடமணிந்து ஆட்டம் போட்டு பாட்டுப் பாடி தங்களின் கோரிக்கையை வலியுறுத்தினர்.
On Sunday, May 03, 2020 by Tamilnewstv in    
கொரோன வின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில்  தமிழகம் முழுவதும் நிவரணங்களை திமுக கட்சியினர் செய்து வருகின்றனர், 


அதன்படி திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் திமுக கட்சியின்  தலைவர் ஸ்டாலின் அவர்களின் ஆணைகிணங்க சமயபுரம் பகுதியில் வசிக்கும் நலிவுற்றோர் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கப்பட்டது, 5 கிலோ அரிசி ,எண்ணெய் உள்ளிட்ட ஒன்பது விதமாக மளிகை பொருட்கள் , பத்து விதமான காய்கறிகள் அடங்கிய நிவாரண பொருட்களை வழங்கினர், சுமார் 500 பேருக்கு வழங்கபட உள்ளது, இன்று  50 நபர்களுக்கு  வழங்கப்பட்டது. நிவரணப்பொருட்களை மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், மாவட்ட சேர்மன் தர்மன் ராஜேந்திரன், சேர்மன் ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர், இளங்கோவன், ஆகியோர் வழங்கினர், இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, துறை, ராஜசேகரன், சார்லஸ், அருவுடைநம்பி ஆகியோர் செய்திருந்தனர்.
On Sunday, May 03, 2020 by Tamilnewstv in    
சமயபுரத்தில் கொரோனா நோய்த்தொற்று ஏற்பாடும் அபாயம் !

சமயபுரம் மாரியம்மன் கோவில் தமிழ்நாட்டில் மிகவும் புகழ் பெற்ற ஆலயம் ஆகும். கொரோனா வைரஸ் தொற்றுக்கள் பரவாமல் தடுக்கும் பொருட்டு தமிழகத்தின் அனைத்து ஆலயங்களிலும் வழிபாடு தடை செய்யப்பட்டு உள்ளது நிலையில் ஆகம விதிகளின்படி பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகிறது. இதே போன்று சமயபுரம் மாரியம்மன் கோவிலிலும் ஆறுகால பூஜைகள் நடைபெற்று வருகிறது. பூஜை நேரத்தில் கோவிலின் முக்கிய இராஜகோபுர கதவு திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. அரசு ஊரடங்கு உத்தரவை மீறி வெளியூரிலிருந்து இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் சமயபுரத்திற்கு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக மொட்டை அடித்து கோவிலின் மண்டபத்தில் உள்ள உண்டியலில் காணிக்கை செலுத்தியும் வருகின்றனர். வெளியூர்களில் இருந்து  தினசரி 50 முதல் 100 நபர்கள் வரை மொட்டை அடித்து நேர்த்தி கடன் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. மொட்டை அடிக்கும் மண்டபம் மூடியுள்ள நிலையில் முடிகாணிக்கை எங்கே செல்கிறது? வெளியூரிலிருந்து சர்வ சாதாரணமாக சமயபுரம் வந்து செல்லும் நிலையில் நோய்த்தொற்று சமயபுரம் பாகுதியில் பரவ வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் மிகவும் அச்சம் அடைகின்றனர்.  கோவில் நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள்  எதிர்பார்ப்பாக உள்ளது.
On Sunday, May 03, 2020 by Tamilnewstv in    
*பொதுமக்களுக்கு விற்பனை செய்தால் ஜி-கார்னர் மார்க்கெட் முடக்கப்படும்*


மொத்த வியாபாரிகளுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

திருச்சி பொன்மலை ஜி-கார்னரில் இன்றிரவு முதல், மொத்த வியாபாரிகள் அனைவரும் சில்லறை வியாபாரிகளுக்கு மட்டுமே காய்கறிகளை விற்பனை செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு விற்பனை செய்யக்கூடாது.  இதனை மீறும் மொத்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மீது காவல்துறை மூலம் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் காய்கறி மொத்த விற்பனை சந்தையின் இயக்கமும் முடக்கப்படும்.


On Sunday, May 03, 2020 by Tamilnewstv in    
மணப்பாறையில் இருந்து
போலீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற இளம்பெண்கள் கொரோனா தடுப்பு களத்திற்கு பணியாற்ற புறப்பட்டுச் சென்றனர்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் காவல்துறையினர் தொடர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் தன்னார்வலர்களும் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டின் இறுதியில் காவலர் தேர்வில் தேர்ச்சி  பெற்று பணிக்கான தயார் நிலையில் இருந்தவர்களுக்கு கொரோனா நடவடிக்கையால் பணிகள் வழங்கப்படவில்லை.
இருப்பினும் தற்போது கொரோனா ஊரடங்கு பணிக்கு  காவலர்கள் தேவை இருப்பதால் காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்ற இளம்பெண்கள் மட்டும் மணப்பாறையில் இருந்து போலீஸ் வாகனத்தில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பெட்டி படுக்கைகளுடன் புறப்பட்டுச் சென்றனர்.
On Sunday, May 03, 2020 by Tamilnewstv in    
மணப்பாறை அருகே
கிராம மக்களுக்கு தன் சொந்த செலவில் 22 ஆயிரம் கிலோ அரிசி வழங்கிய தி.மு.க பெண் ஒன்றியக்குழு உறுப்பினர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த முத்தபுடையான்பட்டியைச் சேர்ந்தவர் மரியபாக்கியராணி ஆரோக்கியசாமி. இவர் மணப்பாறை ஊராட்சி ஒன்றிய 6 வது வார்டு தி.மு.க ஒன்றியக்குழு உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருக்கும் சூழ்நிலையில் அவரது வார்டுக்குட்பட்ட 2200 பொதுமக்களுக்கு தலா 10 கிலோ அரிசி வீதம் மொத்தம் 22 ஆயிரம் கிலோ அரிசியை இலவசமாக வழங்கினார். ஒவ்வொரு பகுதியைச் சேர்ந்த மக்களுக்கும் சமூக இடைவெளியுடன் வந்து வாங்கிச் சென்றனர். இதுமட்டுமின்றி பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்றும் அரிசியை வழங்கினார். தன்னுடைய சொந்த செலவில் தி.மு.கவைச் சேர்ந்த பெண் ஒன்றியக்குழு உறுப்பினர் வழங்கிய இந்த செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
On Sunday, May 03, 2020 by Tamilnewstv in    
திருச்சி மாவட்டம் மணப்பாறை தேமுதிக மாவட்ட செயலாளர் ஏழை எளிய மக்களுக்கு நிவாரணம் வழங்கினார்

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகர் பகுதி 16 வார்டில் தேமுதிக மாவட்ட செயலாளர் கிருஷ்ணகோபால் அவர்களது சொந்த நிதியிலிருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பத்தினருக்கு நிவாரணமாக அரிசி மற்றும் பொருட்கள் வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் தேமுதிக வட்டச் செயலாளர் ராஜா மாவட்ட துணைச் செயலாளர் பெரியசாமி மற்றும் நிர்வாகிகள் கார்த்திகேயன் மதுரைவீரன் மனோஜ் இமான் மதன் வெங்கடேஷ் ராஜாராம் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்
On Sunday, May 03, 2020 by Tamilnewstv in    
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த முசிறி ஒன்றியத்தைச் சேர்ந்த காட்டுக்குளம் ஊராட்சி நடுநிலைப் பள்ளி மாணவ  மாணவிகளுக்கு நிவாரண பொருளைவழங்கினார்


திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த முசிறி  ஒன்றியத்தைச் சேர்ந்த காட்டுக்குளம் ஊராட்சியில்

  கொரோனாவால்  இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு உத்திரவு பிறபிக்க பட்டு உள்ள இந்த சூழ்நிலையில் மாணவர்ளின் குடும்பங்களின் நலன் கருதி   ஊராட்சியில் பல்வேறு நிவாரண உதவி வழங்கபட்டு வருகிறது அதன் தொடர்சியாக  ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியிலும்  1வகுப்பு முதல் 8 வகுப்பு வரை பயிலும் 190 மாணவ மாணவியர்களுக்கு 5கிலோ  அரிசி உப்பு மளிகை சாமன்கள் அடங்கிய பொருட்களை  ஊராட்சி மன்ற தலைவர் பிராகாஷ்   ஒன்றிய கவுன்சிலர் ராசாத்தி கலைவாணன் தலைமையில் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் முன்னிலையில் வழங்கபட்டது இந்த நிகழ்வில் துனை தலைவர் ,  வார்டு உறுப்பினர்கள்  ,  ஊர் பொதுமக்கள் சமூக இடைவெளி காத்து   கலந்து கொண்டனர். ஊராட்சி மன்ற தலைவரின் இச்செயலுக்கு  பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்