Monday, February 22, 2021
ரூ.17 லட்சம் மதிப்பில் புணரமைக்கப்பட்ட சமயபுரம் கோயில் மண்டபத்திற்கு கணபதி ஹோம பூஜை இன்று நடைப்பெற்றது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ. 17 லட்சம் செலவில் புணரமைக்கப்பட்ட மண்டபத்திற்கு கணபதி ஹோம பூஜை கோயில் இணை ஆணையர் அசோக்குமார் தலைமையில் இன்று நடைப்பெற்றது.
கடந்த 2015 ம் ஆண்டு சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான வளாகத்தில் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் தரைதளம்,முதல்தளம் என மண்டபம் பக்தர்களின் பயன்பாட்டிற்க்காக கட்டப்பட்டது. இதில் தரைதளத்தின் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வந்தது.இந்நிலையில் முதல் தளத்தில் பணிகள் நிறைவடைந்தாலும் மின்சாதன பொருட்கள்,வர்ணம் பூசும் பணிகள் நிறைவடையாமல் இருந்தது.தற்போது ரூ.17 லட்சம் மதிப்பில் அந்த பணிகள் நிறைவடைந்து அமாவாசை,பௌணர்மி,மற்றும் விசேச நாட்களில் பக்தர்கள் தங்குவதற்க்காக இன்று கணபதி ஹோமம் நடப்பெற்றது. பின்னர் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரி முருகன் கோயில் இணை ஆணையர் அசோக்குமார் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தனர்.பின்னர் பக்தர்கள் செல்வதற்க காக நடைபெற்று்வரும் கியூ காம்பளக்ஸ்க்கு நிலை வைக்கும் பூஜைகள் நடைப்பெற்றது.
அரியவகை சிறுநீரக புற்றுநோய் கட்டியை கண்டறிந்து சிக்கலான அறுவை சிகிச்சையை திறம்பட கையாண்ட அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள்
பல்வேறு உடல் உபாதைகள் மற்றும் சிக்கல்களை ஆண்டு மருத்துவப்பரிசோதனை செய்வதன் மூலம் கண்டறியலாம்
திருச்சி, ஒரு 54 வயது பெண் திருச்சி அப்பல்லோ மருத்துவமனையின் புற நோயாளிகள் அறைக்குள் கையில் தனது ஹெல்த் செக்-அப் செய்த பைலுடன் ஒரு மலர்ந்த புன்னகையுடன் நுழைந்தார். அதில் அவருக்கு அபாயகரமான மற்றும் ஒரு அரிய வகை சிறுநீரக புற்றுநோய் இருப்பது தெரியாமலே அப்பாவியாக நின்றிருந்தார். அவருக்கு ஒரு டென்னிஸ் பந்தின் அளவு சிறுநீரகத்தில் ஒரு புற்று நோய் கட்டி எந்த அறிகுறிகளும்,தொந்தரவும் இல்லாமல் இருந்தது.
எரியும் தீயில் எண்ணெய் ஊற்றியது போல, இந்த புற்று நோய் கட்டி உடலின் மிகப்பெரிய ரத்தநாளமான(நரம்பு) “இன்பிரியர் வேனா காவா (IVC)” –வில் சென்று மேல் நோக்கி பரவி இதயத்தையும் சென்றடைந்து விடும். இந்த கட்டி ஐ.வி.சி., நரம்பு மற்றும் வலது ஏட்ரியம் வரை சென்றிருந்ததால் இதயம் மற்றும் மூளைக்கு ஒரு அச்சுறுத்தலாக இருந்து நோயாளியின் நிலை கிட்டத்தட்ட ஒரு வெடிக்கப்போகும் டைம் பாம்ப் போல இருந்தது என்று சிறுநீரக மருத்துவர் கூறுகிறார்.
அதிர்ஷ்டவசமாக பெட் ஸ்கேன் பண்ணியதில் புற்றுநோய் உடலின் வேறு இடங்களில் (மெட்டாஸ்டாஸிஸ்) பரவவில்லை என்பதை உறுதிப்படுத்தியது. "அந்த அச்சுறுத்தல் அதாவது மெட்டாஸ்டாஸிஸ் இல்லை என்று உறுதியானதால் இந்த நோயை குணப்படுத்தும் வாய்ப்பு அதிகமாக இருந்தது” என்று டாக்டர் அழகப்பன் சொக்கலிங்கம் கூறினார்.
இந்த குழுவில் சிறுநீரக மருத்துவர் நந்தகுமார், மயக்க மருந்து நிபுணர்கள் சரவணன், கார்த்திக்,அழகப்பன் மற்றும் இருதய அறுவை சிகிச்சை நிபுணர், குடல் அறுவை சிகிச்சை நிபுணர், வாஸ்குலர் சர்ஜன், இருதயநோய் நிபுணர் ஆகியோர் அடங்குவர். இந்த ஒத்திசைவான குழு, அவர்களின் ஒருங்கிணைந்த நிபுணத்துவம் மற்றும் அப்பல்லோ மருத்துவமனையின் அதிநவீன வசதிகள் ஆகியவை இதை எல்லைகளுக்கு அப்பால் சாத்தியமாக்கியதாக இந்த டாக்டர்களின் அணியின் தலைவர் அழகப்பன் சொக்கலிங்கம் கூறுகிறார்.
பொதுவாக இந்த த்ரோம்பஸ் கட்டியானது உதரவிதானத்தை (diaphragm) தாண்டி மேல் நோக்கி பரவியிருக்கும் பட்சத்தில் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் உதவி தேவைப்படும். “சில நேரங்களில் நாங்கள் நோயாளியை பைபாஸில் வைக்க வேண்டியிருக்கிறது. சில சமயங்களில், கட்டியை அகற்ற இதயத்தை கூட திறக்க வேண்டியிருக்கும்” என்று டாக்டர் ஸ்ரீகாந்த் கூறுகிறார். அவர் மேலும் கூறுகையில் இந்த இரண்டும் தவிர்க்கப்பட்டு இந்த அறுவை சிகிச்சை குறைந்த பாதிப்பில் செய்யப்பட்டது. இதனால் எதிர்பார்த்த பலன்களையும் அடைய முடிந்தது என்றார்.
அறிகுறிகளே இல்லாமல் ஒரு ஹெல்த் செக்-அப் செய்யப்பட்டதில் தான் இந்த பூதாகரமான பிரச்சனை வெளியே தெரிய வந்தது துரதிருஷ்டத்தில் ஒரு பெரிய அதிர்ஷ்டமாகும். மேலும் 80 சதவீதத்திற்கும் அதிகமான சிறுநீரக புற்று நோய் கட்டிகள் பிற நோய்களுக்கு செய்யப்படும் சோதனைகளால் தற்செயலாக கண்டறியப்படுகிறது என்பது தான் உண்மை. இது ஹெல்த் செக்-அப் செய்வதின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது. இதுபோன்ற குணப்படுத்தக்கூடிய நிலைமைகளை முன்கூட்டியே கண்டறிவது மிகவும் முக்கியமானது.அப்படி கண்டறியும் போது சிறுநீரகத்தை முழுவதும் எடுக்காமல் அந்த அக்கட்டிகளை மட்டும் எடுக்கும் லாப்ரஸ்கோபிக் சிகிச்சை முறைகளும் தற்போது இருக்கிறது.இது போன்ற சிகிச்சைகள் திருச்சி அப்பல்லோ மருத்துமனையில் செய்யப்படுகிறது என்று மருத்துவமனையின் மூத்த சிறுநீரக மருத்துவர் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அழகப்பன் கூறுகிறார்.
பல்வேறு உடல் உபாதைகள் மற்றும் சிக்கல்களை ஆண்டு மருத்துவப்பரிசோதனை செய்வதன் கண்டறியலாம் மற்றும் ஆண்டு மருத்துவ பரிசோதனைகளை வழங்குவதில் அப்போலோ மருத்துவமனை ஒரு முன்னோடி எனவும் இச்சிக்கலான அறுவைசிகிச்சையை செய்த மருத்துவ குழுவினரை மண்டல அதிகாரி ரோகினி ஸ்ரீதர் பாராட்டினார். திருச்சி அப்போலோ மருத்துவமனை, முதுநிலை பொதுமேலாளர் மற்றும் மருத்துவமனை தலைவர் சாமுவேல்,மருத்துவமனை நிலைய மருத்துவ அதிகாரி மரு. சிவம் மருத்துவமனை, விற்பனை பிரிவு பொதுமேலாளர் மணிகண்டன் மற்றும் சங்கீத் துணை பொது மேலாளர் உடனிருந்தனர்.
--
Thursday, February 11, 2021
திருச்சி அப்போலோ மருத்துவமனை நரம்பியல் சிகிச்சையில் சாதனை
54 வயதுடையவர் படுக்கையில் மீண்டு எழுந்த சாதனை
திருச்சி, கடந்த நவம்பர் மாத இறுதி வாரத்தில் 54 வயது இளங்கோவன் இடதுக் கால் செயலிழப்புடன் நடக்க முடியாத நிலையில் திருச்சி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய வலதுக் கால் ஏற்கனவே இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது. மேற்படி கலந்தாய்வில் அவருக்கு இடதுக் காலில் ஒரு வித இறுக்கமும் மிதமான பலவீனமும் இருந்து வந்திருப்பது தெரியவந்தது. அதோடு அவருக்கு இரு தோள்களிலும் வலியும் பலவீனமும் இருந்திருக்கிறது. ஒரே காலை மட்டும் பயன்படுத்தி உடலின் எடையை சுமந்து நடப்பதால் ஏற்பத்திருக்கும் தொய்வு என்பதாக அதனை அவர் எடுத்துக்கொண்டு சிகிச்சை பெறாமல் இருந்து வந்திருக்கிறார். இப்போது திடீரென நடக்க முடியாத அளவிற்கு சிக்கல் வந்ததும் மருத்துமனை அனுமதிப்பின் போது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறோமோ என்ற பதட்டத்துடன் இருந்தார். ஏனெனில் அவர் ஏற்கனவே இருதய தொந்தரவுகளுக்கும் சர்க்கரை - இரத்தக் கொதிப்பு நோய்களுக்கும் சிகிச்சை பெற்று வருபவர்.
அப்போலோவில் அனுமதிக்கப்பட்டதும் அவர் மூளை - தண்டுவட அறுவை சிகிச்சை மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டு அவருக்கு கழுத்து தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. நோயாளி சிறுநீர் கழிக்கும் சக்தியை இழந்திருப்பதும் அந்நேரத்தில் தெரியவந்தது - கிட்டத்தட்ட 1300 மில்லி சிறுநீர் நீர்ப்பையில் இருந்தும் அவர் அதனை உணர முடியாத நிலையில் இருந்தார். அவருக்கு கழுத்து தண்டுவடத்தை சுற்றியிருக்கும் தசைநார்கள் கெட்டியாகும் தடிமனாகவும் ஆகி அதுவே ஒரு எலும்பைப் போல துருத்திக்கொண்டு தண்டுவடத்தை மிக மோசமாக நசுக்கிக்கொண்டிருப்பதாக தெரிய வந்தது. அப்படியாக நசுங்கியிருப்பதை விடுவிக்காவிடின் அவர் மிகுந்த மோசமான நிலைக்கு செல்லக்கூடிய சாத்தியங்கள் (பூரண வாதம் மூச்சுத்திணறல் சிறுநீர் மலம் கழிக்க முடியாத நிலை) அவருக்கு தெளிவாக விளக்கிக்கூறப்பட்டன.
அறுவை சிகிச்சையின் போது அவருக்கு அழுத்தம் ஏற்பட்டிருந்த இரண்டு கழுத்துத் தண்டுவட எலும்புகள் அகற்றப்பட்டு தண்டுவட நரம்பு மண்டலைத்தை நசுக்கிக்கொண்டிருந்த கெட்டியான தசை நார்கள் அதீத நுணுக்கத்துடன் கரைத்து அகற்றப்பட்டன. முடிவில் டைட்டானியம் சாதன உதவியுடன் அவ்வெலும்புகள் இணைக்கப்பட்டு திடமாக்கப்பட்டன. திருச்சி அப்போலோ மருத்துவமனையின் மூளை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மயிலன் சின்னப்பன் மற்றும் கெவின் ஜோசப் இந்தக் கடினமான சிகிச்சையை வெற்றிகரமாக நிறைவேற்றினார்கள். சிகிச்சையின் சிறு பிசகு கூட நோயாளிக்கு மிக மோசமான பாதகத்தை அளிக்கக்கூடும் என்ற நிலையில் மிகுந்த துல்லியத்துடன் இந்தச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சென்னை போன்ற பெருநகரங்களில் கிடைக்கப்பெறும் உயர் சிகிச்சைகளை நமது திருச்சியிலே கிடைக்க வழிவகுக்கிறது என அப்போலோ மருத்துவமனை மண்டல தலைமை அதிகாரி மருத்துவர் ரோகினி ஸ்ரீதர் தெரிவித்தார். மருத்துவமனை பொதுமேலாளர் சாமுவேல், சிவம் மற்றும் துணைப்பொதுமேலாளர் சங்கீத் ஆகியோர் உடன் இருந்தனர்.
டாக்டர். சிவம், நிலைய மருத்துவ அதிகாரி, மணிகண்டன் - பொது மேலாளர் விற்பனை பிரிவு, டாக்டர்.ரோகினி ஸ்ரீதர் மண்டல தலைமை அதிகாரி, டாக்டர் கார்த்திக் மயக்கவியல் மருத்துவ நிபுணர், பேஷண்ட் இளங்கோவன் 54 வயது, டாக்டர். மயிலன் சின்னப்பன், மூளை மற்றும் முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர் கேவின் ஜோசப் மூளை மற்றும் முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர், சாமுவேல் - பொது மேலாளர் அப்போலோ மருத்துவமனை, திருச்சி ஆகியோர் உடன் இருந்தனர்
Sunday, January 31, 2021
இந்தியன்ஆயில் நிறுவனம் நடத்தும் சக்ஷம் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
திருச்சி
சக்ஷம் என்பது PCRA எனப்படுகிற பெட்ரோலியம் சேமிப்பு ஆராய்ச்சி அமைப்பு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் வழிகாட்டுதலில், மக்களுக்கு ஆற்றல் சேமிப்பின் இன்றியமையாமை குறித்து புரிந்துணர்வு ஏற்படுவதற்காக நடத்தும் ஒரு மாத கால பரப்புரையாகும். இந்த ஆண்டு, இந்த பரப்புரை, ஜனவரி 16 முதல் பிப்ரவரி 15, 2021 வரை "
பசுமை மற்றும் தூய்மையான ஆற்றல்" என்கிற கருப்பொருளில் நடத்தப்பட்டு வருகிறது.
சக்ஷம் 2021 பரப்புரையின் ஒரு பகுதியாக, இந்தியன்ஆயில் நிறுவனம், திருச்சியில் சைக்கிள் பேரணியை ஏற்பாடு செய்துள்ளது. இந்த சைக்கிள் பேரணி, ஆர்டிஓ மற்றும் சப் டிவிஷனல் மேஜிஸ்ட்ரேட் விசுவநாதன் அவர்களால் இந்தியன் ஆயில், துணை பொது மேலாளர் பாபு நாகேந்திரா, இந்தியன் ஆயில் முதன்மை பகுதி மேலாளர் ராஜேஷ், லூப்ஸ் டெக்னிக்கல் சேல்ஸ் மேலாளர் ஜெயலட்சுமி அவர்கள் முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. சுமார் 200 ஆர்வலர்கள் ஆர்வத்துடன் இந்த சைக்கிள் பேரணியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டனர்.
குடிமக்கள் இடையே எரிபொருள் சிக்கனம் பற்றியும் செயல்திறன் மிக்க வகையில் ஆற்றல் பயன்படுத்துதல் பற்றியும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடத்தப்படுகிறது. அருகில் உள்ள இடங்களுக்கு செல்ல சைக்கிள் பயன்பாட்டை வலியுறுத்துவதும் நோக்கமாகும். அதனால், பசுமையான சூழல் உருவாக ஏதுவாகும் என்பதோடு உடல்நலம் மேம்படும்.
இந்த பிரச்சாரத்தின் கீழ் நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தூய்மையான எரிசக்தியை நோக்கி இந்தியாவை நகர்த்துவதில் முக்கிய பங்கு வகிப்பதாக ஏழு விஷயங்கள் குறித்தும் பிரச்சாரத்தின் போது எடுத்துரைக்கப்படும்.
இந்த ஆண்டு சக்ஷம் பரப்புரை நோக்கங்கள் :
1. கேஸ் அடிப்படையிலான பொருளாதாரம்
2. பூமியின் கீழ் கிடைக்கும் எரிபொருள்களைத் தூய்மையான முறையில் உபயோகித்தல்
3 பயோ - எரிபொருள்களில் தனிச்சிறப்பு கவனம்
4. 2030-ல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை 450 GW ஆக ஆக்குதல்
5. கரியமில வாயு சார்ந்த போக்குவரத்தை நீக்கும் முன்முயற்சி
6. ஹைட்ரஜன் போன்ற எரிபொருள்களுக்கு முக்கியத்துவம் அளித்தல்
7. ஆற்றல் சார்ந்த சிஸ்டம்களில் டிஜிட்டல் நவீனத்துவம்
PCRA அமைப்பும் இந்தியன்ஆயில் உள்ளிட்ட ஆயில் & கேஸ் நிறுவனங்கள், இந்த ஒரு மாத பரப்புரை காலத்தில் மக்களுடன் தொடர்பு ஏற்படுத்தும் பல்வேறு நிகழ்வுகளை மேக்கொள்ளும். 'சக்ஷம் சைக்கிள் நாள்', சைக்கிள் பேரணி, வர்த்தக வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கான பயிலரங்கம், இல்லத்தரசிகள் / சமையல் கலைஞர்களுக்காக எளிதான எரிபொருள் சிக்கன நடைமுறை குறித்த கருத்தரங்கு ஆகியவை நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.
Tuesday, January 19, 2021
மருத்துவக் கல்லூரி மாணவி 4 வது மாடியிலிருந்து குதித்து மர்ம மான முறையில் பலி
இறப்பில் மர்மம் என மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார்.
திருச்சி மாவட்டம், சமயபுரம் சுங்கச்சாவடி,அருகே தனலட்சுமி சீனிவாசன் தனியார் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை மாணவ, மாணவிகள் விடுதியுடன் உள்ளது. இக் கல்லூரியில் அரியலூர் மாவட்டம், கருப்பூர் பொய்யூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமையாவின் மகள் ராஜேஸ்வரி டி பாம் இரண்டாம் ஆண்டு கல்வி பயின்று வருகிறார். மாணவி ராஜேஸ்வரி இம் மாதம் 17 ம் தேதி தனது வீட்டிலிருந்து கல்லூரிக்கு வந்துள்ளார். திங்கள் கிழமை இரவு 1 மணி வரை கல்லூரி விடுதியில் உள்ள தனது சக தோழிகளுடன் நன்றாக பேசியுள்ளார்.
அதிகாலையில் மாணவி ராஜேஸ்வரி விடுதியில் காணவில்லை என சக மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் கூறியுள்ளனர்.
கல்லூரி நிர்வாகத்தினர் சம்பவ இடத்தில் வந்து பார்த்த போது விடுதியின் தரைப்பகுதியில் மர்ம்மான முறையில் சடலமாக கிடந்தார். மாணவி உயிரிழந்தது குறித்து அவரது பெற்றோருக்கு கல்லூரி நிர்வாகத்தினர் தகவல் கூறியதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்தினை பார்த்த போது , சம்பவ இடத்தில் எவ்வித ரத்தம் சிதறிகிடக்கவில்லை. மாணவி தங்கி இருந்த விடுதியின் 3 மற்றும் 2 வது மாடி படிகள் தண்ணீர் ஊற்றி கழுவியிருந்தனர்.
மேலும் உயிரிழந்த மாணவியின் கழுத்து நெரிக்கப்பட்டும், முகத்தாடையிலும், தொடைப் பகுதியிலும் கத்தியால் குத்திய காயங்கள் இருந்துள்ளது. இதனால் மாணவி ராஜேஸ்வரியின் சாவில் மர்மம் உள்ளதென கூறி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவக்கல்லூரி முன் போராட்டம் நடத்த முயன்றனர்.
சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி மத்திய மண்டல காவல்துறை ஐஜி மற்றும் போலீஸார் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினருடன் பேசினர்.
போலீஸ் ஐஜி, சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் முறையாக புகார் அளித்தால் உரிய விசாரணை நடத்திடுவோம் எனக் கூறினார். அதன் பேரில் சமயபுரம் காவல் நிலையத்தில் மாணவியின் தந்தை ராமையன் மகள் சாவில் மர்ம்ம் உள்ளதென புகார் கூறியதன் பேரில் போலீஸார் வழக்கு பதிந்து, மாணவியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்..
Wednesday, January 13, 2021
திருச்சி மாவட்டம் முசிறி கைகாட்டியில் அதிமுகவினர் திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தமிழக முதல்வரை அவதூறாக பேசியதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி வடக்கு மாவட்டத்தில் அண்மையில் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் பிரச்சாரத்தின்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவதூறாகவும்,மரியாதை குறைவாகவும் கேலி கிண்டல் செய்து பேசியிருந்தார்.இச் செயலை கண்டிக்கும் விதமாக முசிறி கைகாட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் அதிமுக மாவட்ட செயலாளர் பரஞ்சோதி தலைமையில்,முசிறி தொகுதி எம்எல்ஏ செல்வராஜ் முன்னாள் அமைச்சர்கள் சிவபதி அண்ணாவி முன்னாள் எம்எல்ஏக்கள் தங்கவேல் ரத்தினவேல் மல்லிகா இந்திரா காந்தி ஆகியோர் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் அப்போது உதயநிதிஸ்டாலின் பேசியதை கண்டித்தும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கண்டன கோஷம் எழுப்பினர்
நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அயிலை சிவசூாியன், உய்யகொண்டான் பாசன விவசாயிகள் சங்கம் தலைவா் பிரசண்ணா வெங்கடேஷ்,மோகன்தாஸ் , சந்திரசேகா்,சி.பி.எம் ஒன்றிய செயலாளா் வினோத்மணி, விவசாய தொழிலாளா் சங்கம் செல்வராஜ், ம.தி.மு.க .வை.கோ கோவிந்தராஜ்,சமுத்திரம் நடராஜன் ,நாகராஜன்,செல்வமணி,அஜீத்குமாா்,உள்ளிட்ட விவசாயிகள்"பலா் கலந்து கொண்டனா்.
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர்
திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர் அவரது தாலியை மறந்து சென்ற நிலையில் சமயபுரம் போலீஸார் தாலி மற்றும் தங்க செயின் என 23 பவுன் நகையினை மீட்டு பெண் கவுன்சிலரிடம் ஒப்படைத்தனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூர் பகுதியைச் சேர்ந்தவர் சைலஜா. இவர் அங்கு ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். இவர் குடும்பத்தினருடன் சமயபுரம் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசித்துவிட்டு குடும்பத்துடன் சமயபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின் பெங்களூரு சென்றுள்ளார். சேலம் அருகே கார் சென்று கொண்டிருந்த பொழுது தனது கழுத்தில் அணிந்திருந்த தாலி மற்றும் தங்க சங்கிலி என 23 பவுன் நகைகளை காணாது திடுக்கிட்டார். இது குறித்து தொலைபேசி மூலம் சமயபுரம் போலீசாரிடம் புகார் அளித்தார்.
சமயபுரத்தில் அவர் எங்கெங்கு சென்றார் என்று கேட்டறிந்த போலீசார், அவர் தங்கியிருந்த விடுதி அறையில் சோதனை நடத்தினர். அப்போது அவரின் 20 பவுன் தாலி செயின், மற்றுமொரு 3 பவுன் தங்க சங்கிலியும் அங்கிருந்தது தெரிய வந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர். அவர் சமயபுரம் காவல் நிலையத்திற்கு வந்த உடன், கவுன்சிலர் சைலஜாவின் நகைகள் தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட சமயபுரம் காவல் ஆய்வாளர் அன்பழகன் ,23 பவுன் நகையை பெண் கவுன்சிலரிடம் ஒப்படைத்தனர்.
சமயபுரம் காவல்நிலைய ஆய்வாளர் அன்பழகன் உள்ளிட்ட போலீஸாரின் துரித நடவடிக்கையினை போலீஸ் உயரதிகாரிகள் பாராட்டினர்
Total Pageviews
News
Pages
Popular Posts
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
திருச்சிராப்பள்ளியில் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமிதொடங்கிவைத்...
-
திருச்சி மாவட்ட ஆதிசைவர் நலச்சங்கம், அகில பாரத துறவிகள் சங்கம் மற்றும் அந்தணர் முன்னேற்ற கழகம் ஆகியவற்றின் நிர்வாகிகள் இன்று திருச்சி சுப்...











