Wednesday, August 27, 2014

On Wednesday, August 27, 2014 by Unknown in ,    
airindia-flight- tamil news bbcஏர் இந்தியா விமான நிறுவனம் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்ததன் நினைவாக இந்த ஆண்டு ஆகஸ்ட் 27-ம் தேதி ஏர் இந்தியா தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஏர் இந்தியா நாளை முதல் 5 நாட்களுக்கு சலுகை விலையில் 100 ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை செய்கிறது.
இதுதொடர்பாக ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஏர் இந்தியா தனது பயணிகளுக்கு சலுகை கட்டணத்தை தொடங்கியுள்ளது. இந்த சலுகை திட்டத்தின்கீழ் 100 ரூபாய்க்கு டிக்கெட் (வரிகள் தவிர) விற்பனை செய்யப்படும். ஏர் இந்தியா இணையதளம் மூலமாக மட்டுமே இந்த டிக்கெட்டுகளை பெற முடியும்.
ஆகஸ்ட் 27-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரையில் மேற்கொள்ளப்படும் பயணங்களுக்கு மட்டும் ஆகஸ்ட் 27-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை இந்த சலுகை டிக்கெட் விற்பனை செய்யப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.
முதல் முறையாக ஏர் இந்தியா தினத்தை கொண்டாட உள்ள இந்த நிறுவனம், சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவிக்க உள்ளது

0 comments: