Wednesday, August 27, 2014

On Wednesday, August 27, 2014 by Unknown in ,    
அவனியாபுரம் மீனாட்சி நகர் ரோஜா தெருவைச் சேர்ந்தவர் மூர்த்தி (வயது 42). ஷேர் ஆட்டோ டிரைவர். இவர் தனது ஆட்டோவை இரவில் வீட்டு முன்பு நிறுத்தி இருந்தார்.
காலையில் எழுந்து பார்த்த போது, அதன் 3 டயர்கள் மாயமாகி இருப்பது கண்டு மூர்த்தி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவனியாபுரம் போலீசில் அவர் புகார் செய்தார்.
இதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து திருடனை தேடி வந்தனர். இந்தநிலையில், சந்தேகப்படும்படி அந்த பகுதியில் டயர்களுடன் சென்ற ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவன் தான், மூர்த்தியின் ஆட்டோ டயர்களை திருடியிருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார் அவனை கைது செய்தனர். விசாரணையில் அவனது பெயர் நல்ல முகமது (24) என்பதும், மதுரை ஜீவா நகரைச் சேர்ந்தவன் என்பதும் தெரிய வந்தது. அவனிடம் இருந்து 3 டயர்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைதான நல்ல முகமது, இதுபோல பல இடங்களில் டயர்களை திருடியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இதுபோன்ற திருட்டுகளில் அவர் ஈடுபட்ட நிலையில் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

0 comments: