Wednesday, August 27, 2014

On Wednesday, August 27, 2014 by Unknown in ,    
மதுரை திருநகர் பகுதியை சேர்ந்தவர் மோகன்தாஸ் (வயது26). இவரது மனைவி பானுபிரியா(25). இவர் கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் வேலை முடிந்து ஊருக்கு செல்ல கப்பலூர் பஸ் நிறுத்தம் அருகே நடந்து வந்தார். அப்போது விருதுநகரில் இருந்து மதுரை நோக்கி வந்த கார் ஒன்று பானுபிரியா மீது மோதியது.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
நேற்று இரவு சிகிச்சை பலன் அளிக்காமல் பானு பிரியா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குபதிவு செய்து கார் டிரைவர் குமார் என்பவரை கைது செய்தார்.

0 comments: