Thursday, August 28, 2014

On Thursday, August 28, 2014 by Unknown in ,    


திருப்பூர் மாவட்டத்தில்  அவினாசி பல்லடம் உடுமலை  தாராபுரம் மற்றும் காங்கயம் உட்கோட்டங்களில்  விநாயகர் 2014.சதுர்த்தி விழாவினை முன்னிட்டு சுமார் 750.விநாயகர் சிலைகள் 29-08-2014. அன்று பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது .  இச்சிலைகள் 29-8-2014 முதல் 02-09-2014.வரை  விசர்ஜனம் செய்யப்பட உள்ளது .  இவ்விழா சம்மந்தமாக பிரதிஷ்டை  செய்யப்பட்டும் விநாயகர் சிலைகள் சுற்றுச்சூழல்  பாதிக்காதவாறு தயாரித்தல் பாதுகாப்பு  ஊர்வலப்பாதை மற்றும் கடைபிடிக்க வேண்டிய  நெறிமுறைகள் பற்றி உட்கோட்ட அதிகாரிகள் ,அணைத்து இந்து அமைப்பினருடன் கலந்தாய்வு கூட்டம்  மாவட்டம் மூலம் முழுவதும்  நடத்தி அதன் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது .  மேலும் சிலைகளை பிரதிஷ்டை செய்யும் அமைப்பினர் சிலைகளின்  பாதுகாபிற்காக ,15 பேர் கொண்ட பாதுகாப்பு குழு அமைத்து எந்தநேரமும் 5பேர்  வீதம் சுழற்சி முறையில் இருத்தல் வேண்டும் .  மேலும் சிலை பாதுகாபிற்காக  காவல்துறையினர்  பணியமர்த்தப்பட்டும் ,ரோந்து  காவல் மூலம் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் .மேலும் விநாயகர் சதுர்த்தி விசர்ஜனம்  பாதுகாப்புப் பணிக்காக மாவட்டத்தில் சுமார்  1200 காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் . என்றும் பொதுமக்கள் ஆதரவோடு அசம்பாவிதங்கள் ஏதுமின்றி  மேற்கண்ட  விழா நடத்தப்படும்  என்று மாவட்ட கண்காணிப்பாளர் திரு .அமித்குமார் சிங் இ.கா .ப .அவர்கள் தெரிவித்துள்ளார் .

0 comments: