Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by farook press in ,    
சென்னை, செப். 13–
பேரறிஞர் அண்ணாவின் 106–வது பிறந்த நாள் விழாவையொட்டி பூந்தமல்லியில் 15–ந்தேதி ம.தி.மு.க. மாநாடு நடத்தப்படுகிறது.
இதற்காக பூந்தமல்லி அருகே உள்ள நசரத்பேட்டையில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மாநாட்டை திறந்தவெளி மாநாடாக நடத்துகின்றனர்.
15–ந் தேதி மாலை 4 மணிக்கு தொடங்கும் மாநாட்டில் முதல் நிகழ்ச்சியாக நெல்லை அபுபக்கர், ஓரத்தநாடு கோடி கணேஷ், சென்னை மணிமாறன் ஆகிய குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மாநாட்டுக்கு திருவள்ளூர் மாவட்ட செயலாளர் டி.ஆர்.ஆர். செங்குட்டுவன் தலைமை தாங்குகிறார். பூவை மு.பாபு வரவேற்கிறார். மாவட்ட செயலாளர்கள் பாலவாக்கம் சோமு, ஜீவன், வேளச்சேரி மணிமாறன், வேலூர் சுப்பிரமணி, உதயகுமார், பன்னீர், ராஜா, ஏ.கே.மணி, நடராஜன், சம்பத் மாதையன், ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் சட்டத்துறை செயலாளர் வீரபாண்டியன் மாநாட்டு முகப்பை திறந்து வைக்கிறார்.
தேர்தல் பணி துணை செயலாளர் டி.சி. ராஜேந்திரன் ம.தி.மு.க. கொடி ஏற்கிறார். வக்கீல் அருணாசலம் அண்ணா, சுடர் ஏற்றுகிறார்.
மாநாட்டில் பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரையாற்றுகிறார்.
இதில் அவைத் தலைவர் துரைசாமி, பொருளாளர் மாசிலாமணி, துணை பொதுச் செயலாளர்கள் நாசரேத் துரை, மல்லை சத்யா, துரைபாலகிருஷ்ணன் முன்னாள் எம்.பி. கணேசமூர்த்தி செந்தில் அதிபன், இமயம், ஜெபராஜ், வக்கீல் தேவதாஸ், அழகு சுந்தரம், குமரி விஜயகுமார், கவிஞர் தமிழ்மறவன், கோமுகன், வந்திய தேவன், வக்கீல் நன்மாறன் உள்பட பலர் பேசுகின்றனர். ஆவடி அந்தரிதாஸ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார். முடிவில் தணிகாசலம் நன்றி கூறுகிறார்.
பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு நடைபெறும் மாநாடு என்பதால் அடுத்த சட்டசபை தேர்தலில் ம.தி.மு.க.வின் நிலை என்ன என்பதை வைகோ விளக்கமாக பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநாட்டிற்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்களை பங்கேற்க செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
அண்ணாநகரில் உள்ள வைகோ வீட்டில் இருந்து மாநாடு நடைபெறும் பூந்தமல்லி வரை வழி நெடுக வரவேற்பு பதாகைகள், அலங்கார வளையங்கள், கொடி தோரணங்கள் அமைக்கப்படுகின்றன.
அண்ணாவை பெருமை படுத்தும் வகையில் அவரது வாசகங்கள் அடங்கிய வரவேற்பு விளம்பரங்களும் செய்யப்பட்டு வருகின்றன.

0 comments: