Wednesday, September 17, 2014

On Wednesday, September 17, 2014 by farook press in ,    
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள நெய்தலூர் தெற்கு பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். விவசாயி. இவரது மனைவி லட்சுமி(வயது 45). தங்கவேல் நேற்று காலை வேலைக்கு சென்றுவிட்டார். லட்சுமி வீட்டை பூட்டிவிட்டு ஆடு மேய்ப்பதற்காக தோட்டத்திற்கு சென்றுவிட்டார். மதியம் அவர் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ கதவு உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.1 லட்சத்து 22 ஆயிரத்து 400 மதிப்பிலான 51 கிராம் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து அவர் குளித்தலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்த மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகிறார்.

0 comments: