Monday, September 01, 2014

On Monday, September 01, 2014 by Unknown in ,    

     




உடுமலை,: பிஏபி இரண்டாம் மண்டல பாசனத்துக்கு திருமூர்த்தி அணையில் இருந்து வருகிற 7ம் தேதி தண்ணீர் திறக்க அரசுக்கு மாவட்ட கலெக்டர் பரிந்துரை செய்துள்ளார்.
   உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் இருந்து கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 3.75லட்சத்துக்கும் மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலங்கள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு சுழற்சி அடிப்படையில் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது 2ம் மண்டல பாசனம் நடைபெற உள்ளது. இதற்கு கடந்த(ஆகஸ்ட்)மாதமே தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால் பருவமழை பொய்த்து பிஏபி அணைகளில் போதிய தண்ணீர் இல்லாததாலும், கான்டூர் கால்வாயில் பராமரிப்பு பணிகள் நடந்ததாலும் குறித்த காலத்தில் தண்ணீர் திறப்பு நடக்க வில்லை. தற்போது பருவமழை பொழிந்து அணைகள் அனைத்தும் நிரம்பி விட்டன. கான்டூர் கால்வாய் பராமரிப்பு பணியும்  முடிந்தது.
  அதைத்தொடர்ந்து பரம்பிக்குளம் அணையில் இருந்து கான்டூர் கால்வாயில் கடந்த 20ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.இந்த தண்ணீர் சர்க்கார்பதி மின் நிலையம் வந்து அங்கு மின் உற்பத்தியாகி கான்டூர் கால்வாயில் திருப்பி விடப்பட்டது. திறக்கப்பட்ட அன்று இரவே தண்ணீர் திருமூர்த்தி அணை வந்தடைந்தது. அப்போது நீர்மட்டம் 15 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரிக்த் துவங்கியது, நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 41.6 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 897 கனஅடி நீர் கான்டூர் கால்வாயில் வந்து கொண்டிருக்கிறது.பாலாறு வழியாகவும் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையின் நீர்மட்டம் கணிசமான உயர்ந்ததாலும், அணைக்கு நீர்வரத்து திருப்திகரமாக இருப்பதாலும் பிஏபி இரண்டாம் மண்டல பாசனத்துக்கு வருகிற 7ம் தேதி தண்ணீர் திறக்க அரசுக்கு மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் பரிந்துரை கடிதம் அனுப்பி இருக்கிறார். அதன்படி அன்று தண்ணீர் திறக்கப்படும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த தண்ணீர் உதவியால் சுமார் 94ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். அணையை நம்பி மொத்தம் 3.75 லட்சம் ஏக்கர் கோவை,திருப்பூர் மாவட்டங்களில் உள்ளன. அதில் முதலாம் மண்டல பாசனம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்ததையடுத்து 2ம் மண்டலத்துக்கு தண்ணீர் திறக்கப்ப உள்ளது.

0 comments: