Wednesday, September 03, 2014

On Wednesday, September 03, 2014 by Unknown in ,    


திருப்பூர் மாநகராட்சி 22 ஆவது வார்டில் கலைமகள் கோபால்சாமி, 45 ஆவது வார்டில் எம்.கண்ணப்பன் போட்டியிடுகின்றனர். அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் தேர்தல் பிரசாரத்தை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திங்கள்கிழமை துவக்கிவைத்து, அதிமுக நிர்வாகிகள், கட்சியினருடன் சென்று வாக்காளர்களிடம் வாக்கு சேரித்தார்.
  இந்நிலையில், மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. புதன்கிழமை(இன்று) அதிமுக வேட்பாளர்கள் எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து, அதன்பின் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
22 ஆவது வார்டு: இந்த வார்டில் ஆண் வாக்களர்கள் 6,578 பேர், பெண் வாக்காளர்கள் 5,710 பேர், திருநங்கையர் 2 பேர் என மொத்தம் 12,290 வாக்காளர்கள் உள்ளனர். இந்த வார்டில் 8 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்காளர்களுக்கு தேர்தல் பணியாளர்கள் 8 பேர் மூலமாக பூத்சிலிப் வழங்கப்பட்டு வருகிறது.
45 ஆவது வார்டு: இந்த வார்டில் ஆண் வாக்காளர்கள் 6,913 பேர், பெண் வாக்காளர்கள் 6,382 பேர் என மொத்தம் 13,295 வாக்காளர்கள் உள்ளனர். 12 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணியாளர்கள் 12 பேர் மூலமாக பூத்சிலிப் வழங்கும் பணி நடைபெற்றுவருகிறது.

0 comments: