Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by Unknown in ,    

சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் 62 வயது முதியவருக்கு பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 22 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 20,000 அபராதமும் விதித்து திருப்பூர் மகளிர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
திருப்பூர், செல்லம் நகரைச் சேர்ந்தவர் பரமசிவம் (62). இவர், கடந்த 2009-ஆம் ஆண்டு, ஜூலை 20-ஆம் தேதி அங்கேரிபாளையத்தில் உறவினர் வீட்டிற்கு சென்றபோது, அங்கு வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், திருப்பூர் மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து பரமசிவத்தை கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை திருப்பூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட முதியவர் பரமசிவத்திற்கு பல்வேறு பிரிவுகளின்கீழ் மொத்தம் 22 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதித்து நீதிபதி வசந்தலீலா தீர்ப்பளித்தார்

0 comments: