Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by Unknown in ,    




 

பெண் தலைமைக் காவலரை காணவில்லை என அவரது கணவர் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
திருப்பூர் காவலர் குடியிருப்பில் வசித்து
வருபவர் மனோஜ்குமார் (40). இவர், பாலிபேக் நிறுவனம் வைத்துள்ளார். இவரது மனைவி மணிமாலா (37). இவர், திருப்பூர் மாநகரக் காவல் துறையில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு மகள் மேகா (11), மகன் சந்தோஷ்குமார் (9) என 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், திருப்பூர் மத்திய காவல் நிலையத்தில் பணியாற்றிவந்த மணிமாலா, கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கடந்த புதன்கிழமை வழக்கம்போல பணிக்குச் சென்ற மணிமாலா, அதன்பின் வீடு திரும்பவில்லை.
கணவர் மனோஜ்குமார் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு விசாரிததபோது, அன்றைய தினம் மணிமாலா பணிக்கு வரவில்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து மனோஜ்குமார் திருப்பூர், வடக்கு காவல் நிலையத்தில் தனது மனைவியை காணவில்லை என புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

0 comments: