Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by Unknown in ,    

சென்னை: தமிழகத்தில் ஆக்சிஜன், ஹைட்ரஜன் சிலிண்டர் விலையை உயர்த்தப் போவதாக சென்னை தொழில் சார்ந்த கேஸ் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை தொழில்சார்ந்த கேஸ் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் 40க்கும் மேற்பட்ட மருத்துவம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு பயன்படும் ஆக்சிஜன், ஹைட்ரஜன் வாயுக்களை சிலிண்டரில் அடைத்து விற்பனை செய்யும் நிலையங்கள் உள்ளன. கடுமையான மின்வெட்டு காரணமாக இதன் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. மறுபுறம் மருத்துவத்துக்கு பயன்படும் ஆக்ஸிஜனுக்கு, தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் நைட்ரஜன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்களுடன் இணைத்து வரி விதிக்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 300 முதல் 400 சதவீதம் வரை வரியை ஏற்றியுள்ளனர். இதனால் எங்களது தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள் ளது. சமீபத்தில் ஆந்திரா, கர்நாடகாவில் சிலிண்டருக்கான விலையை ஏற்றியுள்ளார்கள். இதுவரை தமிழகத்தில் விலையை குறைத்து வந்த நாங்கள், மேற்கண்ட நெருக்கடி காரணமாக விரைவில் விலையை உயர்த்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

0 comments: