Monday, September 01, 2014

On Monday, September 01, 2014 by Unknown in ,    
மதுரையில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்து சுண்டல், பொறி, கொழுக்கட்டை படையல் செய்து வழிபாடு நடத்தினர். விநாயகர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு சதுர்த்தியையொட்டி இன்று காலை அறுகம்புல் மாலை அணிவிக்கப்பட்டு 18 படி அரிசியில் செய்யப்பட்ட ராட்சத கொழுக்கட்டை படையல் செய்யப்பட்டது.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இதை தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
விநாயகர் சதுர்த்தியையொட்டி மதுரை மாவட்டத்தில் இந்து முன்னணி, பாரதீய ஜனதா, அகில இந்து மகாசபை, இந்து மக்கள் கட்சி, சிவசேனா மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மதுரை புறநகர் பகுதியில் 200 இடங்களிலும் மாநகர் பகுதிகளில் 150 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த சிலைகளை வருகிற 31–ந்தேதி வரை வைகை உள்ளிட்ட நீர் நிலைகளில் கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விநாயகர் சதுர்த்தியையொட்டி இன்று மதுரையில் மாட்டுத்தாவணி, காள வாசல், கோரிப்பாளையம், தெற்குவாசல், சிம்மக்கல், புதூர், மேலமாசி வீதி உள்ளிட்ட அனைத்து மார்க்கெட்டுகளிலும் பூஜைப் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
விநாயகர் சிலை வழிபாடு மற்றும் ஊர்வலம் நடத்தப்படுவதால் மதுரை நகர் பகுதியில் 2 ஆயிரம் போலீசாரும், புறநகர் பகுதியில் 2500 போலீசாரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தனர். விநாயகர் சிலைகளுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

0 comments: