Wednesday, September 03, 2014

On Wednesday, September 03, 2014 by Unknown in ,    




நைஜீரியாவில் உள்ள நார்த் கிராஸ் மாநிலத்தின் ஓடரேக்கோ உச்சென்யிம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் நாய் ஒன்றை செல்லமாக வளர்த்து வந்தது.

பக்கத்து வீட்டு கோழிகள் இடும் முட்டையைத் தினந்தோறும் உடைத்து குடிக்கும் பழக்கம் கொண்ட அந்த நாயின் தொல்லை தாங்க முடியாத கோழிகளின் உரிமையாளர் முட்டைகளில் விஷம் வைத்து அந்த நாயை கொல்ல முயன்றுள்ளார்.

விஷம் கலந்த முட்டைகளைச் சாப்பிட்ட நாயின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த நாயின் உரிமையாளர் அதை அறுத்து சமைத்துள்ளனர்.

சமைத்த நாய்க்கறியை தனது குடும்பத்தாருடன் சேர்ந்து சாப்பிட்டுள்ளனர். அத்துடன் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கும் அந்த நாய்க்கறியைப் பரிமாறியுள்ளார்.

இந்நிலையில் நாயின் உடலில் கலந்திருந்த விஷத்தால் அந்தக் கறியை சாப்பிட்ட நாயின் உரிமையாளர் அவரது 2 குழந்தைகள் மற்றும் பக்கத்து வீட்டில் வசிக்கும் மேலும் இருவர் என மொத்தம் 5 பேர் பலியாகினர்.

0 comments: