Wednesday, September 10, 2014

On Wednesday, September 10, 2014 by Unknown in ,    

அமெரிக்காவின் தெற்கு கரோலினா பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதிகளுக்கு 5 குழந்தைகள் உள்ளனர். கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் விவகாரத்து பெற்றனர்.
 
இந்நிலையில் குழந்தைகளின் தாய், தனது குழந்தைகளை தொடர்பு கொள்ள முடியவில்லை என காவல் துறையில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் குழந்தைகள் வளர்ந்து வந்த வீட்டை காவல் துறையினர் சோதனை செய்யத் திட்டமிட்டனர்.
 
அவ்வீட்டை சோதனை செய்ய சென்ற போது, வீடு பூட்டப்பட்டிருந்தது. குழந்தைகளின் தந்தையையும் காணவில்லை. இதனால் காவல் துறையினருக்கு தந்தை மீது சந்தேகம் எழுந்தது.
 
உடனே இதுதொடர்பாக அமெரிக்காவிலுள்ள அனைத்து காவல் நிலையத்திற்கும் தகவல் தரப்பட்டது. இந்நிலையில், குழந்தைகளின் தந்தையை மிஸிஸிப்பி பகுதியில், காவல் துறையினர் சுற்றி வளைத்தனர்.
 
இதுதொடர்பாக குழந்தைகளின் தந்தையிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் அலாபமா அருகேயுள்ள ஒரு வனப்பகுதியில் தனது 5 குழந்தைகளை கொன்று புதைத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
 
பின் காவல் துறையினர், புதைக்கப்பட்ட 5 குழந்தைகளின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

0 comments: