Thursday, September 11, 2014

On Thursday, September 11, 2014 by farook press in ,    
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ளது அமராவதி. இங்குள்ள பொதுமக்கள் இன்று அதிகாலை தங்கள் பகுதியில் சிறுத்தைப்புலி ஒன்று சாலையின் குறுக்கே அங்கும் இங்குமாக உலா வருவதைப் பார்த்தனர்.
வெலவெலத்துப்போன அவர்கள் வீட்டுக்குள் போய் முடங்கினர். பின்னர் அமராவதி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மறு நிமிடமே வனரேஞ்சர் மாரியப்பன் மற்றும் வன அலுவலர்கள், வன ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். புலி நடமாட்டம் உள்ளதாக பொதுமக்கள் கூறிய பகுதிகளில் அங்குலம் அங்குலமாக தேடினார்கள்.
பொதுமக்களை மிரள வைத்த சிறுத்தைப்புலி சிக்கவில்லை. அமராவதி நகர் குடியிருப்பை சுற்றி ஏராளமான புதர்கள் உள்ளன. அதில்தான் அந்த சிறுத்தைப்புலி பதுங்கியிருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக் கிறார்கள்.
சிறுத்தைப்புலியை கூண்டு வைத்துப்பிடிக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தனியாக பொதுமக்கள் நடமாட வேண்டாம் என்று தண்டோரா போட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அமராவதி பகுதியில் தான் ராணுவத்தினர் நடத்தும் சைனிக் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் உள்ள மாணவர்கள் யாரும் தனியே வெளியே வரவேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சிறுத்தைப்புலி பிடி பட்டால்தான் தங்களுக்கு நிம்மதி என்று அமராவதி குடியிருப்பு பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 comments: