Friday, September 19, 2014

On Friday, September 19, 2014 by Unknown in ,    
 



இந்திய தொழில் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ) திருப்பூர் மாவட்ட கவுன்சில் சார்பில் சிறு, நடுத்தர தொழில்களின் செயல்பாடுகளை மேம்படுத்துதல் தொடர்பான கருத்தரங்கம் திருப்பூரில் வெள்ளிக்கிழமை (செப்.19) நடைபெற உள்ளது.
இதுகுறித்து சி.ஐ.ஐ. திருப்பூர் மாவட்ட கவுன்சில் தலைவர் ராஜா எம்.சண்முகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், தகவல் தொழில்நுட்ப பயன்பாடு மூலமாக சிறு மற்றும் நடுத்தர தொழில்களின் செயல்பாடுகளை மேம்படுத்துதல் தொடர்பான கருத்தரங்கம் திருப்பூர் ஏஞ்சல் ஓட்டல் அரங்கில் வெள்ளிக்கிழமை (செப்.19) காலை 9.30 மணியளவில் நடைபெற உள்ளது.
சமீபத்திய கருத்துக் கணிப்பின்படி, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் நவீன தகவல் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தினால் அவற்றின் வருமானம் ரூ. 3 லட்சம் கோடியாக அதிகரிக்கும், 11 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படும் என தெரிய வந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்திய நிறுவனங்களின் வருவாய், இத்தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தாத நிறுவனங்களைக் காட்டிலும் 15 சதவீதம் அதிக முன்னேற்றம் கண்டுள்ளன. முன்னணி நிறுவனங்களுக்கு இணையாக வளர்ச்சி பெறும் வாய்ப்புகள் ஏற்படும். சிறு, நடுத்தரத் தொழில்களும் தகவல் தொழில் நுட்பத்தை திறம்பட கையாள முடியும்.
சி.ஐ.ஐ. கடந்த 2013-ஆம் ஆண்டு 1,200 சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை கருத்தரங்குகள் மூலமாக இந்தூர், ராஜ்கோட், நாக்பூர், புவனேஸ்வர், கவுஹாத்தி, கோட்டா, ஜாம்ஷெட்பூர், மதுரை மற்றும் விசாகப்பட்டினத்தில் தொடர்பு கொண்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறை மூலமாக தயாரிப்புத் திறன், போட்டியிடும் திறன், வர்த்தக வாய்ப்புகள், உலகளாவிய தொழில் வாய்ப்புகளில் திறன்பெற முடியும்.
சந்தை வாய்ப்பு பன்மடங்கு பெருகும், நேரம் மற்றும் திறன் ஆகியவற்றை மிச்சப்படுத்துவதுடன் தொழில் திறமையையும் வளர்க்க முடியும்
எனவே, தகவல் தொழில்நுட்ப உபயோகம் பற்றிய இக்கருத்தரங்கிற்கு பின்னலாடைத் தொழில் நிறுவனங்களின் தகுதியான மேலாளர்களை அனுப்பி வைக்குமாறு தொழில்துறையினரை கேட்டுக்கொள்கிறேன். முன்பதிவுக்கு 82200-32005 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்றார்.

0 comments: