Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by Unknown in ,    
மதுரை சரவணா மருத்துவமனை நிறுவனர் பிறந்தநாள்: நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடுமதுரை சரவணா மருத்துவமனை நிறுவனர் டாக்டர் சரவணன் பிறந்த நாளையொட்டி நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதோடு கோவில்களில் அன்னதானம் வழங்கப்பட்டது,

மதுரை நரிமேட்டில் சரவணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதன் நிறுவனரான டாக்டர் பா.சரவணன் தனது மருத்துவமனையில் அனைத்து நோய்களுக்கு சிறந்த சிகிச்சை அளித்து வருகிறார். அத்துடன் ஏழை, எளியோருக்கு தரமான சிகிச்சை அளிப்பதன் மூலம் பொது மக்களிடம் மக்களின் மருத்துவர் என்ற பெயர் பெற்றுள்ளார்.

இவரது பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் செப்டம்பர் 11–ந்தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பிறந்தநாள் விழா நாளை (11–ந்தேதி, வியாழக்கிழமை) சரவணா மருத்துவமனை வளாகத்தில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

விழாவில் ஏழை, எளியோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை டாக்டர் பா.சரவணன் வழங்கினார் . மேலும் அமுதா அக்ஷயா அறக்கட்டளை நடத்தும் ஆரவற்ற குழந்தை காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு அன்னதானமும், கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டது

0 comments: