Wednesday, September 03, 2014

On Wednesday, September 03, 2014 by Unknown in ,    







உடுமலை : கேரளாவில், ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் கொலையை கண்டித்து, இடுக்கி மாவட்டத்தில், இந்து அமைப்புகள் நடத்திய 'பந்த்' போராட்டத்தால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கேரள மாநிலம் கண்ணுார் மாவட்டத்தை சேர்ந்த, ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் மனோஜ் மர்மநபர்களால் நேற்றுமுன்தினம் கொலை செய்யப்பட்டார். இதை கண்டித்து, பா.ஜ., மற்றும் இந்து அமைப்புகள் சார்பில், கேரளாவில், 'பந்த்' போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இடுக்கி மாவட்டம் மறையூர், மூணாறு பகுதிக்கு, உடுமலையிலிருந்து பஸ்கள் அனைத்தும் நேற்று காலை முதல் இயக்கப்படவில்லை. இதனால், இரு மாநில தொழிலாளர்களும், பாதிக்கப்பட்டனர். உடுமலை மூணாறு வழித்தடத்திலுள்ள, சின்னாறு, கோவில்கடவு, மறையூர் பகுதிகளுக்கு செல்ல முடியாமல், சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

மறையூரில் நேற்று காலை முதல் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.சின்னாறு செக்போஸ்ட் அருகேயுள்ள கோடந்துார் கட்டளை மாரியம்மன் கோவில் செல்லும் பக்தர்கள், தமிழக-கேரள எல்லை வரை இயக்கப்பட்ட வாடகை வாகனங்களில் பயணித்தனர்.வாகன போக்குவரத்து இல்லாததால், ஒன்பதாறு மற்றும் சின்னாறு செக்போஸ்ட் பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன

0 comments: