Friday, September 19, 2014

On Friday, September 19, 2014 by Unknown in ,    

கள்ள ஓட்டு போடப்படுவதாக எழுந்தப் புகாரை அடுத்து மடத்துக்குளத்தில், அதிமுக, பாஜக நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டது.
மடத்துக்குளம் பேரூராட்சித் தலைவர் பதவிக்கான வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்காக, 18 வார்டுகள் கொண்ட இப்பேரூராட்சியில், 19 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
அதிமுக சார்பில் எஸ்.பழனிச்சாமி, பாஜக சார்பில் என்.முத்துக்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், அந்தந்த வாக்குச்சாவடி முன்பு இரு கட்சியினரும் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தனர்.
இதையடுத்து, வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் கழுகரை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி வாக்குச் சாவடியில் அதிமுகவினர் கள்ள ஓட்டுப் போடுவதாக பாஜக நிர்வா
கிகள் புகார் கூறினர். இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற பாஜக
நிர்வாகிகளுக்கும், அதிமுக நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இருதரப்புக்குள்ளும் மோதல் ஏற்பட்டது.
 இதில், பாஜகவைச் சேர்ந்த கழுகரை ஷாகுல்அமீது என்பவரது மகன் இம்ரான் (23) காயமடைந்தார்.
மேலும், அதிமுகவைச் சேர்ந்த கழுகரை திருமலைசாமி என்பவரது மகன் மனோஜ்குமார் (21), மனோகரன் என்பவரது மகன் பிரபாகர் (22) ஆகியோர் உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, உடுமலை டிஎஸ்பி பிச்சை தலைமையில் மடத்துக்குளம் பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.
இதேபோல், உடுமலை ஒன்றியம், கண்ணமநாயக்கனூர் ஊராட்சித் தலைவர் பதவிக்கான வாக்குப்பதிவு, பாலப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென
அதிமுக, திமுக நிர்வாகிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, போலீஸார் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர்.

0 comments: