Tuesday, September 02, 2014

On Tuesday, September 02, 2014 by farook press in , ,    
தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள நில அபகரிப்பு புகார் தொடர்பான வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி என்.கிருபாகரன், மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர், இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் ஆகியோர் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலத்தை அபகரித்ததாக, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி மீது மத்திய குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அழகிரி தாக்கல் செய்த மனு:
மு.க.அழகிரி கல்வி அறக்கட்டளை மூலம் ஏழை மாணவர்களுக்கு கல்வி அளிப்பதற்காக சிவரக்கோட்டையில் தயா பொறியியல் கல்லூரி கட்டப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தான் கல்லூரிக்கு இணைவிப்பு பெறப்பட்டுள்ளது.
கல்லூரி அருகே ஆக்கிரமித்ததாகக் கூறப்படும் 44 சென்ட் நிலத்தை சம்பத் என்பவரிடம் இருந்து வாங்கினோம். அந்த இடம் ஆதிலட்சுமியிடம் இருந்து வேலுச்சாமி பண்டாரம் நிலம் பரிமாற்ற முறையில் பெற்றிருந்தார். பிறகு அவரிடமிருந்து சம்பத் வாங்கியுள்ளார்.
எனவே, நிலம் வாங்கியதில் எவ்வித ஒளிவுமறைவும் இல்லை. கோயில் நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை. மேலும், இது தொடர்பாக ஏற்கெனவே கீழமை நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜோடிக்கப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

0 comments: