Wednesday, September 03, 2014

On Wednesday, September 03, 2014 by farook press in ,    
இந்து மதம் என்பது மனிதனை நல்வழிக்கு செல்ல நெறிபடுத்தும் ஒரு சாதனமாகும். அதுவே சுயநலத்தோடு பலரை வேதனை படுத்தும் ஒரு ஆயுதமாக மாற கூடாது”. ஹிந்து மதம் என்பது ஒரு புனிதமான மதம் . இந்துமதத்தை காக்க வேண்டும் எனில் இந்துக்கள் யாவரும் சமம் என்பது நமது சமுதாயத்தின் பிஞ்சு மனங்களில் சிறுவயது முதலே ஆழப்பதிக்கவெண்டும். இந்துமதம் ஆலயவழிபாடு என்று மட்டும் இல்லாமல் துயரில் துவளும் இந்துக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் மதம் என்பதை மற்றவர்களுக்கு உணர வைக்க வேண்டும் .முதலில் குழந்தைகளுக்கு கோவிலுக்கு செல்லும் பொது நாகரீக உடை உடுத்தி அழைத்து செல்லுங்கள் .
நிஜமான கம்யூனிஸத்தை உணராமல் மதமாற்றிகளுக்கு அடிபணியும் கம்யூனிஸமும், பணத்துக்காக தன் இனத்தை காட்டிக்கொடுக்கும் கேவலமும் நிறைந்த நாட்டில் நாம் இருக்கிறோம்.
இப்தார் விருந்தில் கலந்து கொள்ளும் திராவிடர்கள் இஸ்லாத்தில் தனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று கூறிக்கொள்கிறார். ஆனால் அதே ராமர் பால பிரச்சனை வரும் போது கோடிக்கணக்கான இந்துக்கள் வழிபடும் கடவுளை அவமதித்துப் பேசுகிறார்கள் . இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயலை தவிர வேறு என்ன ?
குடும்பக்கட்டுப்பாடு விளம்பரங்களில் கூட இந்துக்கள் மட்டுமே காண்பிக்கப்படுகிறார்கள். அதாவது இந்து அடையாளத்துடன் இருக்கும் ஆண் , பெண் மட்டுமே. வேறு எந்த மதத்தினரும் காண்பிக்கப்படுவதில்லை. இந்துக்கள் மட்டுமே குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்ள வேண்டும். மற்றவர்களின் மக்கள் தொகை பெருகினால் பரவாயில்லையாம்.இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயலை தவிர வேறு என்ன !?
நம் சொந்த கடவுளரை இழிவு படுத்துவதை பகுத்தறிவு என்ற பெயரில் செய்து வருகிறார்கள் .அதாவது நம் கண்ணைக் குத்திக் கொள்ள நம் விரல்களையே பயன்படுத்தும் அளவிற்க்கு நம்மை முட்டாளாக்கி இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் சிந்திக்க வேண்டும். இந்து தர்மத்தை பாதுகாப்பது இந்த தர்மத்தைக் கடைபிடிக்கும் ஒவ்வொருவருக்கும் உள்ள தார்மீக உரிமையாகும். கடமையும் கூட.
இன்று இந்தியாவில் இருக்கும் மதமாற்றிகள் அனைவரும் ஆசையினாலும் ஆங்கிலேய அடக்குமுறையாலும், பணத்தாலும் மாற்றப்பட்ட இந்துக்களின் சந்நதியினரே. அவர்களை அவர்கள் பாதையிலேயே விட்டுவிடுவோம், ஆனால் அந்த கொடிய நோய் நம்மை பற்றாமல் நம்மை காப்பாற்றிக்கொள்வோம்.
நாம் வேறு மதத்தவரை அவமதிக்க வேண்டாம். மற்றவர்களை புன்படுத்துவது நம் தர்மமும் அல்ல. குறைந்த பட்சம் நமது மத அடையாளங்கள் அவமதிக்கப்படாமலாவது பார்த்துக் கொள்ள வேண்டாமா? சில விஷயங்களையாவது தவறாமல் கடைபிடியுங்கள்.
இந்து மதத்தைக் காக்க எழுந்து நில்:
யாராவது உன்னுடைய தாயை அவமதித்தால் நீ என்ன செய்வாய்?”
நமது நாட்டின் உண்மையான தாயாகிய உனது சொந்த மதத்தைப் பற்றி அவ்வளவு மதிப்பு உனக்கு இருக்குமாயின், எந்த ஒரு ஹிந்து சகோதரனும் மதம் மாற்றப்படுவதை நீ ஒருகாலும் சகிக்க மாட்டாய். இருப்பினும்கூட தினந்தோறும் இது நடப்பதை நீ பார்க்கிறாய். பார்த்தும் பாராமுகமாய் இருக்கிறாய். எங்கே உனது இந்து நம்பிக்கை? எங்கே உனது தேச பக்தி? உங்கள் கண்ணெதிரிலேயே ஹிந்து மதத்தைத் கேவலமாக தூற்றுகிறார்கள். அப்படியிருப்பினும் உங்களில் எத்தனை பேர்களுக்கு அந்த அநீதி சகியாமல் இரத்தம் கொதிக்கிறது? எத்தனை பேர் அதனைப் பாதுகாப்பதற்காக வரிந்து கட்டி நிற்கப் போகிறீர்கள்?” வருடத்தில் ஒரு நாள் மட்டும் ஒரு விழா கொண்டாடினால் போதுமா ? நாம் அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு நம் இந்து கலாச்சாராம் ,பண்பாடு , பாரம்பரியம் பற்றி சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் . குறிப்பாக குழந்தைகளிடம் சிறு வயது முதல் ஆன்மீக பக்தியும் , தேச பக்தியும் ஊட்டி வளர்க்க வேண்டும் .நாமாவது நமது தனித் தன்மையை இழக்காமல் இருப்பதும் ஒவ்வொருவரும் தமது அடுத்த தலைமுறைக்கு இந்த உயரிய பண்பாட்டை எடுத்துச் செல்வதும் தற்போது மிக அவசியம்.

0 comments: