Monday, September 01, 2014

On Monday, September 01, 2014 by farook press in ,    
பீஜிங்: சீனாவில் குடிபோதையில் ஏடிஎம்முக்கு சென்ற வாலிபர் அறைக்குள் சிக்கி கொண்டார். சீனாவின் கிழக்கே ஜிஜியாங் என்ற கடற்கரை பிராந்தியம் அமைந்துள்ளது. இங்குள்ள நகர் ஒன்றில் செங்கவோ என்ற 25 வயது வாலிபர் வசிக்கிறார். இவர் நேற்று முன்தினம் இரவு நன்றாக குடித்துவிட்டு ஏடிஎம் மையத்துக்குள் நுழைந்தார். அங்கு ஏடிஎம் மெஷினில் பணம் எடுப்பதற்காக 3 முறை கார்டை வைத்து முயற்சி செய்தார். பணம் வரவில்லை. ஒவ்வொரு முறையும் அவர் தவறான பாஸ்வேர்டு எண் போட்டதால், மெஷினில் கார்டு சிக்கிக்கொண்டது. மேலும் ஏடிஎம் அறையும் பூட்டிக் கொண்டது. இதைத் தொடர்ந்து, கண்ணாடியால் ஆன அறையை செங்கவோ கை யால் உடைக்க முயன்றார். முழு போதையில் இருந்ததால் அவரால் உடைக்க முடியவில்லை. கண்ணாடி அறைக்கு கீழே காற்று வரும் வழியாக செங்கவோ வெளியேற முயன்றார்.

பாதி உடல் வெளியே வந்த நிலையில் செங்கவோ மயக்கமடைந்தார். அங்கிருந்தவர்கள் இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, கண்ணாடி கதவை உடைத்து செங்கவோவை மீட்டனர். இதுகுறித்து அப்பிராந்திய போலீசார் வழக்குப்பதிவு செங்கவோவை கைது செய்து விசாரித்தனர். கண்ணாடி கதவை உடைக்கும் அளவுக்கு அவனது உடலில் வலு இருந்துள்ளது. எனினும், முழு போதையில் இருந்ததால் மயக்கமாகி விட்டான். கண்ணாடி கதவுகள் உடைந்து சேதமானதால், அவனிடம் தகுந்த நஷ்டஈடு வசூலிக்கப்படும் என்று சீன போலீசார் தெரிவித்தனர்.

0 comments: