Monday, September 01, 2014

On Monday, September 01, 2014 by Unknown in ,    

நடிகர் அஜீத் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கோழைகளை கைது செய்ய வலியுறுத்தி மதுரையில் அஜீத் ரசிகர்கள் சுவரொட்டி ஓட்டியுள்ளனர்.
108 ஆம்புலன்ஸ் சேவை மையத்திற்கு நேற்று முன் தினம் பேசிய மர்ம ஆசாமி சென்னை திருவான்மியூரில் உள்ள நடிகர் அஜீத் வீட்டுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தான். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்தினர் இதுகுறித்து சென்னை மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே சென்னை போலீசார் நடிகர் அஜீத் வீட்டுக்கு விரைந்து சென்று வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதா? என சோதனை நடத்தனர். சுமார் 1½ மணி நேரம் நடந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் இல்லை என தெரியவந்தது.
இதுதொடர்பாக திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் அஜீத் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை கைது செய்யக்கோரி மதுரையில் அவரது ரசிகர்கள் கண்டன சுவரொட்டியை ஓட்டியுள்ளனர்.
சுவரொட்டியில் ‘‘வெடி குண்டு மிரட்டல் விடுத்த கோழைகளை கைது செய்! சாவுக்கு பயந்தவனுக்கு தினம் தினம் சாவு, எதுக்குமே பயப்படாதவனுக்கு ஒரு தடவை தான் சாவு, எங்க தலயை தொடணும்னா... எங்களை தாண்டி தொட்டுப்பாருங்கடா பார்ப்போம்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுரையில் அஜீத் ரசிகர்கள் ஓட்டிய சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

0 comments: