Monday, September 01, 2014

On Monday, September 01, 2014 by Unknown in ,    
ஊராட்சி துணைத் தலைவிக்கு காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது.
மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, மல்லபுரம் ஊராட்சி துணைத் தலைவி மலர்விழி தாக்கல் செய்த மனு விவரம்:
பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ், கடந்த பயனாளிகள் தேர்வின்போது முறைகேடு நடைபெற்றதாக என் மீதும், ஊராட்சித் தலைவர் மற்றும் எனது கணவர் உள்ளிட்டோர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். என் மீதான குற்றசாட்டுக்கு விளக்கமளிக்குமாறு, மதுரை மாவட்ட ஆட்சியர் எனக்கு நோட்டீஸ் அனுப்பினார். அதற்கு விளக்கமளிக்க போதிய அவகாசம் அளிக்காமல், காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்து ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும், ஊராட்சி மன்றக் கூட்டத்திலும் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எனவே, மன்ற தீர்மானத்தை ரத்து செய்து, ஆட்சியரின் நடவடிக்கைக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி டி.எஸ். சிவஞானம் பிறப்பித்த உத்தரவு: மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்பிய ஆட்சியர், விளக்கமளிக்க வாய்ப்பளிக்காமல், அதே நாளில் அதிகாரத்தை பறித்துள்ள செயல் சட்டத்தை மீறியதாகும்.
எனவே, இந்த மனு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. மனுதாரரின் கையெழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்த ஆட்சியரின் உத்தரவும், ஊராட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் ரத்து செய்யப்படுகின்றன என அதில் குறிப்பிட்டுள்ளார்.

0 comments: