Friday, October 17, 2014

On Friday, October 17, 2014 by farook press in ,    
திருப்பூர் சிறு விசைத்தறி நெசவாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், விசைத்தறி தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையே நடைபெற்ற போனஸ் பேச்சுவார்த்தையில் இந்த ஆண்டு 16.60 சதவிகிதம் போனஸ் தொழிலாளர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.
திருப்பூரில் புதன்கிழமை இருதரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சிறு விசைத்தறி நெசவாளர்கள் சங்கம் சார்பில் தலைவர் முருகேசன், செயலாளர் சந்திரபோஸ், பொருளாளர் ஈஸ்வரன் ஆகியோரும், சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன், விசைத்தறி தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் பி.முத்துசாமி, நிர்வாகிகள் என்.பாலகிருஷ்ணன், ஈஸ்வரமூர்த்தி ஆகியோரும் பங்கேற்றனர்.
இதில் கடந்த ஆண்டு விசைத்தறி தொழிலாளர்களுக்கு 16.50 சதவிகிதம் போனஸ் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 0.10 சதவிகிதம் அதிகரித்து 16.60 சதவிகிதம் போனஸ் தொகையை பட்டுவாடா செய்வதென்று இருதரப்பினர் ஏகமனதாக முடிவு செய்தனர்.

0 comments: