Thursday, October 09, 2014

On Thursday, October 09, 2014 by Unknown in ,    
நெல்லை பாசஞ்சர் ரெயிலில் கழிவறைக்குள் மயங்கி கிடந்த வாலிபர்
மயிலாடுதுறை நெல்லை பாசஞ்சர் ரெயில் பெட்டியின் கழிவறைக்குள் மயங்கிய நிலையில் கிடந்த வாலிபரை மதுரை ரெயில்வே போலீசார் மீட்டனர்.
ஈரோடு–மயிலாடுதுறையில் இருந்து மதுரை வழியாக நெல்லை செல்லும் பாசஞ்சர் ரெயில் மதுரை ரெயில் நிலைய 3–வது பிளாட்பாரத்திற்கு நேற்று மாலை 5.55 மணிக்கு வந்தது.
அந்த ரெயிலின் பயணிகளில் சிலர் அங்கிருந்த போலீசாரிடம் சென்று, 4–வது பெட்டியின் கழிவறையில் யாரோ ‘மர்ம’ நபர்கள் உள்ளனர். சிறுநீர் கழிப்பதற்காக நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்க மறுக்கின்றனர் என கூறினர்.
இதனால் பதற்றமடைந்த ரெயில்வே போலீசார் சம்பந்தப்பட்ட பெட்டியின் கழிவறையை தட்டிப் பார்த்தனர். உள்ளுக்குள் இருந்து எவ்வித சத்தமும் வரவில்லை. இதனால் கழிவறை ஜன்னல் கண்ணாடியை உடைக்க முடிவு செய்தனர். அதன்படி கடப்பாரையை வைத்து ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ளே பார்த்தனர். அப்போது அங்கு ஒரு வாலிபர் மயங்கிய நிலையில் கிடந்தார்.
உடனே அந்த வாலிபரை மீட்பதற்காக கழிவறை கதவையும் உடைத்தனர். பின்னர் அந்த வாலிபரை அங்கிருந்து மீட்டு பிளாட்பாரத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் அவரை குளிக்க வைத்தனர். சிறிது நேரத்தில் அவர் சுயநினைவுக்கு வந்தார். அவரிடம் போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் அவரது பெயர் ரவி (வயது23), ஈரோடு அண்ணாநகரைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து அந்த ரெயில், மாலை 6.45 மணிக்கு நெல்லைக்கு புறப்பட்டுச் சென்றது.

0 comments: