Thursday, October 09, 2014

On Thursday, October 09, 2014 by Unknown in ,    
மதுரை, தல்லாகுளத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது காரில் நாகமலை புதுக்கோட்டை சென்றார். அப்போது கார் மூதாட்டி மீது மோதி விபத்துக்குள்ளானது. இது தொடர்பாக நாகமலை புதுக்கோட்டை போக்கு வரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.
விபத்து வழக்குகளில் போலீஸ் நிலையங்களிலேயே பெயில் பெற்றுக் கொள்ளலாம் என்ற விதி உள்ளது. இதையடுத்து மணிகண்டன் நாகமலை புதுக்கோட்டை சிறப்பு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் குணசேகரனிடம் பெயில் கேட்டார். அதற்கு அவர் ரூ. ஆயிரம் தந்தால் பெயிலில் விடுவதாக தெரிவித்தார். உடனே மணிகண்டனும் ரூ. ஆயிரம் லஞ்சம் கொடுத்து பெயில் பெற்றதாக தெரிகிறது.
சில நாட்களுக்கு பிறகு குணசேகரன் விபத்து வழக்கு தொடர்பாக மீண்டும் ரூ.1500 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத மணிகண்டன் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. இசக்கி ஆனந்தன், இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய பணத்தை மணிகண்டனிடம் கொடுத்து அனுப்பினர்.
அவர் இன்று காலை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரி அருகே நிற்பதாகவும், பணத்தை வந்து பெற்றுக் கொள்ளுமாறும் கூறியுள்ளார். உடனே சப்– இன்ஸ்பெக்டர் குணசேகரன் சம்பவ இடத்துக்கு சென்று லஞ்ச பணத்தை பெற்றுக் கொண்டார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் குணசேரகனை கையும், களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர்.
லஞ்சத்தை ஒழிக்க வேண்டிய போலீசாரே லஞ்சம் வாங்கியது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

0 comments: