Friday, December 12, 2014

On Friday, December 12, 2014 by farook press in ,    
பின்னல் புக் டிரஸ்ட் - பாரதி புத்தகாலயம் இணைந்து திருப்பூரில் ஆண்டுதோறும் புத்தகத் திருவிழாவை சிறப்பாக நடத்தி வருகின்றன. திருப்பூர் மக்களின் பண்பாட்டுத் திருவிழாவாக இது தடம் பதித்துள்ளது. இதன்படி 12வது ஆண்டாக 2015 சனவரி 30 முதல் பிப்ரவரி 8ம் தேதி முடிய பத்து நாட்கள் இந்த புத்தகத் திருவிழாவை சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் கே.ஆர்.சி. சிட்டிசென்டரில் இந்த புத்தகக் கண்காட்சிக்கான வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ட்ரிபிள்எக்ஸ் குப்புசாமி தலைமை வகித்தார். பின்னல் புக் டிரஸ்ட் சார்பில் எஸ்.சுப்பிரமணியம் வரவேற்றார். புத்தகக் கண்காட்சியை வெற்றிகரமாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து பின்னல் புக் டிரஸ்ட் தலைவர் ஆர்.ஈஸ்வரன், பொருளாளர் அ.நிசார் அகமது ஆகியோர் விளக்கினர்.
இதைத் தொடர்ந்து புதிய வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது. வரவேற்புக்குழுத் தலைவர் - ஆர்.ஏ.ஜெயபால், செயலாளர் - செ.முத்துக்கண்ணன், பொருளாளர் - அ.நிசார் அகமது ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இத்துடன் 29 பேர் துணைத் தலைவர்களாகவும், 32 பேர் உதவிச் செயலாளர்களாகவும், இவர்களுடன் 132 பேர் கொண்ட வரவேற்புக்குழுவும் அமைக்கப்பட்டது.
இந்த விழாவில் முந்தைய புத்தகக் கண்காட்சிகளின் தலைவர்களாக செயல்பட்ட அரிமா எம்.ஜீவானந்தம், எம்பரர் பொன்னுசாமி, லிங்க்ஸ் சௌகத் அலி, பிரிண்டிங் குமாரசாமி மற்றும் திருப்பூர் தமிழ்ச்சங்கம் தலைவர் டாக்டர் ஆ.முருகநாதன்,  திருப்பூர் கலை இலக்கியப் பேரவை பொதுச் செயலாளர் வி.டி.சுப்பிரமணியம், ஜெய்ஸ்ரீராம் கல்விநிறுவனங்களின் தாளாளர் தங்கராஜ், யுனிவர்சல் கல்விநிறுவனத் தாளாளர் எஸ்.ராஜகோபால் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிறைவாக செ.முத்துக்கண்ணன் நன்றி கூறினார்.

0 comments: