Friday, December 12, 2014

On Friday, December 12, 2014 by farook press in ,    
இந்திய காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டை 49 சதவிகிதமாக அதிகரிப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்திருப்பதைக் கண்டித்து அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் சார்பில் திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காப்பீட்டுத் துறையில் 49 சதவிகித அந்நிய முதலீட்டை அனுமதிக்க நாடாளுமன்ற நிலைக்குழுவில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அடுத்த வாரம் இம்மசோதாவை தாக்கல் செய்யவும் மோடி அரசு தயாராகி வருகிறது. காங்கிரஸ் கட்சியும் அதற்கு உடந்தையாக உள்ளது. எனவே இதை எதிர்த்து, காப்பீட்டுத் துறையைப் பாதுகாப்போம் என்ற முழக்கத்தோடு திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வியாழக்கிழமை பகல் 1 மணியளவில் அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் திருப்பூர் கிளைச் செயலாளர் கே.ரகுநாதன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற ஊழியர்கள் மத்திய அரசின் முடிவை எதிர்த்து கண்டனம் முழங்கினர். மத்திய அரசு மேற்கொள்ளும் இந்த முடிவின் உள்நோக்கத்தை அம்பலப்படுத்தி காப்பீட்டு கழக முதல்நிலை அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் கே.ஜெயராமன், பி.சி.நரசிம்மன் ஆகியோர் உரையாற்றினர்.

0 comments: