Sunday, December 21, 2014

On Sunday, December 21, 2014 by farook press in ,    
திருப்பூர் மங்கலம் ரோட்டில் உள்ள கியாஸ் ‘பங்க்’கில் நேற்று முன்தினம் இரவு நைஜீரிய வாலிபர் கியாஸ் நிரப்ப வந்தார். அப்போது, அவருக்கும், அந்த ‘பங்க்’ ஊழியர் சுரேஷ்(வயது 25) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் அப்பகுதி பொதுமக்கள் நைஜீரிய வாலிபரை தாக்கினார்கள். இந்தநிலையில் மகாலிங்கம் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் திருப்பூர் மத்திய போலீசார் நேற்று நைஜீரிய வாலிபர் மற்றும் கியாஸ் ‘பங்க்’ ஊழியர் சுரேஷ் ஆகியோர் மீது பொதுஇடத்தில் 2 பேர் தகராறு செய்து கொண்டதாக இந்திய தண்டனை சட்டம் 160 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

0 comments: