Saturday, December 27, 2014

On Saturday, December 27, 2014 by Unknown in ,    
ஏலச்சீட்டு நடத்தி ரூ. 7 லட்சம் மோசடி செய்ததாக ஊத்துக்குளி அருகே பெண் உள்பட இருவரை திருப்பூர் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவது:
ஊத்துக்குளி விஜயமங்கலம் சாலையைச் சேர்ந்தவர் மனோகர் மனைவி சாந்தி (46), ரெட்டிபாளையம் உடையார் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியம் (55) ஆகியோர் சேர்ந்து, ரூ. 2 லட்சம், ரூ. 1.50 லட்சம், ரூ. 1.25 லட்சம், ஒரு லட்சம் ரூபாய், ரூ. 60 ஆயிரம், ரூ. 50 ஆயிரம் என மாதாந்திர ஏலச்சீட்டுகளும், வாராந்திரப் பலகாரச் சீட்டுகளும் நடத்தி வந்தனர்.
இதில், பணம் செலுத்துபவர்களுக்கு அதிக லாபம், வட்டி தரப்படும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதை நம்பி ஊத்துக்குளி அருகே சின்னத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த முத்துச்சாமிக்கவுண்டரின் மகன் தெய்வசிகாமணி(64) உள்பட பலரும் மொத்தம் ரூ.7.46 லட்சம் செலுத்தியிருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், ஏலச்சீட்டு நடத்திய அவர்கள், சீட்டுப் பணத்தை திரும்பத்தராமல் மோசடி செய்யதாக தெய்வசிகாமணி திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து சாந்தி, சுப்பிரமணியம் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

0 comments: