Wednesday, December 03, 2014

On Wednesday, December 03, 2014 by Unknown in ,    
Displaying NEWS 1.jpgDisplaying DSC_1367.JPGDisplaying DSC_1366.JPGமதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் நடைபெற்ற பல கோடி மதிப்பிலான கிரானைட் முறைகேடு விவகாரத்தில் முழுமையாக விசாரணை நடத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையிலான குழுவை அமைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டதுஇதையடுத்து மதுரை கலெக்டர் சுப்பிரமணியம் ஏற்பாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் குழு விசாரணை நடத்த ஏதுவாக முகாம் அலுவலகம் அமைக்கப்பட்டது. இந்த அலுவலகத்தில் 5 லேப்–டாப், ஜெராக்ஸ் மிஷின், மோடம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.அதிகாரிகள் கிரானைட் குவாரிகளுக்கு சென்று விசாரணை நடத்துவதற்கு வசதியாக 5 வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு நியமிக்கப்பட்டுள்ள சகாயத்திடம் மாவட்ட கனிமவள உதவி இயக்குநர் ஆறுமுகநயினார் நேற்று முன்தினம் சென்னையில் சந்தித்து உரிய ஆவணங்களை ஒப்படைத்தார். இதுவரை கிரானைட் முறைகேடு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணை தகவல்கள் அதில் இடம் பெற்றிருந்தன. அதனை முழுமையாக ஆய்வு செய்த சகாயம்,மதுரை அரசு விருந்தினர் மாளிகைக்கு வருகை தந்தார் .அவரோடு அறிவியல் தொழில் நுட்ப துறை சார்ந்த 2 அலுவலர்களும் வந்திருந்தனர் .முதல் கட்ட விசாரணையை அலுவலர்கள் அளவில் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .மேலும் வேளாண் துறை ,கால்நடை துறை ,பொதுப்பணி துறை நீர்பாசனம் ,வருவாய் கோட்ட அலுவலர் கனிம வள உதவி இயக்குநர் ஆகிய துறை சார்ந்த விசாரணைகளை நடத்தி கிரானைட் எடுத்த  சூழலில் விவசாயம் எந்த வகையில் பாதிக்கப்பட்டது என்பது குறித்தும் பொது பயன்பாட்டில் உள்ள ஏரிகள் பாதிப்பு ,மற்றும் புறம்போக்கு மற்றும் மேய்ச்சல் புறம்போக்கு ,நத்தம் புறம்போக்கு நில அளவையில் என்னென்ன நடந்தது ,மேலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஒதுக்கப்பட்ட  பஞ்சமி நிலம் ஆக்கிரமிப்பு உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்திட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது .முதல் கட்ட விசாரணை அலுவலர்கள் அளவிலும் ,தொடர்ந்து பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெறுதல் உள்ளிட்ட விசாரணைகள் நடைபெற உள்ளது .விசாரணைக்கு கால எல்லை வகுக்கப்படவில்லை .அரசினால் 11 பேர் கொண்ட குழுவும் ,அடிப்படை வசதிகளும் சகாயத்திற்கு போதுமான அளவு செய்யப்பட்டுள்ளதாக அரசு விருந்தினர் மாளிகை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன

0 comments: