Wednesday, December 03, 2014

On Wednesday, December 03, 2014 by farook press in ,    
பாரதீய ஜனதா மற்றும் இந்து முன்னணி பிரமுகர்கள் வேலூர் வெள்ளையப்பன், டாக்டர் அரவிந்த்ரெட்டி, சேலம் ஆடிட்டர் ரமேஷ், பரமக்குடி முருகன், மதுரை பால்காரர் சுரேஷ், குடியாத்தம் நகைக்கடை ஊழியர் பஞ்சாட்சரம் ஆகியோர் கொலை வழக்குகளில் தொடர்புடைய போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகிய 3 தீவிரவாதிகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் போலீசாரால் கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.இந்த கொலை வழக்குகள் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரவாதிகள் 3 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இந்த கொலை வழக்குகளின் விசாரணை பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது.
இதற்காக 3 பேரும் பலத்த போலீஸ் காவலுடன் தனித்தனி வாகனங்களில் வேலூர் சிறையில் இருந்து பூந்தமல்லி கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு வந்தனர். இதில் பாதுகாப்பு பிரச்சினைகள் இருப்பதால் 3 பேரையும் புழல் சிறையில் அடைத்து, இங்கிருந்து பாதுகாப்பாக பூந்தமல்லி கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லலாம் என சிறைத்துறை தலைவர் திரிபாதி உத்தரவிட்டார்.
இதன் அடிப்படையில், நேற்று காலை 9 மணிக்கு தீவிரவாதிகள் 3 பேரும் வேலூர் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் புழல் சிறைக்கு கொண்டுவரப்பட்டு அடைக்கப்பட்டனர்.

0 comments: