Monday, December 29, 2014

On Monday, December 29, 2014 by Unknown in ,    
உடுமலை, : இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் உதவியால் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரம் ஏக்கர் நிலங்களும். கல்லாபுரம், ராமகுளம் வாய்க்கால் பாசனத்தில் 3500 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. தற்போது பெய்த வடகிழக்கு பருவமழையால் அமராவதி அணை நிரம்பியது. இதனால் ஒன்றரை ஆண்டுகளுக்குப்பிறகு பழைய, புதிய ஆயக்கட்டுப்பகுதிகளில் 7500 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது அறுவடை நடந்து கொண்டிருக்கிறது. 
இந்நிலையில், சமீபத்தில் பெய்த புயல் மழையால் பெரும்பாலான அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முளைத்து போய் விட்டன. இதன் காரணமாக மகசூல் குறைந்து விட்டது.  இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். எனவே இரண்டாம் போக நெல் சாகுபடி செய்ய திட்டமிட்டுள்ளனர். அதற்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டுமென அதிகாரிகளை பலமுறை விவசாயிகள் கேட்டனர். ஆனால் அதற்கு இதுவரை யாரும் திருப்திகரமான பதிலை தெரிவிக்க வில்லை. மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 comments: