Wednesday, December 10, 2014

On Wednesday, December 10, 2014 by farook press in ,    
ஆந்திர மாநிலம் திருப்பதியில் இலங்கை அதிபர் ராஜபக்ஷே வருகை குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற தமிழக பத்திரிகையாளர்கள் மீது ஆந்திர காவல் துறையினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்து திருப்பூரில் பத்திரிகையாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் பத்திரிகையாளர் நலச் சங்கத்தின் சார்பில் புதன்கிழமை மாநகராட்சி அலுவலகம் காந்தி சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தலைவர் ஆர்.வி.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆந்திர காவல் துறையினரின் ஜனநாயக விரோத நடவடிக்கையை கண்டித்தும், பத்திரிகையாளர்களை தாக்கிய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும், பத்திரிகையாளர்களின் சுதந்திரமான செயல்பாட்டுக்கு பாதுகாப்பு வழங்கவும்  வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. செயலாளர் வே.தூயவன், விடுதலை மணிகண்டன் ஆகியோர் உரையாற்றினர்.
​ திரளான பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.​

0 comments: