Wednesday, December 17, 2014

On Wednesday, December 17, 2014 by Unknown in ,    
அம்மா திட்டம் மூலம் மதுரை மாவட்ட கோர்ட்டில் துப்புரவு பணிகள்: மேயர்–நீதிபதிகள் தொடங்கி வைத்தனர்மதுரை மாவட்ட கோர்ட்டில் இன்று அம்மா திட்டம் மூலம் நடந்த துப்புரவு பணியை மேயர், நீதிபதிகள் தொடங்கி வைத்தனர்.
மதுரை மாநகராட்சியை சுத்தப்படுத்தும் வகையில் அழகிய மதுரை மாநகர் (அம்மா) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மதுரை மாவட்ட கோர்ட்டில் துப்புரவு பணிகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட வக்கீல் சங்கத்தினர் மாநகராட்சியிடம் கேட்டுக் கொண்டனர்.
அதன்படி வக்கீல் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று இன்று அழகிய மதுரை மாநகர் (அம்மா) திட்டம் மூலம் மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனை மேயர் ராஜன்செல்லப்பா, மாவட்ட நீதிபதிகள் சின்னராஜ், கிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
சுமார் 100–க்கும் மேற்பட்ட மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். இவர்கள் கோர்ட்டு முழுவதும் குப்பைகளை அப்புறப்படுத்தி சுத்தம் செய்தனர். பொக்லைன், புல்டோசர் எந்திரம் மூலம் கழிவுநீர் வாய்க்காலில் குப்பைகள், கழிவுகள் அகற்றப்பட்டன.
இதுகுறித்து மேயர் ராஜன் செல்லப்பா கூறுகையில், வக்கீல் சங்கத்தினர் கேட்டுக் கொண்டதன்பேரில் இன்று கோர்ட்டு வளாகத்தில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மாதத்திற்கு ஒருமுறை இங்கு துப்புரவு பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி உதவி கமிஷனர் பழனிச்சாமி, நகர் நல அலுவலர் யசோதா மணி, வக்கீல் சங்க நிர்வாகிகள் தர்மராஜ், ராமசாமி, நெடுஞ்செழியன், அரசு வக்கீல்கள் ரமேஷ், தமிழ்செல்வம், கண்ணன், சேதுராமன், பாலசுப்பிரமணி மற்றும் வக்கீல்கள் ஜெயக்குமார், அசோகன், ரமணி, மக்கள் செய்தி தொடர்பாளர் சித்திரைவேல், ஜெயலலிதா பேரவை நிர்வாகி நிலையூர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments: