Wednesday, December 17, 2014

On Wednesday, December 17, 2014 by Unknown in ,    
திருமண உதவித்தொகை வழங்க லஞ்சம் வாங்கிய பெண் அலுவலர் கைது
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியை சேர்ந்தவர் சின்னாள் மனைவி காத்தாம்மாள் (வயது 40). இவரது மகளுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இதையொட்டி தமிழக அரசின் திருமண உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற ஊராட்சி நல அலுவலரிடம் விண்ணப்பித்து இருந்தார்.
கொட்டாம்பட்டி யூனியனில் ஊர் நல அலுவலராக பணியாற்றி வந்த நாட்டார் மங்கலத்தை சேர்ந்த பூங்கோதை (55) திருமண உதவித்தொகையாக ரூ.20 ஆயிரம் மற்றும் தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் 4 கிராம் தங்கம் வழங்க ரூ.1500 லஞ்சமாக கேட்டுள்ளார்.
இதுகுறித்து மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் காத்தாம்மாள் புகார் தெரிவித்தார். லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சுப்பிரண்டு இசக்கி ஆனந்த் மற்றும் இன்ஸ்பெக்டர் அம்ரோஷ் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி காத்தாம்மாள் ஊராட்சி நல அலுவலரிடம் ரூ.1500 பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து பூங்கோதையை கைது செய்தனர்.

0 comments: