Saturday, December 27, 2014

On Saturday, December 27, 2014 by Unknown in ,    
உடுமலை, : உடுமலை வீதியில் வாகன நெரிசல் அதிகமாக உள்ளது. அதை ஒழுங்குபடுத்த வேண்டுமென எழுந்த கோரிக்கையை அடுத்து காவல்படை அமைக்கப்பட்டுள்ளது.
உடுமலை கச்சேரி வீதியில் அரசு மருத்துவமனை. தாலுகா அலுவலகம், ஆர்.டி.ஓ அலுவலகம்., பத்திரப்பதிவு அலுவலகம் மற்றும் தலைமை தபால் நிலையம் ஆகியவை செயல்படுகின்றன. இதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு வந்து செல்கின்றனர். ஆனால் இந்த அலுவலகங்களுக்கு வரும் பெரும்பாலானோர் தங்கள் இரு சக்கர வாகனங்களை வீதியில் தாறுமாறாக நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர். 
இதனால் அந்த வழியாக மற்ற இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் தவிக்கும் நிலை அடிக்கடி ஏற்பட்டு வந்தது. நடந்து செல்வோரும் கடும் சிரமத்துக்கு ஆளானார்கள். தளி ரோட்டிலும் இதே நிலை ஏற்பட்டது. 
இதுகுறித்த செய்தி தினகரன் பத்திரிகையில் படத்துடன் வெளிவந்தது. அதையடுத்து தற்போது அந்த வீதியில் போக்குவரத்து இளைஞர் காவல்படையை சேர்ந்த 3 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் வீதியில் ரோந்து வந்து தாறுமாறாக நிறுத்தி செல்லும் வாகனங்களை பூட்டு போட்டு கைப்பற்றுகின்றனர். ஸ்பாட் பைன் வசூலித்த பிறகே வாகனங்கள் விடுவிக்கப்படுகின்றன. இந்த நடவடிக்கையால் தற்போது கச்சேரி வீதியில் போக்குவரத்து சற்று எளிதாகி உள்ளது.

0 comments: