Monday, December 29, 2014

On Monday, December 29, 2014 by Unknown in ,    
சமையல் சிலிண்டருக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகக் கூறி, அதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
பாஜக வெள்ளக்காவில் ஒன்றிய, நகர செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்கு ஒன்றியத் தலைவர் என்.தங்கவேல் தலைமை வகித்தார். நகரத் தலைவர் பி.எஸ்.மணியன்,ஒன்றிய பொதுச்செயலாளர் எஸ்.செந்தில்குமார், நிர்வாகி எம்.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர்.
இதில்,பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
வெள்ளக்கோவில் புதிய பேருந்து நிலையத்துக்கு இரவு நேரத்தில் அனைத்துப் பேருந்துகளும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ளக்கோவிலைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டாரம் உருவாக்க வேண்டும்.
வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, அரசு மருத்துவமனையாகத் தரம் உயர்த்த வேண்டும். வெள்ளக்கோவில் பகுதியில் சமையல் எரிவாயு நிறுவன விநியோகஸ்தர்கள், மத்திய அரசு நிர்ணயித்த விலையைக் காட்டிலும் எரிவாயு உருளை ஒன்றுக்கு ரூ.21 கூடுதலாக வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கின்றனர்.
இது தொடர்ந்தால் பொதுமக்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சியின் மூத்தோர் அணி நாராயணசாமி, நகரச் செயலாளர் கார்த்திகேயன், ராபர்ட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

0 comments: