Thursday, February 05, 2015

On Thursday, February 05, 2015 by farook press in ,    
திருப்பூரில் டெங்கு காய்ச்சல் பரவிவரும் சூழலில் அதைத் தடுப்பதற்காக புத்தகத் திருவிழாவில் பார்வையாளர்களுக்கு இலவசமாக நிலவேம்பு கசாயம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட், பில்டர்ஸ் அசோஷியேசன் ஆப் இந்தியாவின் திருப்பூர் மையம் இணைந்து இதற்கான ஏற்பாடுகளைச் செய்கின்றனர். திருப்பூர் அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவப் பிரிவில் பணியாற்றிய ஓய்வுபெற்ற தலைமை சித்த மருத்துவர் தலைமையிலான குழுவினர் நிலவேம்பு கசாயம் அளிக்கின்றனர்.
வியாழன், வெள்ளி, சனி ஆகிய மூன்று நாட்களுக்கு தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பார்வையாளர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை பின்னல் புக் டிரஸ்ட் தலைவர் கே.காமராஜ் வியாழக்கிழமை காலை தொடங்கி வைக்கிறார். நிலவேம்பு கசாயத்திற்கு டெங்கு காய்ச்சலை தடுக்கும் சக்தி இருப்பதால் திருப்பூர் மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும்படி புத்தகத் திருவிழா வரவேற்புக்குழுச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் தெரிவித்தார்

0 comments: