Friday, February 06, 2015

On Friday, February 06, 2015 by farook press in ,    
திருப்பூர், பிச்சம்பாளையம், ஸ்ரீநகர் பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ்குமார் (வயது 38). இவர் பி.என்.ரோட்டில் கம்ப்யூட்டர் சேல்ஸ் மற்றும் சர்வீஸ் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவரிடம் அம்மாபாளையம் சுகம் ரெசிடன்சி பகுதியை சேர்ந்த பிரசாந்த் (33) என்பவர் கடந்த 4 வருடமாக கம்ப்யூட்டர் உதிரி பாகங்களை வாங்கி பின்னர் சொந்தமாக கம்ப்யூட்டர் தயார் செய்து விற்பனை செய்து வந்தார். இதனால் ரமேஷ்குமாருக்கு பிரசாந்த் சுமார் ரூ.1 லட்சம் கடன் தர வேண்டியிருந்தது. இதுகுறித்து பல தடவை நேரிலும், போனிலும் கேட்டபோது பிரசாந்த் நாட்களை தள்ளி போட்டுக்கொண்டே வந்துள்ளார். ஆனால் இதுவரை பணம் தரவில்லை. இதேபோல் மற்றொரு ரமேஷ் என்பவருக்கும் ரூ.1.25 லட்சம் பிரசாந்த் கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் வாங்கிய வகையில் பாக்கி தர வேண்டியுள்ளது. இதன்மூலம் பிரசாந்த் இருவருக்கும் ரூ.2 லட்சத்து 28 ஆயிரத்து 525 தர வேண்டி இருந்தது. இந்தநிலையில் ரமேஷ்குமாரும், ரமேஷும் ஸ்ரீநகர் புறக்காவல் நிலையம் பகுதியில் உள்ள பேக்கரியில் நின்று பேசிக்கொண்டிருந்தபோது பிரசாந்த் அங்கு வந்துள்ளார். உடனே இருவரும் தங்களுக்கு தர வேண்டிய பணம் குறித்து கேட்டுள்ளனர். அப்போது பிரசாந்த் பணத்தை தர முடியாது என்று கூறி இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செலவராஜ் வழக்குப்பதிவு செய்து பிரசாந்தை கைது செய்து விசாரித்து வருகிறார்.
திருப்பூர், நெருப்பெரிச்சல், வாவிபாளையம் பகுதியில் உள்ள குருவாயூரப்பன் நகரில் நடுரோட்டில் ஒருவர் நின்று கொண்டு பொதுமக்களை மிரட்டி கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் அந்த நபரை பிடித்து விசாரணை செய்தார். அப்போது அவர் மீது பல வழக்குகள் இருப்பதும், அவர் பழைய குற்றவாளி என்பதும் தெரிய வந்தது. இதைதொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவன் அதே பகுதியை சேர்ந்த அசோக் (வயது 29) என தெரியவந்தது

0 comments: