Wednesday, April 01, 2015

On Wednesday, April 01, 2015 by Unknown in ,    
பொதுமக்கள் எளிதில் மருத்துவ சேவையைப் பெறும் வகையில் திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட 60 வார்டுகளிலும் மொத்தம் 85 நகர துணை சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் விவரம்:
திருப்பூர் மாநகராட்சிப் பகுதியில் தற்போது 4 நகர்நல மையங்கள், 3 மகப்பேறு மருத்துவ நிலையங்கள், 2 மருந்தகங்கள் உள்ளன. அவற்றின் உள்கட்டமைப்புகளை விரிவுபடுத்தி 17 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களாக மாற்றிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் தரமான மருத்துவ சிகிச்சையை எளிதில் பெறும் வகையில் 10 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு நகர துணை சுகாதார நிலையம் வீதம் மாநகரில் மொத்தம் 85 நகர துணை சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு அரசு மானியமாக ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நான்காவது குடிநீர் திட்டம்: குடிநீர் விநியோகத்தை சீர்படுத்தும் வகையில், முதற்கட்டமாக தேவையான இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கவும், குடிநீர் விநியோகக் குழாய்கள் பதிக்கவும், புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழகம் மூலமாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, அது இறுதிக்கட்டத்தில் உள்ளது. நிகழாண்டு அந்த திட்டத்தை நிதியுதவி மூலமாக ரூ.100 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மண்டலங்களுக்கு நிதிஒதுக்கீடு உயர்வு: தற்போது, மண்டலத்துக்கு தலா ரூ.2.50 கோடி வீதம் 4 மண்டலங்களுக்கு மொத்தம் ரூ.10 கோடி ஒதுக்கீடு என இருப்பதை உயர்த்தி, நிகழாண்டு மண்டலத்துக்கு தலா ரூ.3 கோடி வீதம் மொத்தம் ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாதாளச் சாக்கடை குழாய்கள் அமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது, முழு அளவில் பயன்பாட்டில் உள்ள திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தின்
முன்பு, உலக வங்கி நிதியுதவியுடன் ரூ. 23.30 கோடி மதிப்பில் வணிகவளாகம், வாகனங்கள் நிறுத்துமிடம், இதர வசதிகளுடன் நுழைவாயிலில் முகப்புக் கட்டுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

0 comments: